எமது இசைக்கல்வித்திட்டமானது பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள இளைஞர்களின் இசைக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனமொன்றுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதாகும். இத்திட்டமானது 2011 ஆம் ஆரம்பிக்கப்பட்டதுடன் போர் சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை இணைத்துக்கொண்டு செயல்படுகின்றது. மேலும் இசைத்துறையில் ஆர்வமுள்ள மற்றும் அதனை தொடர்ந்து பின்பற்றுவதற்கு எதிர்ப்பார்க்கும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளும் இத்திட்டதின் ஊடாக வழங்கப்படுகின்றன.


 

content image
content image

இத்திட்டமானது அம்பாறை, குருணாகலை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களை பயிற்றுவிப்பதன் மூலமாகவும், 3000 இற்கும் மேற்பட்ட இசைப்பதிவுகள் மற்றும் கற்பித்தல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலமாகவும் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு ரெக்கோடர் (சுநஉழசனநச),புல்லாங்குழல், வியோலம் (ஏழைடய) , வயலின், செலோ (ஊநடடழ) , எக்காளம் (வுசரஅpநவ ) , காகளம் (ஊடயசiநெவ) ,பிரஞ்சு ஊதுகுழல் (குசநnஉh ர்ழசn) மற்றும் உட்பட பல வகையான தாள வாத்தியங்களை வாசிப்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஆர்வமுள்ள மாணவர்கள் இத்திட்டத்தின் ஊடாக எல்லையற்ற உலக மொழியான இசையினை முழு நேர இசைப்பயிற்றுனர்கள் மற்றும் சர்வதேச தன்னார்வலர்களினால் பயிற்றுவிக்கப்படுகின்றனர். டோக்கியோ நிறுவனம் தனது “நாளைய தலைவர்களுக்கான அடித்தளத்தினை உருவாக்குதல்” என்ற கருப்பொருளின் கீழ் 2017 ஆம் ஆண்டு முதல் இரு வருடங்களுக்கு இத்திட்டத்திற்கான பங்காளராக விளங்கியது. இதன் ஓர் பகுதியாக டோக்கியோ நிறுவனம் முல்லைத்தீவு பளிங்கர் மகா வித்தியாலயத்தில் கற்கும் 20 மாணவர்களுக்கும், குருணாகலை மாவத்தகமையில் அமைந்துள்ள குணாநந்த கனிஷ்ட வித்தியாலயத்தில் கற்கும் 50 மாணவர்களுக்கும் அனுசரனை வழங்கியது.

இத்திட்டத்தின் ஊடாக பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களை உள்ளடக்கிய ஆகிஸ்ட்ரா குழு நாடு முழுவதும் பயணித்து இசை நிகழ்ச்சிகள் ஊடாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதுடன் ஒத்துழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் குழுவாக இணைந்து செயற்படுதல் போன்ற மதிப்புமிக்க வாழ்க்கைத் திறன்கள் ஊடாக அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் குருணாகலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் இடம்பெறும் இரண்டு தங்கிப் பயிலும் (சுநளனைநவெயைட Pசழபசயஅள) நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

பல தசாப்தங்களாக பல்வேறு புற காரணிகளினால் பிரிந்திருந்த இரண்டு சமூகங்கள் இசை என்னும் இணைப்பு மொழி ஊடாக மீண்டும் இதன் மூலம் இணைகின்றமை குறிப்பிடத்தக்தாகும். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் போது வடக்கு மற்றும் தென் பகுதியிலிருந்து வருகை தரும் மாணவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பேதங்களை மறந்து ஓர் சமூகமாக பணியாற்றுகின்றனா.; அத்துடன் இசைக் கோர்ப்புக்களை அவர்களுக்கிடையில் பரிமாற்றிக் கொள்வதுடன் சிறந்தவொரு இசைக்காக ஒன்றாக இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இத்திட்டத்தின் ஊடாக பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களை உள்ளடக்கிய ஆகிஸ்ட்ரா குழு நாடு முழுவதும் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அழைக்கப்படுவதுடன் இம்மாணவர்களின் இசைத்திறமையினை பரந்த பார்வையாளர்கள் முன்னிலையில் காண்பிப்பதற்கான அரிய வாய்பினை இந்நிகழ்சிகள் வழங்குகின்றதுடன் அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டுதல்களும் ஊக்குவிப்பிக்களும் எண்ணிலடங்காதவை.

content image