டோக்கியோ சீமெந்து குழுமத்தின் மொத்த விற்பனைக்குரிய சீமெந்து நாமமமாக நிப்போன் சீமெந்து ப்ரோ அமைந்துள்ளது. இது வானுயர்ந்த கட்டிடங்கள்,உறுதியான தூண்கள் மற்றும் பாரிய கட்டுமான செயற்றிட்டங்கள் போன்ற அதியுயர் தரம் மற்றும் மிகவும் உறுதியான கொங்கிரீட் ஆகியவற்றுக்கு பொருத்தமான வகையில் தயாரிக்கப்படுகின்றது.
வுதிவிட மற்றும் வணிக கட்டிடப்பகுதிகளுக்கான தேவை மற்றும் கௌ;வி அதிகரித்துள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்டளவு நிலப்பகுதிகளில் கட்டங்களை நிர்மாணிப்பதற்கான ஒரே வழி வானுயர்ந்த கட்டிடங்களை நிறுவி அதனூடாக வதிவிட தேவைகளை நிவர்த்தி செய்வதும் வளர்ந்து வரும் பொருளாதார செயற்பாடுகளை பூர்த்தி செய்வதாகும். 30 மாடிகளை விட உயர்வான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவது தற்போது சாதாரண விடயமாக அமைந்துள்ளது. தொடர்மனைகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற 50 மாடிகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கான உயர் வலிமையான( சீ 100 இற்கு மேற்பட்ட) கொங்கிரீட் ஆனது நிப்போன் சீமெந்து ப்ரோ இனை பாவித்து தயாரிக்கப்பட்டு ஒப்பந்தக்காரர்கள், அசையாச் சொத்து வடிவமைப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு வழங்கப்படுகின்றது. நிப்போன் சீமெந்து ப்ரோ ஊடாக உற்பத்தி செய்யப்படும் கொங்கிரீட் உயர் வலிமையினை வழங்குகின்றது.இதனூடாக மொத்தமாக தூண்களை நிறுவ வேண்டிய தேவை குறைக்கப்பட்டு அதனூடாக அதிகளவு இடவசதிகள் ஏற்படுத்தப்பட்டு மிகச்சிறந்த நிர்மாண முறைகளை அமைப்பதற்கான சூழலை ஏற்படுத்துகின்றது.
நிப்போன் ப்ரோ சீமெந்தின் மற்றுமொரு அனுகூலமானது, இச்சீமெந்து கொங்கிரீட்டில் நிலையான வெப்பநிலையினைப் பேணுவதால் வெப்பத்தினால் ஏற்படும் வெடிப்புக்கள் தடுக்கப்படுகின்றது. அத்துடன் கொங்கிரீட்டினை குளிர்விக்க தேவையான நீரின் அளவும் குறைக்கப்படுகின்றது. இவ்விரு காரணங்களும் பாரியளவிலான கொங்கிரீட்டுகளின் வெற்றிக்கான அடிப்படைக் காரணிகளாகும்.