Filtered Press Release : 2019 Jul


News Image
தொழில்நுட்ப சிறப்புக்கான நவீன வசதிகள் படைத்த நிலையத்தை டோக்கியோ சீமெந்து அங்குரார்ப்பணம் செய்துள்ளது

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையம், திருகோணமலையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தில், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொழில்நுட்ப செயற்பாடுகள், R&D வசதிகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் ஆகியன அடங்கியுள்ளன. இதனூடாக உயர் தரத்தை பேணும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பு பங்களிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொழில்நுட்பச் சிறப்புக்கான நிலையத்தை, UBE இன்டஸ்ரீஸ் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி மிட்சு ஊனோ திறந்து வைத்தார். இவருடன்,

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையம், திருகோணமலையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தில், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொழில்நுட்ப செயற்பாடுகள், R&D வசதிகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் ஆகியன அடங்கியுள்ளன. இதனூடாக உயர் தரத்தை பேணும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பு பங்களிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொழில்நுட்பச் சிறப்புக்கான நிலையத்தை, UBE இன்டஸ்ரீஸ் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி மிட்சு ஊனோ திறந்து வைத்தார். இவருடன், டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் தலைமை அதிகாரி ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. ஹர்ஷ கப்ரால் கலந்து கொண்டார். இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடையே பல தசாப்த காலமாக தொடரும் நட்பையும் பங்காண்மையையும் கவனத்தில் கொண்டு, டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் அவர்களின் அழைப்பில், இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் கெனிசி ககேயா இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். பணிப்பாளர் சபையின் சகல அங்கத்தவர்களும், சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள், முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொழில்நுட்ப பங்காளரான UBE இன்டஸ்ரீஸ் லிமிடெடினால், இந்த தொழில்நுட்ப சிறப்பு நிலையத்தை நிறுவுவதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் பொறியியல் வழிகாட்டல் வழங்கப்பட்டிருந்தது. டோக்கியோ சீமெந்தின் உற்பத்தி செயற்பாடுகளுக்கு நவீன தொழில்நுட்ப உள்ளடக்கங்களுடனான ஆய்வுகூடம் மற்றும் தர உத்தரவாத வசதிகள் போன்றன இதில் அடங்கியிருந்தன.



டோக்கியோ சீமெந்து தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையத்தை ஜப்பான் UBE இன்டஸ்ரீஸ் லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி மிட்சுவோ ஊனோ மற்றும் டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. ஹர்ஷ கப்ரால் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.

நிறுவனத்தின் முழு தன்னியக்கமான உற்பத்தி செயன்முறை தொடர்பான மையப்படுத்தப்பட்ட மேலோட்டத்துக்கு நிர்வாக வசதியை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த தொழில்நுட்ப கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருந்தது. டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து தொழிற்சாலையில் காணப்படும் நான்கு சீமெந்து உற்பத்தி ஆலைகளின் உற்பத்தி செயன்முறைகளை மதிநுட்பமான வகையில் முன்னெடுப்பதற்கான நவீன மத்திய ஆணை அறை அமைந்துள்ளது. மேலும், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் இரு Biomass வலு ஆலைகளினால், முழு செயற்பாட்டுக்கும் அவசியமான புதுப்பிக்கத்தக்க சூழலுக்கு நட்பான வலு பிறப்பிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. இவற்றை மத்திய ஆணை செயற்பாட்டு பகுதியினூடாக கண்காணிக்கப்படுகின்றன. இந்த பகுதிகளை நிறுவுவதில் ஜப்பானின் ருடிந இன்டஸ்ரீஸின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோரின் தொழில்நுட்ப மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நவீன மென்பொருள் மற்றும் வன்பொருள் உட்கட்டமைப்புகளுடனான நவீன முகாமைத்துவ தகவல் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செயன்முறையில் அதிகளவு நுணுக்கத்தை செயற்படுத்தியுள்ளது.

டோக்கியோ சீமெந்து தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையத்தில் நிறுவனத்தின் சீமெந்து பரிசோதனைக்கான R&D ஆய்வுகூடங்கள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அலகுகள் போன்றன அடங்கியுள்ளன. பெருமைக்குரிய ISO17025 சான்றிதழை வென்ற இலங்கையின் முதலாவது சீமெந்து மற்றும் கொங்கிறீற் ஆய்வுகூடமாக அமைந்துள்ளது. இதில் நவீன பரிசோதனை வசதிகள் மற்றும் பகுப்பாய்வு வசதிகள் போன்றன காணப்படுகின்றமையால், டோக்கியோ சீமெந்தின் திருகோணமலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் சகல தயாரிப்புகளின் உயர் தரம் உறுதி செய்யப்படுகின்றது.



தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையத்தில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முழு உற்பத்தி செயன்முறையுடன் தொடர்புடைய தொழில்நுட்ப செயற்பாடுகள், R& னு மற்றும் தரக் கட்டுப்பாட்டு வசதிகள் போன்றன காணப்படுகின்றன.

Tசூழலுக்கு மாசு ஏற்படுவதை இயலுமானவரை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், அதன் சூழல் வினைத்திறனை மேம்படுத்தக்கூடிய பல்வேறு உள்ளம்சங்களை தனது கட்டமைப்பில் கொண்டுள்ளது. கட்டிடத்தின் கட்டடக்கலை அம்சத்தினூடாக, வலு வினைத்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. பகல் நேர செயற்பாடுகளுக்கு சூரிய ஒளியை பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், முழு கட்டிடமும் 75KW சூரிய வலு கட்டமைப்பைக் கொண்டு அமைந்துள்ளது. கட்டிடத்தில் 20m3 வரையான மழைநீர் சேகரிக்கும் வசதி காணப்படுகின்றது. இதனூடாக, அதன் சூழல் நட்புறவு மேம்படுத்தப்பட்டுள்ளது. நீர் பாவனையை குறைத்தல் மற்றும் மீள பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், 100,000 லீற்றர் கொள்ளளவுடன் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியும் காணப்படுகின்றது. பசுமையான தோற்றத்தை பேணும் வகையில், நீர்ப்பாசன கட்டமைப்பையும் கொண்டுள்ளது. இந்த பிரத்தியேகமான உள்ளம்சங்களை தனது வடிவமைப்பில் கொண்டுள்ள டோக்கியோ சீமெந்து தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையம் தற்போது GREEN® சான்றளிப்பைப் பெற்ற கட்டிடமாக திகழ்வதற்கான மதிப்பீட்டு செயன்முறையை இலங்கையின் கிறீன் பில்டிங் சம்மேளனத்துடன் மேற்கொண்ட வண்ணமுள்ளது.





தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையத்தினால் டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து தொழிற்சாலையின் கல்விசார் அறிவூட்டல் பகுதிகள் காணப்படுகின்றன.

டோக்கியோ சீமெந்து தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையம் பெரிதும் பயனுள்ள பகுதியாக அமைந்திருக்கும். 200 க்கும் அதிகமானவர்களை கொள்ளக்கூடிய இடவசதியை கொண்ட கேட்போர்கூடம், சகல வசதிகளையும் கொண்ட மாநாட்டு மண்டப வசதி போன்றன இங்கு காணப்படுகின்றன. மறைந்த ஸ்தாபக தலைவர் ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் சிறப்புக்கான நினைவுச் சுவடாக இந்த கட்டிடம் அமைந்துள்ளது. திருகோணமலையிலுள்ள டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையில் வழிகாட்டலுடனான பயண அனுபவத்தை பெற்றுக் கொள்ளவும், டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் தொடர்பான தகவல்களையும் வழங்கும். முழு வீச்சில் இயங்கும் தொழில்நுட்ப சிறப்புக்கான டோக்கியோ சீமெந்து நிலையம், சகல செயற்பாடுகளிலும் சிறப்பை எய்துவதற்கான டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

News Image
சிறுவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கி வாழ்க்கையை மாற்றியமைக்கும் – The Music Project

குருநாகல் குணானந்த மகா வித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு பாளிநகர் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்கள் வாரத்தின் இரு நாட்கள், தமது பாடசாலைகளில் மாற்றியமைக்கப்படும் இசை அறைகளில் இசைக் கருவிகள் மற்றும் பாடசாலை இசைக் கருவிகளை இசைக்கும் பயிற்சிகளை பெறுகின்றனர். முன்னர், தமது பாடசாலைகளில் இசை கல்வியை தொடர வசதியை கொண்டிருக்காத இந்த மாணவர்கள், தற்போது பாரம்பரிய இசையை இந்த அறைகளிலிருந்து தற்போது பயில்கின்றனர். இதற்கான வசதியை The Music Project ஏற்படுத்தியிருந்தது. குருநாகல் குணானந்த மகா வித்தியாலயம்

குருநாகல் குணானந்த மகா வித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு பாளிநகர் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்கள் வாரத்தின் இரு நாட்கள், தமது பாடசாலைகளில் மாற்றியமைக்கப்படும் இசை அறைகளில் இசைக் கருவிகள் மற்றும் பாடசாலை இசைக் கருவிகளை இசைக்கும் பயிற்சிகளை பெறுகின்றனர்.

முன்னர், தமது பாடசாலைகளில் இசை கல்வியை தொடர வசதியை கொண்டிருக்காத இந்த மாணவர்கள், தற்போது பாரம்பரிய இசையை இந்த அறைகளிலிருந்து தற்போது பயில்கின்றனர். இதற்கான வசதியை The Music Project ஏற்படுத்தியிருந்தது.

குருநாகல் குணானந்த மகா வித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு பாளிநகர் மகா வித்தியாலயம் ஆகியன கடந்த மூன்று வருட காலமாக ‘The Music Project’ திட்டத்தின் கீழ் இசை பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கு டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அனுசரணையை பெற்றிருந்தது. போதியளவு வசதிகளற்ற, பிள்ளைகளுக்கு இசையை கற்றுக் கொடுப்பதற்கு குறைந்தளவு வசதியைக் கொண்ட, கல்வி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

>



மாவத்தகம, ஸ்ரீ குணானந்த கனிஷ்ட வித்தியாலயத்தின் மேலேத்தேய இசை அணி, The Music Project ஆசிரியருடன் காணப்படுகின்றது.

மூன்று பாடசாலைகளில் 200க்கும் அதிகமான மாணவர்களின் இசைத்திறன் விருத்தியை ஏற்படுத்துவதற்கு இரண்டு வருட கால அனுசரணையை வழங்க டோக்கியோ சீமெந்து குழுமம் முன்வந்திருந்தது. தன்னார்வ ஆசிரியர்களை பயன்படுத்தி, அவர்களினூடாக இசை அமர்வுகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த திட்டத்தினூடாக, போட்டிகரத்தன்மையற்ற வகையில் கல்வி வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன், பெறுமதி வாய்ந்த சமூகத்தின் அங்கத்தவர்களாக கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டிருந்தது.

இதுவரையில் Music Project ஊடாக ஏழு பாடசாலைகள் இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 500க்கும் அதிகமான மாணவர்கள் இசை பயிலலில் ஈடுபட்டனர். வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த திட்டம் பெருமளவு முன்னெடுக்கப்படுவதுடன், 80 க்கும் அதிகமான பாடசாலை ஆசிரியர்களை ஈடுபடுத்தி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காலி ஆகிய மாவட்ட பாடசாலைகளின் 3000க்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளது.



முல்லைத்தீவு, பாளிநகர் மகா வித்தியாலய மார்ச் அணியினர், பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளுக்கு பிரதம அதிதிகளை வரவேற்கின்றனர்.

பெருமளவான பிள்ளைகள் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக அமைந்திருப்பதுடன், இந்த திட்டத்தினூடாக, சிறந்த முறையில் இசையை பயின்று, மாற்று தொழில்நிலைகள் மற்றும் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும். The Music Project என்பது இலவசமாக பயிற்சிகளை வழங்குவது மாத்திரமன்றி, சாதனங்களை பெற்றுக் கொடுக்கின்றது. அத்துடன், ஊக்குவிப்பு, நம்பிக்கை ஊட்டல் மற்றும் சுய ஆளுமையை மேம்படுத்தல் போன்றவற்றையும் மேற்கொள்கின்றது.

முல்லைத்தீவு, மல்லாவி, பாளிநகர் மகா வித்தியாலயத்தில் பயிலும் பிள்ளையின் தந்தையான கதிர்காமநாதன் கருத்துத் தெரிவிக்கையில், ‘எனது பிள்ளை இசை மீது கொண்டுள்ள ஈடுபாட்டை இந்த திட்டம் முழுமையாக மாற்றியமைத்திருந்தது. பாடசாலையில் போதியளவு வசதி காணப்படவில்லை, ஆசிரியரும் காணப்படவில்லை. ஆனாலும், இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு தற்போது சாதனங்கள் காணப்படுகின்றன. இசையில் அதிகளவு ஈடுபாட்டை எனது பிள்ளை காண்பிக்கின்றது. இந்த திட்டத்தை முன்னெடுக்க காரணமாக அமைந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.’ என்றார்.

குருநாகல் குணானந்த மகா வித்தியாலயத்தில் பயிலும் பிள்ளையின் தாயாரான வத்சலா தெரிவிக்கையில், ‘எனது மகள் வயலின் வாசிக்க பழகி வருகின்றாள். அவளின் முன்னேற்றத்தை காண்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த Music Project இல்லாவிடின், அவளால் முன்னேறியிருக்க முடியாது. கற்றுக் கொண்டு, அனுகூலம் பெற சிறந்த வாய்ப்பாகும். எமது பிள்ளைகளுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அமைந்திருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.’ என்றார்.

இசை கல்வியை போதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் Music Project இன் நடவடிக்கை வெற்றிகரமாக தொடர்வதற்கு Yamaha Project, JICA, UNICEF மற்றும் Plan International போன்றன தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றன. நீண்ட கால அடிப்படையில் வதிவிட இசை ஆசிரியர்களுக்கு உதவுதல் மற்றும் இசை உபகரணங்களை அன்பளிப்பு செய்தல் மற்றும் விசேட பயிற்சிப்பட்டறைகளை முன்னெடுத்தல் இசை திறமைகளை வெளிப்படுத்தல் போன்றவற்றை முன்னெடுக்கின்றது.


காப்பகம்

2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec