Tokyo Super 2K-waterproofing coating is a two component, cementitious and acrylic waterproofing slurry which is consisting with ordinary Portland cement, graded aggregate and organic additives. This product can be used for concrete and mortar structures to prevent the water ingress.
பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்
பூசுவதற்காக தயார் செய்யும் முறை
கலவை செய்யயும் முறை
கலப்பதற்கு முன்னர், உள்ளடக்கம் B (திரவம்) நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.
உள்ளடக்கம் B (1Kg திரவம்)ஐ கலக்கும் வாளியினுள் முழுமையாக இடவும்.
கலக்கும் போது உள்ளடக்கம் A (2Kg பவுடர்) ஐ மெதுவாக வாளியினுள் சேர்க்கவும்.
இயந்திர மிக்சரில் 3 – 5 நிமிடங்கள் வரை குறைந்த வேகத்தில் கலக்கிக் கொள்ளவும் (300–400rpm).
பூசும் முறை
எண்ணெய், கிறீஸ் மற்றும் இதர மாசுகளை துப்புரவு செய்து அகற்றவும். மேற்பரப்பை நன்கு சுத்தம் செய்து, தூசை வெக்கியும் கிளீனர் கொண்டு அகற்றவும்.
பிரயோகிக்கும் முன்னர் நீர்க்கசிவை தடுக்க வேண்டிய பகுதியை தூய நீரால் கழுவிக் கொள்ளவும், தேங்கியிருக்கும் சகல நீரையும் அகற்றவும்.
கலவையை பூச பிரஷ் ஒன்றை பயன்படுத்தவும்.
முழுப் பகுதியையும் மூடும் வகையில் முதல் மேற்பூச்சை (அண்ணளவாக 0.8mm – 1mm) ஐ மேலும் கீழுமாக பூசவும்.
முதல் பூச்சு 4 – 6 மணித்தியாலங்கள் வரை உலரவிடவும்.
இரண்டாம் மேற்பூச்சை (அண்ணளவாக 0.8mm – 1mm) பக்கவாட்டாக பூசவும.
ஈரப்பதம் இழக்கக்கூடும் என்பதால் பூசிய மேற்பரப்பை சூரிய ஒளிய நேரடியாக படுவதிலிருந்தும், காற்றிலிருந்தும் பாதுகாக்கவும.
காற்றில் பதப்படுத்தல் போதுமானது.
டோக்கியோ சுப்பர் சீல் 2K waterproofing ஐ பூசிய பின்னர் ஏழு நாட்கள் கடந்தது டைல்களை பொருத்திக் கொள்ளலாம்.
சில குறிப்புகள்
சீமெந்து அல்லது இதர சீமெந்து சார் பதார்த்தங்களை இட வேண்டாம்.
பிரயோகிக்கும் தொடர் தன்மை பெறுவதற்காக கலவையினுள் மேலும் நீரைச் சேர்க்க வேண்டாம்.
பிளாஸ்டிசைசர்கள், இறுகல் மந்தமாக்கிகள், ஊக்கிகள் மற்றும் இதர ஒட்டுப்பதார்த்தங்களை சேர்க்க வேண்டாம்.
Waterproof செய்யப்பட்ட பகுதியின் மீது பாதுகாப்பு மேற்பூச்சை; பூச்சை பூசிக் கொள்ளவும்.