“டோக்கியோ சுபர்செட் ஸ்கிரீட் மோர்டர்“ என்பது நிரப்பியுடனான சீமெந்த மற்றும் இரும்பு சேர்க்கப்பட்ட கலவையாகும். தண்ணீரை மட்டுமே சேர்த்து பயன்படுத்த தயாராவுள்ள இக்கலவையை உள்ளக மற்றும் வெளியக பூச்சுக்களாக கிடையான கொங்கிரீட் அடுக்குகள், மொட்டை மாடி, நடைபாதைகள், வாகன தரிப்பிடங்கள் மற்றும் வளைவுகளில் பயன்படுத்த முடியும்.
5-20 மி.மீ தடிப்பு தளத்தில் இடப்படுவதற்காக புரிந்துரைக்கப்படுவதுடன் 25கி.கி பையினை பயன்படுத்தி 12.5 மி.மீ தடிப்புடன் 15 சதுர அடி தளத்திற்கு இட முடியும். சுபர்செட் ஸ்கிரீட் இனை தளத்தில் இட்டு மிகக் குறைந்த சேரத்தில் உலர்த்தினால் சுருக்கப்பிளவுகள் ஏற்படக்கூடும் என்பதுடன் அதிகமாக நீர் சேர்ப்பின் கலவையின் வலு குறைவடையும்.
பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்





பூசுவதற்காக தயார் செய்யும் முறை
கலவை செய்யயும் முறை

3.25 - 3.5 லீற்றர் சுத்தமான தண்ணீரை ஒரு வாளியில் ஊற்றவும்.

25 கிலோ டோக்கியோ சூப்பர்செட் ஸ்கிரீட் முழுவதுமாக வாளியினுள் இட்டு (rpm <500) வெக்கத்தில் கைக் கலப்பானில் படிப்படியாக கலக்கவும்.

3 நிமிடங்கள் வரை மிருதுவான பசைத்தன்மை வரும்வரை கலக்கவும்.

கலவையை ஓய்வு நிலையில் 2 நிமிடங்கள் வைக்கவும்.

மீண்டும் 2 நிமிடங்கள் வரை கலக்கவும்.மணல் போன்ற வேறு எந்த பொருளையும் சேர்க்க வேண்டாம், ஏனெனில் இது கலவையின் நிறையில் சமனற்ற தன்மையை ஏற்படுத்தும்.

கலவை கலந்து 1 மணி நேரத்தினுள் பயன்படுத்தவும்.
பூசும் முறை

மேற்பரப்பை கரடு முரடானதாக்கி, தூசுத்துணிக்கைகi வெக்கியும் கிளீனர் கொண்டு அகற்றவும்

ஸ்கிரீட் பூசும் முன்னர் உடனடியாக பொருத்தமான பிரைமர்ஃபொண்டிங் சேர்மானத்தை பூசவும்.

வாளியிலுள்ள டோக்கியோ சுப்பர்செட் ஸ்கிரீட் கலவையை மேற்பரப்பில் இடவும்.

கலவையை மேசன் கரண்டி அல்லது மிதவையை பயன்படுத்தி பூசவும்.

மேற்பரப்பை சமப்படுத்த மட்டப்பலகையை பயன்படுத்துங்கள்.

பரிந்துரைக்கப்பட்ட பெடிங் தடிப்பு 40mm வரை (பொண்டட் ஸ்கிரீட்க்கு)

நன்றாக உலர்ந்து கடினமானதன் பின்னர் 2-3 தினங்களுக்கு நீரை தெளிக்கவும்.
சில குறிப்புகள்

ஸ்கிரீட் மற்றும் சுவர் இடையே 5-10அஅ இடைவெளியை பேணவும். ஸ்கிரீட் மற்றும் சுவர் இடையே ஸ்டைரோஃபோம்

ஷீட் ஒன்றை உள்வைக்கவும்.ஸ்டீல் மெஷ் பிரயோகிப்பதாயின் (உயர் அடர்த்திக்கு), ஸ்டீல் மெஷ்ஷை ஸ்கிரீட்டின் மையப் புள்ளியில் வைக்கவும்.

நேரடி சூரிய ஒளி அல்லது காற்றுக்கு ஸ்கிரீட் வெளிப்படுத்தப்பட்டால், ஆவியாதல் காரணமாக பிளாஸ்ரிக் ஒடுக்க வெடிப்புகளை தவிர்ப்பதற்கு பூசிய ஸ்கிரீட்டை பொலிதீன் ஷீட்களை பயன்படுத்தி மூடவும்.