பரந்து விரிந்த கடல் படுக்கைகளினால் சூழப்பட்ட பூமத்திய ரேகையில் அமைந்துள்ள தனித்துவமான நிலை காரணமாக புவி வெப்பமயமாதல் விளைவுகளுக்கு நமது தீவு அதிகளவில் பாதிப்பிற்கு உட்படுகின்றது.
எமது நாடு ஓர் சிறிய தீவாக இருந்தபோதிலும் பாரிய தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான காபனீரொட்சைட் இனையே வெளியேற்றுகின்றது. இருப்பினும் இக்காலநிலை மாற்றங்களை முறையாக முகாமைத்துவப்படுத்தாவிடின் நமது தீவு பாதகமான வானிலை மற்றும் கடல் மட்டங்களின் உயர்வு போன்ற விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்.
எனவே நமது எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை மட்டுப்படுத்திக்;கொள்ள எம்மை முறையாக தயார்ப்படுத்திக்கொள்வது நாட்டின் பொறுப்புள்ள பிரஜைகளாக எமது அனைவரினதும் கடமையாகும்.
தொழில்மயமாதலுக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் கனிய வள பயன்பாடானது அதிகரிக்கும் புவி வெப்பமயமாதல் நிலைக்கு விகித அப்படையில் பாரிய அளவில் தாக்கம் செலுத்துகின்றது. அதுமட்டுமன்றி கனிய அகழ்வு மற்றும் சுத்திகரிப்பு செயற்பாடுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதுடன் வளிமண்டலத்திற்கு காபனீரொட்சைட் இனை வெளியேற்றும் முக்கிய ஆதாரமாகவும் விளங்குகின்றது. இதனால் ஏற்படும் பல மோசமான விளைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் உலகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியானது இதற்கு பொருத்தமான தீர்வாகவும், மாற்றீடாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய சீமெந்து மற்றும் கொங்ரீட் தயாரிப்பு நிறுவனமான, டோக்கியொ சீமெந்து நிறுவனம் தொலைநோக்கு பார்வையுடனான மூலோபாய நகர்வின் கீழ் மீள்புதுப்பிக்கத்தக்க உயிரி மின்வலுவினை மட்டுமே தனது அனைத்து உள்நாட்டு உற்பத்தி செயற்பாடுகளுக்கும் பயன்படுத்துகின்றது. நாம் எமது உற்பத்திகளுக்காக தன்னிறைவு எரிபொருள் தயாரிப்பினை பயன்படுத்துவதன் ஊடாக மற்றைய தொழிற்துறைகளுக்கும் முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்பதே எமது குறிக்கோளாக இருந்தது.
டோக்கியோ சீமெந்து நிறுவனமானது நாட்டில் இன்று மொத்தம் 24.6 மெகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தியின் ஒரேயொரு தனிப்பெரும் பங்களிப்பு நிறுவனமாக விளங்குகின்றது.
இது ஒவ்வொரு ஆண்டும் 112,444 மெட்ரிக் டன்; சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பச்சை வீட்டு வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படுவதை தடுப்பதற்கு சமமானதாகும். அதாவது ஒப்பீட்டளவில் பூமியை 10,830 மடங்கு தூரம் ஓர் காரினால் சுற்றி வருவதினால் அதாவது 434 மில்லியன் கிலோமீற்றர் தூரம் கார் செலுத்துவதினால் ஏற்படும் மற்றும் ஆண்டுதோறும் 23,752 பயணிகள் வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதினால் அல்லது ஒவ்வொறு ஆண்டும் 35,685 மெட்ரிக் டன்; குப்பைகளை சூழலுக்கு வெளியேற்றாமல் இருப்பின்; சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சாதக விளைவுகளை விட அதிகமானதாகும்.
எமது ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தி திட்டமானது, எமது அனைத்து உள்நாட்டு உற்பத்தி செயற்பாடுகளுக்குமான தன்னிறைவு எரிபொருள் தயாரிப்பாக இருக்க உதவியது. அதே நேரம் ஆண்டுதோறும் 60,000 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தியானது தேசிய மின்சார கட்டமைப்பிற்கு பங்களிக்கின்றது.
எமது எரிபொருள் சார்ந்த முயற்சிகள் ஓர் பெருங்கடலின் சிறுதுளி போல இருப்பினும்; இது வரை நாம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் மற்றும் அடைந்துள்ள இலக்குகள் தொடர்பாக பெருமை கொள்கின்றோம். ஏனெனில் இம்முயற்சிகள் இந்நாட்டின் எரிபொருள் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமையினாலேயே ஆகும். எமது எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான காற்றினை சுவாசிப்பதற்கும், இயற்கை வளங்களின் வளர்ச்சி மற்றும் ஆசீர்வாதத்தினை பெறுவதற்கும் ஏதுவாக நாம் மேற்கொண்ட கடின உழைப்பினை எண்ணி பெருமிதமடைகின்றோம். ஓர் நிறுவனம் என்ற வகையில் நாங்கள் எமது தேசத்தினை கட்டியெழுப்புவதில் மற்றும் வளர்ச்சியில் பூரண பங்காளியாக தொடர்ந்து செயற்படுவோம். பாதுகாப்பு எமது பெருநிறுவன முறையின் ஓர் அங்கமாகும். அதன் மூலம் எமது நாட்டினையும,; அதன் மக்களையும் மற்றும் சுற்றுச்சூழலையும் வளப்படுத்தும் எமது கடமையினை முறையாக நிறைவேற்றுகின்றோம்.