முருங்கைக்கற்பாறைகள் பூமியில் மிகவும் மாறுபட்ட இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புக்களில் ஒன்றாகும். இவை 25 வீதமான கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக காணப்படுகின்றன. அது மட்டுமல்லாது, முருங்கைக்கற்பாறைகள் கடலோரப் பாதுகாப்பு, மீன் வளம் , பொழுதுபோக்கு மற்றும் வாழ்வாதாரம் போன்ற பல முக்கியமான கடல்சார் விடயங்களுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. மேலும் பல வெப்பமண்டல கடலோர நாடுகளின் விரிவான மீன் வள அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறையினை ஊக்குவிப்பதற்கான மிகப் பெரிய காரணியாக விளங்குகின்றது.


இருப்பினும் முருங்கைக்கற்பாறைகள் பல்வேறு வகையான மனித செயற்பாடுகளினால் அழிவுக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே நாம் பல முருங்கைக்கற்பாறைத் திட்டுக்களை இழந்துவிட்டதுடன் தற்போதுள்ளவை அழியும் ஆபத்தினை கொண்டுள்ளதோடு அதிகரிக்கும் விகித அடிப்படையில் குறைந்து கொண்டும் வருகின்றன. புவி வெப்பமயமாதலினால் அதிகரித்து வரும் கடல் வெப்பநிலையானது முருங்கைக்கற்பாறை வெளுப்பு, மற்றும் அடுத்தடுத்த முருங்கைக்கற்பாறை இறப்புக்களுக்கு மிக முக்கிய காரணியாக அமைந்துள்ளதுடன் அவை முருங்கைக்கற்பாறையின் வளர்ச்சிச் சுற்றுச்சூழக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. முருங்கைக்கற்பாறை வெளுப்பு என்பது பல்வேறு புறக்காரணிகளினால் முருங்கைக்கற்பாறைகள் தனது ஆரம்ப நிறத்தினை இழந்து முற்றிலும் வெண்மையாக மாறும் செயல்முறையாகும். இது அதிகரிக்கும் கடல் வெப்பநிலை, சூரிய ஒளி மற்றும் ஆல்காக்கலினால் வழங்கப்படும் குறைவான ஊட்டச்சத்துக்களின் அளவு ஆகியவற்றினால் தூண்டப்பட்டு ஏற்படுவதாகும். இதனால் முருங்கைக்கற்பாறைகள் ஓர் தனித்துவமான நிறத்திற்கு மாற்றமடைகின்றன.


முருங்கைக்கற்பாறைகளை பாதுகாத்து மீட்டெடுப்பதினால் கிடைக்கும் நன்மைகளை நாம் புரிந்து கொள்வது அவசியமாகும் என்பதுடன் அதற்காக முறையான திட்டமிடல் செயன்முறைகளும் அவசியமாகும். இதன் மூலம் மேற்குறிப்பிட்ட முருங்கைக்கற்பாகைளின்; வளர்ச்சிக்கு பாதிப்பினை விளைவிக்கும் புற காரணிகளிடமிருந்து முருங்கைக்கற்பாறைகளை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

content image
content image

இதற்காக டோக்கியோ சீமெந்து நிறுவனம் தனது திட்டப் பங்குதாரர்களுடன் இணைந்து 2017 ஆம் ஆண்டு பவளப் பந்துகளை பயன்படுத்தத் தொடங்கியது. இதற்காக எமது முன்தயாரித்த கொன்கிரீட் தொழிற்சாலைகளிலிருந்து (சுநயனல-அiஒநன ஊழnஉசநவந pடயவெள) மறுசுழற்சி செய்யப்பட்ட கான்கிறீட் கழிவுகளை பயன்படுத்தி அரைவட்ட வடிவில் வடிவமைக்கப்பட்ட வெற்றுக் கட்டமைப்புக்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கான வாழ்விடமாகவும் கிழக்கு கடற்பரப்பில் புதிய முருங்கைக்கற்பாறைகள் வளர்வதற்கும் உதவியாக அமையும் வகையில் கடலில் இடப்பட்டது. 2017 ஆம் ஆண்டு இத்திட்டமானது முருங்கைக்கற்பாறைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு உதவும் வகையில் விஞ்ஞான ரீதியிலான ஆய்வில் கவனஞ் செலுத்தியது.


இந்த முயற்சியின் ஒரு பகுதியாக எமது கூட்டு பங்குதாரரான வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை (றுசுஊவு) சீனன் குடாவிலுள்ள இயற்கை துறைமுகத்தில் முருங்கைக்கற்பாறை வளர்ப்பு மையத்தினை அமைத்தது. அவற்றில் பல்வேறு வகையான பவள நுபின்கள் தற்போதுள்ள முருங்கைக்கற்பாறைகளில் அல்லது பவளப் பந்துகளில் நடப்படும் வரை இங்கு பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.


 

டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் ஆழமான ஈடுபாட்டுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன் எமது திட்டப் பங்காளரான இலங்கையை தளமாகக் கொண்ட ப்ளு ரிசோர்சஸ் டிரஸ்ட் (டீசுவு) கடல் சார் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அமைப்பு பாசிக்குடாவிலுள்ள காயங்கேணி கடலில்; நீண்டகால கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது. இதன் கீழ் பவளப் பந்துகளில் நடப்பட்ட முருங்கைக்கற்களின் வளர்ச்சி மட்டங்களை கண்காணித்தல், வேகமாக வளரும் வகைகளை அடையாளம் காணுதல் மற்றும் வெவ்வேறு மாறுபடும் சூழ்நிலைகளுக்கேற்ப பிற நீர்வாழ் உயிரினங்கள் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளும் மற்றும் தக்கனப்பிழைக்கும் முறை என்பவற்றை கண்காணிக்கின்றனர். 2017 ஆம் ஆண்டு முதல் சர்வதேச தரப்படுத்தலுக்கு உட்பட்ட ஆழ் கடல் ஆய்வு முறை மூலம்; மீன், பவளம் மற்றும் கணுக்காலி வகையைச் சார்ந்த கடல் வாழ் உயிரினங்களை ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் கடற்படை ஆழ் நீர் தாவும் வீரர்;களைக் (யேஎல னுiஎநசள) கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக தொடர்ச்சியாக விரிவுரைகள் மற்றும் செயல்முறை அமர்வுகளின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் ஆய்வுகள் கடல் பாதுகாப்பு குறித்த பொதுவான ஒரு கண்ணோட்டத்தினை வழங்குவதுடன் முருங்கைக்கற்பாறைகளுக்கு நிகழ்காலத்தில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் முருங்கைக்கற்பாறையின்; சூழல் அமைப்புக்கள் தொடர்பாக அதன் மூலம் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.


தேர்ந்தேடுக்கப்பட்ட கடற்படை ஆழ் நீர் தாவும் வீரர்;கள் குழுவிற்கு (யேஎல னுiஎநசள) பவளப் பந்துகளை நிறுவுதல், முருங்கைக்கற்பாறை வளர்ப்பு மையத்தினை அமைத்தல் மற்றும் பராமரிப்பது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தற்போது டோக்கியொ சீமெந்து நிறுவனத்தின் திட்டப் பங்காளர்களின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம், திருகோணமலை, காலி மற்றும் கல்பிட்டிய பிரதேசங்களில்; உள்ள கடற்படை முகாம்களின் கடலோரப் பகுதிகளில் ஆழ் நீர் தாவும் வீரர்;கள் தங்களாகவே பவளப் பந்துகளை நிறுவும் சந்தர்ப்பத்தினைப் பெற்றுள்ளனர். மேலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் நோக்குடன் இலங்கை கடற்படைக்கு நாம் தொடர்ந்தும் பவளப் பந்துகளை வழங்கி வருகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

content image
reef map image

ஆராய்ச்சி மற்றும் கல்வி

reef icon image

முருங்கைக்கற்பாறைகளை கண்காணிக்கும் நீண்டகால திட்டத்தினை நிறுவியமை.

reef icon image

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சியளிப்பதன் மூலம் அவர்களது திறன்களை மேம்படுத்தல்.

reef icon image

சமூகக்கல்வி மற்றும் கூட்டிணைந்த தூய்மைப்படுத்தல்.

எங்கள் கூட்டாளர்கள்

reef logo image
reef logo image
reef logo image
reef logo image