ஆய்வுகள் மற்றும் தீர்வுகள்

டோக்கியோ சூப்பர் மிக்ஸ் ஆனது வானுயரக் கட்டிடங்கள், நீர்த் திட்டங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் முதல் வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கான அலங்கார கொங்கிரீட் வரை பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கான மாறுபட்ட வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான கலவை வடிவமைப்புகளை வழங்குகிறது.

டோக்கியோ சூப்பர் மிக்ஸ் முன்னணி கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கட்டிட ஆலோசகர்களின் நம்பகமான தேர்வாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறது, உள்ளூர் திட்டங்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் நிலப்பரப்பை மறுவரையறை செய்யும் வெளிநாட்டு ஒத்துழைப்புத் திட்டங்களுக்கும் தனது பங்களிப்பினை வழங்குவதுடன் நாட்டின் பல திசைகளிலும்;, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்குப் பின்னால் சர்வதேச கட்டுமான நிபுணர்கள் வகுத்துள்ள சில கடுமையான வழிகாட்டுதல்களைச் சந்திக்க முடிந்த ஒரே வழங்குனர்களாக நாம் திகழ்கின்றோம்.

சாதாரண உந்துத்திறன் கொங்கிரீட்

இது கட்டுமானத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கொங்கிரீட் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் சிரமமற்ற ,நெகிழ்வான தீர்வாகும். சிறிய அளவிலான வணிக கட்டிடங்கள், வீடுகள், கல்வெட்டுகள், தொழிற்சாலை தளங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களின்; வார்ப்பு முதல் இறுதித் தளங்கள் மற்றும் குளியலறைகள் வரை மற்றும் கீழ் மட்டங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது, உந்தும் பம்பி ஊடாக செலுத்தப்படும் சாதாரண கொங்கிரீட்; சி 15 முதல் சி 45 வரையிலான வலுத் தரங்களில் கிடைக்கிறது, 20-150 மிமீ சரிவுடன், ஒரு கட்டிடத்தின் சுமார் 5 மாடிகள் வரை உந்தும் பம்பி ஊடாக கொங்கிரீட்டினை அனுப்ப முடியும்.

திட்டம் குடியிருப்பு திட்டங்கள் மற்றும் வணிக கட்டிடங்கள்
சவால்

வீட்டின் பல்வேறு பகுதிகளில் பல கான்கிரீட் தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒர் சிரமமற்ற , நெகிழ்வான தீர்வை வாடிக்கையாளர் விரும்பினார். இதில் கட்டமைப்பு கூறுகளின் வார்ப்பு , முடிக்கப்பட்ட தளங்கள் மற்றும் குளியலறைகள் ஆகியவை அடங்கும்.
தலைமுறை தலைமுறையாக நீடிக்கும் ஒரு வீட்டைக் அமைக்கும் போது அதற்காக ஒதுக்கப்பட்ட செலவுத் திட்டத்திற்குள் பணிபுரியும் திறன் மிக முக்கியமானதாகும்.

அம்சங்கள்

அடுக்குகள் மற்றும் நெடுவரிசைகள் போன்ற பொதுவான கட்டமைப்புகளுக்கு ஏற்றது. இந்த வகை கொங்கிரீட்டுகள் வலிமை தரங்கள் சி 15 முதல் சி 45 வரை, 20 -150 மிமீ சரிவுப் பம்பிகளுடன் கிடைக்கின்றது. இதனை ஒரு கட்டிடத்தின் சுமார் 5 தளங்கள் வரை செலுத்தப்பட முடியும்.
வேலைத்திறன் நடுத்தரமானதுடன் சிறிய அளவிலான வணிக கட்டிடங்கள், வீடுகள், கல்வெட்டுகள், தொழிற்சாலை தளங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களின் கீழ் நிலைகளுக்கு ஏற்றது.

அதி உந்துத்திறன் கொங்கிரீட்

குறைந்தபட்ச பிரிப்புடன் மேம்பட்ட பாய்ச்சலை வழங்குவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு வடிவமைப்பாகும் என்பதுடன் 150 மீட்டருக்கும் அதிகமான உயரங்களுக்கு கொங்கிரீட்டினை பம்ப் செய்வதை எளிதாக்குகிறது. மேலும் வலுவூட்டப்பட்ட வார்ப்பு அச்சுக்கள் ஊடாக எளிதாகப் பாய்கிறது.

திட்டம் அல்டயார்
சவால்

கொங்கிரீட்டினை அதிக உயரத்திற்கு செலுத்துவதற்கு கூடுதல் பாய்ச்சல் தேவைப்படுகிறது. எனவே, நிலையான பம்புகளைப் பயன்படுத்தி பெரிய உயரங்களுக்கு எளிதாக உந்திச் செல்ல மூலப்பொருட்கள் மற்றும் கலவைகளின் சரியான கலவையை தீர்வு கொண்டு செல்ல வேண்டும்.

அம்சங்கள்

குறைந்தபட்ச பிரிப்புடன் அதிகபட்ச பாய்ச்சலை வழங்குவதற்காக இந்த வடிவமைப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது கொங்கிரீட்டினை 150 மீட்டருக்கு மேல் உயரத்திற்கு பம்ப் செய்வதை எளிதாக்குகிறது. மேலும் 225 மிமீ சரிவு மற்றும் 450-600 மிமீ சரிவு ஓட்டத்துடன் வலுவூட்டப்பட்ட வார்ப்பு அச்சுக்கள் ஊடாக எளிதாகப் பாய்கிறது.
திட்டத்தின் கால அளவு மற்றும் செறிவினைப் பொறுத்தவரை, தேவையான மொத்த கொங்கிரீட் அளவுகளை சரியான நேரத்தில் வழங்குவதற்கான திறன் இத் திட்டத்தை மேற்பார்வையிடும் வெளிநாட்டு ஆலோசகர்களால் நிர்ணயிக்கப்பட்ட முக்கிய வழங்குனர்; மதிப்பீட்டு அளவுகோல்களாகும். நவீன பம்ப் கார்கள் மற்றும் மொத்தமாக கலக்கும் லாரிகளின் மிகப்பெரிய பன்னூர்தி வலையமைப்பு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மற்றவர்களைக் காட்டிலும் எங்களை தனித்துவமாகக் காட்டியது.

அடித்தள கொங்கிரீட்

இவ்வகுப்பானது குறிப்பாக 180 மிமீ - 220 மிமீ இறக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுடன் அடித்தளங்களுக்கு மிகவும் பொருத்தமானது. அவை வழக்கமாக ‘டிரிமி பைப்புகள்’ மூலம் இடப்படுவதுடன் அதற்காக கூடுதல் பாய்ச்சல் தேவைப்படுகின்றது.

திட்டம் ஹெவ்லொக் சிட்டி
சவால்

பைலிங் பணிக்கான முக்கிய தேவைகளில் ஒன்றான மென்மையான பாய்ச்சல் தன்மையாகும்.இது போர்ஹோலின் ஒவ்வொரு மூலையையும் கொங்கிரீட்டினை அடைய அனுமதிக்கிறது, இது பொதுவாக இரும்பு வலுவூட்டல் கூண்டுடன் சரி செய்யப்படுகிறது. பைலிங் செய்வதற்கு நீண்ட காலம் தேவை என்பதால், பைலிங் கட்டத்தின் முழுப்பகுதியிலும் ஒரே மாதிரியான கலவை வடிவமைப்பை பராமரிப்பது மிகவும் முக்கியம்.

அம்சங்கள்

இவ் வடிவமைப்பானது 180 மிமீ - 220 மிமீ இறக்கத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது அடித்தளங்களுக்கு மிகவும் பொருத்தமானது, அவை வழக்கமாக ‘டிரிமி பைப்புகள்’ மூலம் இடப்படுவதுடன் அதற்காக கூடுதல் பாய்ச்சல் தேவைப்படுகின்றது. பிரிக்கப்படாத ஒரேவிதமான கலவை மற்றும் தளத்தின் கடைசி டிரக்கை அடையும் வரை முதல் டிரக்கின் சரிவினை தக்கவைத்தல் போன்ற முக்கிய பண்புகள் சரியான திரட்டிகளையும் கலவைகளையும் பயன்படுத்துவதன் மூலம் அடையப்படுகின்றன. இலங்கையில் பொதுவாக பயன்படுத்தப்படும் குவியல்களின் விட்டம் 600 மிமீ முதல் 2000 மிமீ வரையிலும், 25 மிமீ முதல் 45 மீ வரையான ஆழத்திலும் இருக்கும். பொதுவாக பயன்படுத்தப்படும் வலுத்தரங்கள் சீ30 முதல் சீ 50 வரை இருக்கும்.

அதியுயர் வலு கொண்ட கொங்கிரீட்

உயரமான கட்டிடங்களின் மொத்த கட்டமைப்பின் எடை காரணமாக கீழ்த்தளங்களில்; உள்ள நெடுவரிசைகள் கணிசமான அளவு பெரியதாக மாறும். ஆனால் இடத்தை அதிகரிக்கவும் தளத்தின் தோற்றத்தினை மேம்படுத்த வேண்டியதன் காரணமாக நெடுவரிசைகளின் அளவைக் குறைக்க வேண்டி ஏற்படுகின்றது. இதனால் வலுவான மற்றும் பல்துறை திறன் கொண்ட அதியுயர் வலு கொண்ட கொங்கிரீட் தேவைப்படுகிறது. இத் தேவையை சீ 70 மற்றும் சீ 85 போன்ற அதி-உயர்-வலுத் தரங்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

திட்டம் கீல்ஸ் சிட்டி-சினமன் லைப்
சவால்

உயரமான கட்டிடங்களின் மொத்த கட்டமைப்பின் எடை காரணமாக கீழ்த்தளங்களில்; உள்ள நெடுவரிசைகள் கணிசமான அளவு பெரியதாக மாறும். இது கீழ் மட்டங்களில் பரந்த இடம் கிடைப்பதனை தடுக்கின்றது. பொதுவாக அவை வாகனத்தரிப்பிடம் அல்லது வணிக வளாகங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றது. இடத்தை அதிகரிக்கவும் தளத்தின் தோற்றத்தினை மேம்படுத்த வேண்டியதன் காரணமாக நெடுவரிசைகளின் அளவைக் குறைக்க வேண்டி ஏற்படுகின்றது. இதனால் வலுவான மற்றும் பல்துறை திறன் கொண்ட அதியுயர் வலு கொண்ட கொங்கிரீட் தேவைப்படுகிறது. இத் தேவையை சீ 70 மற்றும் சீ 85 போன்ற அதி-உயர்-வலுத் தரங்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

அம்சங்கள்

இன்று வரை டோக்கியோ சூப்பர்மிக்ஸ் மட்டுமே இலங்கையில் வலுத் தரங்களான சி 70 மற்றும் சி 85 ஆகிய இரண்டையும் அடையக்கூடிய ஒரே கொங்கிரீட் ஆகும், மேலும் இதுவே இத் திட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரே வழங்குனராக மாறுவதற்கான வெற்றிகரமான அளவுகோலாகும்.

உயர்ந்த வலுப் பெறும் பண்புகளைக் கொண்ட நிப்போன் சீமெந்த ப்ரோ ஓபிசி சீமெந்தின் வலுவிற்கு நீரைக் குறைக்கும் பொலி கார்பாக்சிலிக் ஈதர் வகை கலவை மற்றும் கொங்கிரீட் வடிவமைப்பில் உள்ள பிற கூறுகளும் முக்கிய பங்களிப்பினை வழங்கும் காரணிகளாகும். அத்தகைய தரங்களுக்கான நவீன சோதனை இயந்திரங்கள் டோக்கியோ சூப்பர்மிக்ஸ் ஆய்வகங்கள் மற்றும் வேறு சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன என்பதுடன் அவை வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான நமது திறனை உறுதிப்படுத்துகின்றன.

உயர் ஆரம்ப நிலை வலுக் கொங்கிரீட்

இந்த சிறப்பு கலவை வடிவமைப்பு ஆரம்ப வலுவைப் பெறுவதுடன் மற்றும் பிந்தைய இறுகும்; செயல்முறையுடன் அச்சுக்களை முன்கூட்டியே அகற்றுதல், அச்சுக்களை இடையில் மாற்றுவது போன்றவற்றை செயல்படுத்துகிறது.

திட்டம் கீல்ஸ் சிட்டி-சினமன் லைப்
சவால்

அடுக்குகள், ப்ரீகாஸ்ட் கர்டர்கள், ஸ்லிப்-ஃபார்ம் கட்டுமானம் மற்றும் இன்-சிட்டு பிரிட்ஜ் கிர்டர் கட்டுமானங்கள் ஆகியவற்றின் பிந்தைய இறுக்க செயல்முறை ஆரம்ப வலு பெற தேவையானதாகும்.

அம்சங்கள்

இந்த சிறப்பு கலவை வடிவமைப்பு ஆரம்ப வலுவைப் பெறுவதுடன் மற்றும் பிந்தைய இறுகும்; செயல்முறையுடன் அச்சுக்களை முன்கூட்டியே அகற்றுதல், அச்சுக்களை இடையில் மாற்றுவது போன்றவற்றை செயல்படுத்துகிறது.
சீமெந்தின் தரம் , நீர் மற்றும் சீமெந்தின் விகிதாசாரம் போன்ற காரணிகள் மீள் இறுக்கத்தினை அடைவதற்கு தேவையான முக்கிய வலுவினை அடைய பங்கு வகிப்பதுடன் அச்சுக்களை பொதுவாக 02 நாட்களுக்கு பிறகு மற்றும் ஸ்லிப் அச்சுக்களை ஒரு மணி நேரத்திற்கு 15-20 செ.மீ என்ற விகிதத்தில் நகர்த்துவதற்கு உதவுகின்றது. இது கட்டுமான அடுக்கின் குறுக்கு விட்டங்களின் அளவினைக் குறைத்து முழு கட்டமானத்தின் அளவினை இயன்றளவு குறைப்பதுடன் தொடர்ச்சியாக கொங்கிரீட் இடும் செயல்முறையை எளிதாக்குகின்றது.

நீடித்து உழைக்கக்கூடிய கொங்கிரீட்

நீடித்து உழைக்கக்கூடிய கொங்கிரீட் சல்பேட் மற்றும் குளோரைடு மற்றும் குறைந்த நீர் உறிஞ்சுதல் போன்ற தேவைகளுக்கு பொருத்தமானது. மேலும் பொதுவாக சதுப்பு நிலம் அல்லது கடல் போன்ற கடுமையான சூழல்களுக்கு நிபுணர்களினால் பரிந்துரைக்கப்படுகிறது.

திட்டம் ஐ.டீ.சி ஹோட்டல்
சவால்

கொழும்பு கடற்கரை மற்றும் பொதுவாக கொழும்பு நகரத்தில் மேற்கொள்ளப்படும்; கட்டமைப்புகளிற்கு நீடித்து உழைக்கக்கூடிய கொங்கிரீட் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன. நீடித்து உழைக்கக்கூடிய கொங்கிரீட் சல்பேட் மற்றும் குளோரைடு மற்றும் குறைந்த நீர் உறிஞ்சுதல் போன்ற தேவைகளுக்கு பொருத்தமானது. மேலும் பொதுவாக சதுப்பு நிலம் அல்லது கடல் போன்ற கடுமையான சூழல்களுக்கு நிபுணர்களினால் பரிந்துரைக்கப்படுகிறது.

அம்சங்கள்

நீடித்து உழைக்கக்கூடிய கொங்கிரீட் இல் உள்ள இரசாயனங்கள்; மற்றும் நீர் எதிர்ப்பு சக்தியானது டோக்கியோ சூப்பர் பிளஸ் அல்லது எரி சாம்பல் கலவையைப் பயன்படுத்துவதாலும் மற்றும் சிறப்பு கலவை வடிவமைப்புகளில் சிலிக்கா ஃபியூம் மற்றும் சீமைக்காiர் (ஜிஜிபிஎஸ்) போன்ற பிற பொருட்களைப் பயன்படுத்துவதாலும் கிடைக்கின்றது. இந்த வடிவமைப்புகள் குளோரைடு ஊடுருவல் மற்றும் சல்பேட் தாக்குதலை எதிர்க்கும் அடர்த்தியான நெருக்கமான மற்றும் நிரம்பிய கொங்கிரீட் கட்டமைப்பை அளிக்கின்றன.
டோக்கியோ சூப்பர்மிக்ஸ் ஆய்வகங்கள் இரசாயன பண்புகள் தொடர்பான சான்றுகளை அளிக்க தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக இப்பரிசோதனைகளை செய்ய ஒரேயொரு அரச பல்கலைக்கழகம் மட்டுமே உள்ளது.

இலகுரக கொங்கிரீட்

செயல்பாட்டுத் தேவைகளை அடைவதற்கு, தரை மட்டங்களை உயர்த்துவதற்காக அல்லது கூடுதல் எடையின் சுமை இல்லாமல் தனித்துவமான கலைநயத்தினை பராமரிக்க , குறிப்பாக ஹோட்டல் மற்றும் அடுக்குமாடி வீட்டுத்தொகுதி போன்ற கலப்பு அபிவிருத்தி தளங்களின் கட்டமைப்பு வெற்றிடங்களை நிரப்ப பொதுவாகப் பயன்படுகிறது. மிகக் குறைந்த அடர்த்தியை (600 - 1200 கி.கி ஃ எம்3) அடையப் பயன்படுத்தப்படும் தனித்துவமான நுரை கலத்தல் நுட்பம், இதுவரை டோக்கியோ சூப்பர்மிக்ஸ் மூலமாக மட்டுமே உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திட்டம் சைனா ஹாபர் அமைத்த ஷங்கரி லா ஹோட்டல் மற்றும் ஷங்கரி லா டவர்ஸ்
சவால்

இந்த குறிப்பிட்ட திட்டங்கள் உயர் அல்லது தனித்துவமான அழகியல் கலைநயத்தினை பராமரிக்க முயன்றதுடன் உள்ளமைக்கப்பட்ட சிறப்பு கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டிருந்தன, அவை கூடுதல் எடையின் சுமை இல்லாமல் அடிப்படை கட்டமைப்பில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது.குறிப்பாக உயர் தளங்களில் அமைந்துள்ள சமையலறைகள் மற்றும் நீச்சல் குளங்களை உள்ளடக்கிய ஹோட்டல் மற்றும் அடுக்குமாடி வீட்டுத்தொகுதி; போன்ற கலப்பு-மேம்பாட்டு தளங்களில், பல்துறை மற்றும் இலகுவான சிறப்பு கட்டமைப்பு மாற்றங்கள் தேவை.

அம்சங்கள்

செயல்பாட்டுத் தேவைகளை அடைவதற்கு , தரை மட்டங்களை உயர்த்துவதற்கு மற்றும் நிரப்புதல் தேவைப்படும் கட்டமைப்புகளில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடை குறைந்த கான்கிரீட் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மிகக் குறைந்த அடர்த்தியை (600 - 1200 கி.கி ஃ எம்3) அடையப் பயன்படுத்தப்படும் தனித்துவமான நுட்பம் இதுவரை டோக்கியோ சூப்பர்மிக்ஸ் மூலம் மட்டுமே அடையப் பெற்றுள்ளது. இத் தனியுரிம நுரை கலக்கும் தொழில்நுட்பம் மற்றும் பின்பற்றப்பட்ட செயல்முறையே இச் சாதனையை எட்டுவதற்கு வழிவகுத்தது.

வெப்பநிலை கட்டுப்பாட்டு கொங்கிரீட்

தடிமனான கரடுமுரடான அத்திவாரங்கள் , பெரிய அளவிலான நெடுவரிசைகள் மற்றும் குறுக்கு விட்டங்கள் போன்ற கட்டமைப்புக் கூறுகளில் ஆலோசகரின் அறிவுரைப்படி வெப்பநிலையானது 72-75 டிநடழற ஊ க்கு கீழே பராமரிக்கப்பட வேண்டும். குறைந்த வெப்பநிலை கொங்கிரீட்டினை உருவாக்குவதற்கு மற்றும் துல்லியமான கலவையை அடைய அனைத்து மூலப்பொருட்களினதும் வெப்பநிலைக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. அதற்காக அதிக திறன் கொண்ட நீர் குளிரூட்டிகள், பனி நசுக்கும் இயந்திரங்கள், உறைவிப்பு கொள்கலன்களுடன் விஞ்ஞான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவு போன்ற குறிப்பிட்ட துணை விடயங்களுடன் மூலப் பொருட்கள் சரியான கலவையைப் பயன்படுத்த வேண்டும். அதிநவீன இயந்திரங்கள்; பொருத்தப்பட்ட தொழிற்சாலைகளில் டோக்கியோ சூப்பர்மிக்ஸ் 26°C க்கும் குறைவான வெப்பநிலையை அடைந்துள்ளது.

திட்டம் ஸ்படோடியா அடுக்கு மாடிக்குடியிருப்பு
சவால்

தடிமனான கரடுமுரடான அத்திவாரங்கள் , பெரிய அளவிலான நெடுவரிசைகள் மற்றும் குறுக்கு விட்டங்கள் போன்ற கட்டமைப்புக் கூறுகளில் ஆலோசகரின் அறிவுரைப்படி வெப்பநிலையானது 72-75 டிநடழற ஊ க்கு கீழே பராமரிக்கப்பட வேண்டும்.

அம்சங்கள்

குறைந்த வெப்பநிலை கொங்கிரீட்டினை உருவாக்குவதற்கு திரட்டு;, கரடுமுரடான திரட்டு , நீர் மற்றும் சீமெந்து போன்ற அனைத்து மூலபொருட்களின் வெப்பநிலைக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. இத்தகைய கலவை வடிவமைப்புகளுக்கு விஞ்ஞான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவு ஆகிவற்றுடன் மூலப்பொருட்கள் மற்றும் கலவைகளின் சரியான கலவையுடன் மூலப்பொருட்களின் வெப்பநிலைக் கட்டுப்பாட்டைப் பராமரிக்க இயந்திரவியல் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த துல்லியமாக இயக்கப்படும் தீர்வு கலவையை அடைய அதிக திறன் கொண்ட நீர் குளிரூட்டிகள், பனி நசுக்கும் இயந்திரங்கள் மற்றும் உறைவிப்பான் கொள்கலன்கள் போன்ற குறிப்பிட்ட துணை உபகரணங்கள் அவசியமாகும். அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட டோக்கியோ சூப்பர்மிக்ஸ் மேலே குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களைப் போல் சில திட்டங்களுக்கு 26°C க்கும் குறைவான வெப்பநிலையை அடைந்துள்ளது.

குளிர் சேமிப்பு கொங்கிரீட்

ஏற்ற இறக்கமான வெப்பநிலை காரணமாக கொங்கிரீட் இல்; விரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் திறன் கொண்ட ஒரு சிறப்பு கலவை வடிவமைப்பாகும். (அதாவது குளிர் சேமிப்பு வசதி). எரி சாம்பல் கலத்தல் மற்றும் பிற சிறப்புப் பொருட்களின் பயன்பாடு மற்றும் உறைந்த , கரைந்த சுழற்சிகளின் மாறுபட்ட கோரிக்கைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது, மேலும் நீர் உறைபனி காரணமாக திடீர் விரிவாக்கம் அல்லது சுருக்கத்தைத் தாங்கும் திறன் கொண்டது.

திட்டம் சீ.ஐ.சீ குளிர் சேமிப்பு கட்டிடத்தொகுதி -பன்னல
சவால்

இந்த கட்டமைப்பிற்கான முக்கிய தேவை ஒரு பொதுவான குளிர் சேமிப்பு வசதிக்குள் ஏற்படும் ஏற்ற இறக்கமான தீவிர வெப்பநிலையின் காரணமாக கொங்கிரீட் விரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் திறனாகும்.

அம்சங்கள்

எரி சாம்பல் கலத்தல் மற்றும் பிற சிறப்புப் பொருட்களின் பயன்பாடு மற்றும் உறைந்த , கரைந்த சுழற்சிகளின் மாறுபட்ட கோரிக்கைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது, மேலும் நீர் உறைபனி காரணமாக திடீர் விரிவாக்கம் அல்லது சுரக்கத்தைத் தாங்கும் திறன் கொண்டது.

சுருங்காத கொங்கிரீட்

காற்றுப் பொறிகளைத் தவிர்ப்பதற்கு சிறந்த பிணைப்பை அனுமதிக்கும் சிறப்பு பண்புகளைக் கொண்ட ஒரு கொங்கிரீட் வடிவமைப்பாகும். நீண்ட மட்டமான மாடிகளில் வெடிப்புக்கள் உருவாவதைத் தவிர்க்க சுருக்கத்தைக் குறைக்க வேண்டும். எனவே உருக்கு இழை கொங்கிரீட் கலக்கப்படுகிறது, ஏனெனில் உருக்கு கம்பி; பயன்பாடு வெடிப்பு உருவாவதற்கு வழிவகுக்கும்.

திட்டம் DSI Warehouse – Weligama
சவால்

நீண்ட மட்டமான மாடிகளில் வெடிப்புக்கள் உருவாவதைத் தவிர்க்க சுருக்கத்தைக் குறைக்க வேண்டும்.

அம்சங்கள்

கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் பொருத்தமான கலவையுடன் செய்யப்பட்ட இந்த கலவை வடிவமைப்பு சிறப்பு பண்புகளைத் தருகின்றது. இது காற்று பொறிகளைத் தவிர்க்க கொங்கிரிட்டில்; சிறந்த பிணைப்பை அனுமதிக்கிறது. உருக்குக் கம்பி பயன்பாடு வெடிப்புக்களை உருவாவதற்கு வழிவகுக்கும் என்பதால் இக் கொங்கிரீட் உருக்கு இழையுடன் கலக்கப்படுகிறது.

சுயமாக இறுகும் கொங்கிரீட்

ரீபார் மேட்ரிக்ஸில் உள்ள இடைவெளிகளில் இலகுவாக பாயும் ஓர் கொங்கிரீட் ஆகும். போக்கர் அதிர்வுக்கான தேவையை நீக்கி, அச்சுக்கள் ஊடாக இடைத்துளைகளற்ற கட்டமைப்பை உருவாக்கும். மேலும் தொழிலாளர் உழைப்பின் மீது தங்கியிருக்கும் நிலையினைக் நீக்கி தளங்கள் மற்றும் அடுக்குகளில் சுருக்கிக் கொள்ள எடுக்கும் நேரத்தைக் குறைக்கிறது.

திட்டம் எவிக் அஸ்டோரியா
சவால்

வலுவூட்டும் உருக்குக் கம்பிகளைக் கொண்ட சில கட்டமைப்புக் கூறுகளில் கொங்கிரீட் இடும் போது கூடுதல் உந்து செயற்பாடு தேவைப்படுகிறது, இது அதிக நேரம் மற்றும் உழைப்பு தேவைமிக்க செயல்முறையாகும், இது ஒட்டுமொத்த திட்ட செயற்றிறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அம்சங்கள்

இது கரடுமுரடான திரட்டுகள் மற்றும் பொருத்தமான கலவைகளின் வேறுபட்ட கலவையைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட சுயமாக இறுகும் கொங்கிரீட் என்பதுடன் மனித உழைப்பின் மீதான அதிக சார்புநிலையைத் தவிர்க்க உதவுகிறது. மேலும் தளங்கள் மற்றும் அடுக்குகளின் சுருக்கத்திற்காக கைகளினால் மேற்கொள்ளப்படும் பணி நேரத்தை குறைக்கிறது. ரீபார் மேட்ரிக்ஸில் உள்ள இடைவெளிகளில் இலகுவாக பாயும் ஓர் கொங்கிரீட் ஆகும். போக்கர் அதிர்வுக்கான தேவையை நீக்கி, அச்சுக்கள் ஊடாக இடைத்துளைகளற்ற கட்டமைப்பை உருவாக்கும்.
வி-புனல் ஃ ஸ்லம்ப் ஃப்ளோ மற்றும் ஜே-ரிங் ஃ எல்-பாக்ஸ் இயந்திரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிரப்புதல் திறன் மற்றும் தேர்ச்சிச் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வேலைத்திறன் அளவிடப்படுகிறது. பிரித்தறியும் தடுக்கும் அற்றல் என்பது மேற்கணட பரிசோதனைகளின் போது மேற்பார்வையிடப்படும் மற்றுமொரு அம்சமாகும்.

அரிப்பு வினைத்தடுப்பி கொங்கிரீட்

கட்டுமானத்தின் நீண்ட ஆயுளைப் பராமரிப்பதற்காக கட்டுமானத்தின் அரிப்பு எதிர்ப்பை கணிசமாக மேம்படுத்துவதற்காக நீடித்த கொங்கிரீட் வடிவமைப்பில் சிறப்பு அரிப்பு தடுப்பான்கள் சேர்க்கப்படுகின்றன.

திட்டம் புதிய அமெரிக்க தூதரக கட்டிடத் தொகுதி- கொழும்பு
சவால்

அமெரிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட புதிய பல் தொகுதி அலுவலக வளாகம் பொறியியல், நிலைத்தன்மை மற்றும் கட்டுமான செயலாக்கத்தில் அமெரிக்க ஒழுங்குமுறை தேவைகளுக்கு ஏற்ப கடுமையான தரங்களுக்கு அமைய அமைக்கப்பட வேண்டும். இந்த திட்டம் ரு.ளு. புசநநn டீரடைனiபெ ஊழரnஉடை கழச டுநயனநசளாip in நுநெசபல யனெ நுnஎசைழnஅநவெயட னுநளபைn (டுநுநுனு®) பசுமை கட்டிட மதிப்பீட்டு அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் லீட் இன் சில்வர் அந்தஸ்தைப் பெறவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மத்திய கொழும்பிலுள்ள கடற்பரப்பிற்கு அண்மையில் அமைக்கப்படவதினால், கட்டுமானத்தின் நீண்ட ஆயுளைப் பராமரிக்க கட்டிடத்தின் அரிப்பு எதிர்ப்பு தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது

அம்சங்கள்

செயற்கை மணல் கலந்த சீமெந்து அடிப்படையிலான கலவை வடிவமைப்பு பி.சி.இ கலவைப் பொறிமுறையைப் பயன்படுத்துகிறது. டோக்கியோ சூப்பர் கட்டுமானத்திரட்டு தர உறுதிப்படுத்தப்பட்ட செயற்கை மணல் மூலப்பொருட்கள் நிலைத்தன்மையை பராமரிக்க பயன்படுத்தப்பட்டது. கொங்கிரீட் இன் குறிப்பிட்ட நிலைப்பண்புகளை பராமரிக்க இரவு நேரங்களில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.

நீர்க்காப்பு கொங்கிரீட்

மிகக் குறைந்த நீர் - சீமெந்து விகிதத்தை பராமரிக்கும் வடிவமைப்பினைப் பெறுவதற்காக மூலப்பொருட்களுடன் ஹைட்ரோபோபிக் மூலப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது அடர்த்தியான மற்றும் குறைந்த நீர்-ஊடுருவக்கூடிய கொங்கிரீட்டினை உருவாக்குகிறது, இது பொதுவாக தரைமட்ட கட்டமைப்புகள் மற்றும் நீர் தொட்டிகளுக்கு கீழே பயன்படுத்தப்படுகிறது.

திட்டம் எலி ஹவுஸ் நீர்த்தொட்டி- மோதரை
சவால்

நீர்க்காப்பு என்பது எந்தவொரு கட்டிடத்தினதம் மிகவும் பொதுவான தேவைகளில் ஒன்றாகும். இத் தேவை நீர் தொட்டிகள், நீச்சல் குளங்கள் மற்றும் அடித்தளங்களுக்கு அதிக முன்னுரிமை பெறுகின்றது.

அம்சங்கள்

மிகக் குறைந்த நீர் - சீமெந்து விகிதத்தை பராமரிக்கும் வடிவமைப்பினைப் பெறுவதற்காக மூலப்பொருட்களுடன் ஹைட்ரோபோபிக் மூலப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது அடர்த்தியான மற்றும் குறைந்த நீர்-ஊடுருவக்கூடிய கொங்கிரீட்டினை உருவாக்குகிறது, இது பொதுவாக தரைமட்ட கட்டமைப்புகள் மற்றும் நீர் தொட்டிகளுக்கு கீழே பயன்படுத்தப்படுகிறது.

நீரடி கொங்கிரீட்

இது ஒர் வகை சிறப்பு கொங்கிரீட் தீர்வாகும். வழக்கமாக உருக்கு உறை வழியாக வைக்கப்படுவதுடன் கொங்கிரீட்; கழுவிச் செல்லும் எதிர்ப்பு பண்புகளை வழங்குகிற மற்றும் குழைம நிலையை மாற்றியமைக்கும் முகவர்களால் செறிவூட்டப்படுகிறது.

திட்டம் மீன்பிடித் துறைமகம்- திக்ஓவிட
சவால்

நீருக்கடியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு, கொங்கிரீட் கொட்டும் பணியின் போது புதிய கொங்கிரீட் உடன் நீர் இணையும் போது சீமெந்து மற்றும் நுண்ணிய துகள்கள் கழுவப்படுவதைத் தடுப்பதே முக்கிய சவாலாகும். இதற்கு பல்வேறு நீர் உப்புத்தன்மை நிலைகளைத் தாங்கக்கூடிய வேதியியல் அம்சங்களுடன் அதிகளவு பிணைப்பு தேவைப்படுகிறது.

அம்சங்கள்

இச் சிறப்பு வகை சிறப்பு கொங்கிரீட் தீர்வானது வழக்கமாக உருக்கு உறை வழியாக வைக்கப்படுவதுடன் கொங்கிரீட்; கழுவிச் செல்லும் எதிர்ப்பு பண்புகளை வழங்குகிற மற்றும் குழைம நிலையை மாற்றியமைக்கும் முகவர்களால் செறிவூட்டப்படுகிறது.

வர்ண கொங்கிரீட்

வர்ண கொங்கிரீட் ஆனது சரியான மூலப்பொருட்கள்;, கலவைகள் மற்றும் வர்ண நிறமிகளின் சரியான கலவையைச் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகின்றது. பின்னர் மேற்பரப்பு வைர வெட்டு சக்கரங்களைப் பயன்படுத்தி வெட்டப்பட்டு மெருகூட்டப்படுகிறது. இதன் மூலம் மெழுகுப்பூச்சு அல்லது சீலண்ட் பயன்பாடு தேவையற்ற மற்றும் பராமரிப்பு தேவையற்ற தரை கிடைக்கின்றது.

திட்டம் ஹட்டன் நெஷனல் வங்கி – நிட்டம்புவ
சவால்

தற்கால அலுவலகங்களின் உள்துறை வடிவமைப்பு அல்லது வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களின் இடங்களுக்கு ஒர் அலங்கார மற்றும் வண்ணமயமான கொங்கிரீட் பூச்சு அலங்காரத்தினை இடுவது வாடிக்கையாகியுள்ளது. வர்ணக் கொங்கிரீட் மூலம் அடுக்குகளை அமைக்கும் போது பராமரிப்பற்ற வர்ணத் தளங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அம்சங்கள்

மேற்பரப்பு வைர வெட்டு சக்கரங்களைப் பயன்படுத்தி வெட்டப்பட்டு மெருகூட்டப்படுகிறது. இதன் மூலம் மெழுகுப்பூச்சு அல்லது சீலண்ட் பயன்பாடு தேவையற்ற மற்றும் பராமரிப்பு தேவையற்ற தரை கிடைக்கின்றது. இது பாராமரிப்பு தேவையற்ற மற்றும் தண்ணிர் மட்டுமே கொண்டு துடைப்பது போதுமானது. .இவ்வர்ணக் கொங்கிரீட் ஆனது சரியான மூலப்பொருட்கள்;, கலவைகள் மற்றும் வர்ண நிறமிகளின் சரியான கலவையைச் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகின்றது. டோக்கியோ சூப்பர்மிக்ஸ் பயன்படுத்தும் கட்டுமானத்திரட்டு எந்தவொரு கலப்படமும் அற்றதாகும். எனவே, சரியான கருவிகளைப் பயன்படுத்தி தரையினை மெருகூட்டும்போது, ஒர் மாசற்ற தளம் பெறப்படுகிறது.

பெயார் பினிஷ் கொங்கிரீட்

இது நீடித்த மற்றும் பராமரிப்பு தேவையற்ற ஓர் மென்மையான பூச்சுக்கு உதவும் மற்றும் அதிக பாய்ச்சல் மற்றும் துல்லியமான துகள்களைக் கொண்ட ஒரு சிறப்பு கலவை.

திட்டம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் டோல் கேட்- குருந்துகஹ-ஹத்கம
சவால்

கண்களுக்கு புலப்படும் இந்த கொங்கிரீட் ஆனது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அச்சு அகற்றப்பட்ட பிறகு மென்மையான, பூச்சினை மற்றும் நீடித்த பாவனையுடய மற்றும் பராமரிப்பு தேவையற்ற வடிவத்தினைப் பெறுகின்றது.

அம்சங்கள்

நீடித்த பாவனை மற்றும் பராமரிப்பு தேவையற்ற மென்மையான பூச்சு இந்த குறிப்பிட்ட கொங்கிரீட் வடிவமைப்பின் அடையாளங்களாகும். அதிக பாய்ச்சல் மற்றும் துல்லியமான துகள்களின் அளவைக் கொண்ட சிறப்பு கலவை இந்த மேற்பரப்பு பூச்சினை உருவாக்குகின்றது. கட்டுப்படுத்தப்பட்ட உயர் சரிவு கொங்கிரீட் மூலம் இந்த பிரித்தல் மற்றும் பாய்ச்சல் ஆகியன மேற்கொள்ளப்படுகின்றது.

அலங்கார கட்டிடக்கலைக்கான கொங்கிரீட்

அலங்கார கொங்கிரீட் ஆனது எவ்விதமான மேலதிக நிறைவுப் பணிகளும் தேவையற்றதாகவும் வர்ணமயமான மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தில் அதிகளவு சீரான தன்மை உள்ளதாகும். இதற்காக பயன்படுத்தப்படும் லேடெக்ஸ் அச்சுப் பலகை கொங்கிரீட் மேற்பரப்பில் ஒரு மரப் பூச்சினை உருவாக்குகிறது. செயற்கை மணல் மற்றும் இணைப்பு சீமெந்து அடிப்படையிலான கலவை வடிவமைப்பு பி.சி.இ கலவைக்காக பயன்படுத்தப்படுகின்றது.

திட்டம் புதிய அமெரிக்க தூதரக கட்டிடத் தொகுதி- கொழும்பு
சவால்

அலங்கார கொங்கிரீட் ஆனது எவ்விதமான மேலதிக நிறைவுப் பணிகளும் தேவையற்றதாகவும் வர்ணமயமான மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தில் அதிகளவு சீரான தன்மை உள்ளதாகும். இதற்காக பயன்படுத்தப்படும் லேடெக்ஸ் அச்சுப் பலகை கொங்கிரீட் மேற்பரப்பில் ஒரு மரப் பூச்சினை உருவாக்குகிறது.
திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்; கருவிகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, லேடெக்ஸ் அச்சுப்பலகையினை வரிசையாக பொருத்தும் பணியில் ஒப்பந்தக்காரர் முறையான துப்புரவு நடைமுறையை பின்பற்றுகிறார்.கொங்கிரீட்டின் இறுதி கட்டடக்கலை பூச்சுக்கு நிலையான நிறம் மற்றும் அமைப்பை வழங்குவதே எங்களுக்கான சவாலாக இருந்தது.

அம்சங்கள்

இந்த புதுமையான பூஜ்ஜிய சரிவு கொங்கிரீட் வடிவமைப்பு வாகன தரிப்பிடங்கள் , நடைபாதைகள், சாலை போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் போது சரியான முறையில்; மண்ணில் நீர் வெளியேற உதவுகிறது. பூமியின் மேற்பரப்பை மண்ணில் நீர் உறிஞ்சப்படுவதற்கு ஏற்றாற் போல் அமைப்பதன் காரணமாக நிலத்தடி நீருக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கும் உதவுகிறது. மழையின் போது பாதசாரிகளுக்கு மற்றும் வாகன செலுத்துபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் தாழ் நிலை சாலைகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பது போன்ற பிற நன்மைகளும் கிடைக்கின்றன.

மிதக்கும் ஃ பம்பி ஊடாக செலுத்தக்கூடிய ஸ்கிரீட் மோர்ட்டார்

கழுவப்படாத செயற்கை மணல் மேலும் சிறந்த துகள்கள் மற்றும் கலப்பு சீமெந்து அடிப்படையிலான கலவை வடிவமைப்பினை பி.சி.இ கலவை பயன்படுத்துகிறது. இந்த கலவையானது இந்த பயன்பாட்டில் தேவையான உந்திப்பாயும் மற்றும் பாய்ச்சலை உருவாக்குகிறது. பன்முகத்தன்மை கொண்ட கட்டிடங்களின் வெவ்வேறு தளங்களில் பெரிய பகுதிகளை உள்ளடக்கிய முன் அமைக்கப்பட்ட நிலைகளின் உதவியுடன் நீண்ட சமநிலை பட்டிகளைப் பயன்படுத்தி மேசன்கள் பல மடங்கு வேகமாக இட உதவுகிறது.

திட்டம் சினமன் லைப் திட்டம் கொழும்பு தொழில்நுட்ப கட்டிடத்திட்டம்- டோக்கியோ சீமெந்து திருகோணமலை
சவால்

ஆற்று மணலின் பற்றாக்குறை , அதிக விலை மற்றும் விரைவான கட்டுமானத்தை செயல்படுத்த தளங்களில் ‘கைகளினால் மேற்கொள்ளப்படும் சீமெந்து ரெண்டரிங்’ என்பதற்கு மாற்றீடு தேவைப்பட்டது. தற்போதுள்ள திட்டங்களில் இத்தகைய முடிவுகளை விரைவாகச் செய்வதற்கு திறமையான மேசன் கிடைப்பதும் ஒரு பிரச்சினையாகிவிட்டது.

அம்சங்கள்

கழுவப்படாத செயற்கை மணல் மேலும் சிறந்த துகள்கள் மற்றும் கலப்பு சீமெந்து அடிப்படையிலான கலவை வடிவமைப்பினை பி.சி.இ கலவை பயன்படுத்துகிறது. இந்த கலவையானது இந்த பயன்பாட்டில் தேவையான உந்திப்பாயும் மற்றும் பாய்ச்சலை உருவாக்குகிறது. பன்முகத்தன்மை கொண்ட கட்டிடங்களின் வெவ்வேறு தளங்களில் பெரிய பகுதிகளை உள்ளடக்கிய முன் அமைக்கப்பட்ட நிலைகளின் உதவியுடன் நீண்ட சமநிலை பட்டிகளைப் பயன்படுத்தி மேசன்கள் பல மடங்கு வேகமாக இட உதவுகிறது.

விரிவான மற்றும் சுருக்கத்தினை ஈடு செய்யும் கொங்கிரீட்

கொங்கிரீட்டினை கடினப்படுத்துதலின் போது நிகழும் பொதுவான சுருக்கத்தை ஈடுசெய்ய கொங்கிரீட்டின் உள்ளிருந்து தேவையான விரிவாக்கத்தை உருவாக்க மற்றும் சுருக்கத்தை குறைக்கும் உயர் செயல்திறன் கொண்ட விரிவான சேர்க்கை பயன்படுத்தப்படுகிறது. இதனால் நுண் வெடிப்புக்கள் மற்றும் மெல்லிய கோடுகள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் நீக்கப்பட்டு, 100 ஆண்டு ஆயுளை உறுதி செய்வதற்காக நீர் இறுக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

திட்டம் அதிவேக வீதியின் புதிய களனி பாலம் (Nமுடீ) தொடக்கம் இங்குருகடை மற்றும் ஒருகொடவத்தை சந்தி வரையான பகுதி
சவால்

புதிய களனி பாலம் முதல் இங்குருகடை சந்தி மற்றும் ஒருகொடவத்தை சந்தி வரையிலான நெடுஞ்சாலை வீதிப் பிரிவுகள் உருக்குக் கட்டமைப்பில் கட்டப்பட்டுள்ளன. மேல் தளம் இருபுறமும் ஆதரவு நெடுவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளது. கீழ்த்தளம் உருக்கு நெளி தட்டு கொங்கிரீட்டினால் மூடப்பட்டிருக்கும். பின்னர் நிலக்கீழ் அடுக்கானது தார் கொண்டு முடிக்கப்படுவதற்கு முன்பு நீர்க்காப்பு செய்யப்படுகிறது. இச்சாலை வடிவமைப்பிற்கு 100 ஆண்டுகள் ஆயுள்; வழங்கப்படுகிறது. எனவே வண்ணப்பூச்சுகளின் பாதுகாப்பு அடுக்குகளைப் பயன்படுத்தினாலும், உருக்கு அடிப்பகுதியின் அரிப்பைத் தவிர்ப்பதற்கு மேல் தள் கொங்கிரீட்டில் சாத்தியமான நுண் வெடிப்புக்கள் மற்றும் மெல்லிய கோடுகளிலிருந்து நீர் மற்றும் காற்று ஊடுருவலைத் தடுக்க வேண்டும்.

அம்சங்கள்

கொங்கிரீட்டினை கடினப்படுத்துதலின் போது நிகழும் பொதுவான சுருக்கத்தை ஈடுசெய்ய கொங்கிரீட்டின் உள்ளிருந்து தேவையான விரிவாக்கத்தை உருவாக்க மற்றும் சுருக்கத்தை குறைக்கும் உயர் செயல்திறன் கொண்ட விரிவான சேர்க்கை பயன்படுத்தப்படுகிறது. இதனால் நுண் வெடிப்புக்கள் மற்றும் மெல்லிய கோடுகள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் நீக்கப்பட்டு, 100 ஆண்டு ஆயுளை உறுதி செய்வதற்காக நீர் இறுக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தெளிக்கப்படும் கொங்கிரீட்

தரமான 0-5 மிமீ; கட்டுமானத்திரட்டு மற்றும் 5-14 மிமீ சல்லிக்கற்களை மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் செலவு குறைந்த மெல்லிய கொங்கீட் அடுக்கு பெறப்படுகின்றது. ஒரு இரசாயன முடுக்கி மூலம் ஒரு சிறப்பு உந்தி இயந்திரத்தைப் பயன்படுத்தி உறுதிப்படுத்த அல்லது மேம்படுத்த தேவையான மேற்பரப்புகளில் கலவை தெளிக்கப்படுகிறது. இந்த முடுக்கி ஒரே நேரத்தில் விரைவான கடினப்படுத்தலுக்காக கொங்கிரீட்; கலவை அமைப்பால் வழங்கப்படுகிறது.

திட்டம் புதிய அமெரிக்க தூதரகத் திட்டம்
சவால்

அமெரிக்க தூதரக திட்ட தளத்தில் அகழ்வு செய்யப்பட்ட அடித்தளங்களில் மண் உறுதிப்படுத்தல் தேவைப்பட்டது. அல்தயார் திட்டத்திற்கு சில புறக் குவியல்களில் திருத்தங்கள் தேவைப்பட்டது. இத்தகைய சூழ்நிலைகளுக்கு தேவையான தயாரிப்பாக ஒரு செலவு குறைந்த மெல்லிய கொங்கிரீட்; அடுக்கை குறிப்பிட முடியும்.

அம்சங்கள்

தரமான 0-5 மிமீ; கட்டுமானத்திரட்டு மற்றும் 5-14 மிமீ சல்லிக்கற்களை மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் செலவு குறைந்த மெல்லிய கொங்கீட் அடுக்கு பெறப்படுகின்றது. ஒரு இரசாயன முடுக்கி மூலம் ஒரு சிறப்பு உந்தி இயந்திரத்தைப் பயன்படுத்தி உறுதிப்படுத்த அல்லது மேம்படுத்த தேவையான மேற்பரப்புகளில் கலவை தெளிக்கப்படுகிறது. இந்த முடுக்கி ஒரே நேரத்தில் விரைவான கடினப்படுத்தலுக்காக கொங்கிரீட்; கலவை அமைப்பால் வழங்கப்படுகிறது.