டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தலைமையிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் தற்போது நிறுவனத்தின் பெருநிறுவன அடையாளத்தின் ஒரு உள்ளார்ந்த பகுதியாக மாறியுள்ளது, மேலும் அவற்றின் ஊடாக ஏற்படுத்தப்படும் தொலைநோக்குடனான விளைவுகள் நிகழ் காலத்திற்கு மட்டுமல்லாது, எமது எதிர்கால தலைமுறையினருக்கும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

உதாரணமாக, டோக்கியோ சீமெந்தின்; உயிரி மின்வலு உற்பத்தித் திட்டம்; ஊடாக எமது முழு உற்பத்தி செயல்முறையையும் 100மூ தன்னிறைவு மின் உற்பத்தி ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது., அதே நேரத்தில் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மிகப்பெரிய பங்களிப்பாளராக எங்களை உருவாக்கியுள்ளது. முருங்கைக்கற்பாறை பாதுகாப்பு, சதுப்பு நில கண்டல் தாவர மீள் வளர்ப்பு மற்றும் வனத்தாவர நாற்று வேலைத்திட்டம்; உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்புத் திட்டங்கள், இலங்கையின் இணையற்ற பல்லுயிரியலைத் தக்கவைக்க மற்றும் சுற்றுச்சூழலின் மிக முக்கியமான பகுதிகளைப் பாதுகாப்பதில் வலுவான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகின்றன.

அனைத்து உயிரினங்களுக்கும் பொருத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும்; இது போன்ற திட்டங்களை மேற்கொள்வதில்; ஆர்வமுள்ள பல நிறுவனங்களுடன் நாங்கள் பங்காளிகளாக பணியாற்றுகின்றோம். அவர்கள் தங்களது நிபுணத்துவத்துடன் எமது சேவை எல்லைகளை விரிவாக்க உதவுகிறார்கள்.