டோக்கியோ சூப்பர் பொன்ட உயர் செயல்திறன் டைல் பசை அதிக பிணைப்பினையும் வலிமையையும் ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான டைல்களையும்; பதிப்பதற்கு இப் பசையினை பயன்படுத்த முடியும் என்பதுடன் பெரிய அளவிலான 6அடி ஓ 3அடி போசிலேன் அல்லது முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட டைல்களை சுவர் மற்றும் நிலத்திற்கு பதிப்பதற்கு பரிந்துரைக்கப்படுகின்றது.

ஏற்கனவே பதிக்கப்பட்ட டைல்கள் மற்றும் சீமெந்துத்தரையில் டைல்களை பதிப்பதற்கு இப்பசை பொருத்தமானது. அத்துடன் சூடான நீர் அடிக்கடி பயன்படுத்தப்படும் சமையலறை மற்றும் குளியறைகளில் டைல்களை பதிப்பதற்கு ஏற்றது

பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்

பூசுவதற்காக தயார் செய்யும் முறை

கலவை செய்யயும் முறை

01

06 லீட்டர் சுத்தமான தண்ணீரை வாளியில் ஊற்றவும்.

02

டோக்கியோ சுபர் பொன்ட் இன் 25கி.கிராம் பை முழுவதையும் படிப்படியாக கலக்கியவாறு இடவும் (rpm <500).

03

பூசுவதற்கு ஏற்ற வகையில் மென்மையாகும் வரை 03 நிமிடங்களுக்கு கலக்கவும்

04

கலவையை 02 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.

05

மீண்டும் 02 நிமிடங்களுக்கு கலக்கவும். தேவைப்படின் பூசுவதற்று ஏற்ற வகையி;ல் மென்மையாகும் வரை அரை லீட்டர் வரை தண்ணீரை சிறிதளவு செர்த்துக்கொள்ளவும்.

பூசும் முறை

01

சுத்தமான மற்றும் உலர்ந்த மேற்பரப்பில் 3-5mm தடிப்புடனான படை கொண்டதாக சுப்பர் பொன்ட் இனை குறிப்பிடத்தக்க இழுவையுடன் பூசவும்.

02

20 நிமிடங்களுக்குள் பதிக்கக்கூடிய ஒரு பகுதியில் மட்டும் பசையைப் பூசவும்.

03

டைல்கள் இடையே 3mm இடைவெளி விட்டு ஈரமான பசை மீது உறுதியாக அழுத்தவும். பின்னர் இடைவெளிகளை சுத்தம் செய்யவும்.

04

டைல்களை சரிசெய்வதற்கு இறப்பர் சுத்தியலை பயன்படுத்தவும்.

05

டைல்களை பதித்த 09 மணித்தியாளங்களுக்கு பின்னர் க்ரவுட் செய்யவும்.

சில குறிப்புகள்

01

சுபர் பொன்ட் கலவையினை தயாரித்த 2 மணித்தியாலங்களுக்குள் பாவிக்கவும்.

02

டைல்களை ஈரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பதிக்க வேண்டிய தளத்தினை ஈரலிப்பான ஸ்பொன்ஜ் ஒன்றினால் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்

03

டைல்களை பதித்ததிலிருந்து 24 மணித்தியாளங்களுக்கு பின்னர் அதனை பயன்படுத்தவும்.

04

6ft x 3ft மற்றும் அதற்கு குறைவான அளவுடைய டைல்களே இதற்காக பரிந்துரைக்கப்படுகின்றது.

தொழில்நுட்பத் தரவுகள்

வீடியோ வழிகாட்டி