banner badge image

ஒரு சுவரை பிளாஸ்டர் செய்வதற்கு உங்;களுக்கு ஏற்பட்ட சிரமம் நினைவிருக்கின்றதா? மணல், சீPமெந்து ,சரியான மற்றும் தரமான இரசாயனங்கள் மற்றும் ஸ்கிம் கோட் என தனித்தனியக ப்ளாஸ்டருக்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது. மேலும் இப்பொருட்களின் 30 வீதத்திற்கு அதிகமானவை போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தலின் போது வீணடிக்கப்படுகின்றது.அத்துடன் நீங்கள் பணம் செலுத்திய மொத்த மணல் அளவின் பெரும் பகுதி சல்லடை சலிப்பின் மூலம் வெளியேற்றப்படுகின்றது. ஒவ்வொரு மூலப்பொருளினதும் தரத்தின் மாறுபாடு காலப்போக்கில் உங்கள் சுவரில் முறிவுகள் மற்றும் விரிசல்கள் தோன்றுதற்கு காரணியாக அமையும்.

திறந்த வெளியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்படும் மணல் மற்றும் சீமெந்து தூசி மற்றும் குப்பைகளினால் மாசடைந்து பயன்படுத்த முடியாதவையாகவும் மணலில் உருவாகும் ஈரப்பதம் ஓர் தரமற்ற ப்ளாஸ்டர் கலவையை உருவாக்கும்.

பாரம்பரிய முறையில் நீங்கள் மூலப்பொருட்களின் அளவினை அனுமானித்து கைகளினால் கலக்கும் போது மூலப்பொருட்களின் விகிதங்களை தவறாக அனுமானிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். சரியான கலவையினை தயாரிக்காவிடின் பிளாஸ்டர் பூச்சின் தரம் சுவருக்கு சுவர் மாற்றமடைவதுடன் இது தரமற்ற பிளாஸ்டர் பூச்சுக்கு வழிவகுக்கும்.

டோக்கியோ சுபர் காஸ்ட் பிளாஸ்டர் மாஸ்டர் என்பது உங்கள் சுவர்களுக்கு சரியான மற்றும் தரமான பிளாஸ்டர் பூச்சினை வழங்குவதற்காக உத்தரவாதமளிக்கும் பிளாஸ்டர் கலவையாகும்.

இப் பிளாஸ்டர் தீர்வுகள் உங்களுக்கு அதிக சேமிப்பினையும் போக்குவரத்தினையும் எளிதாக்குகின்றன. அத்துடன் உங்களுக்கு தெவையான அளவில் மட்டுமே வாங்க வேண்டும் என்பதினால் அதனை நீங்கள் விரும்பும் போக்குவரத்து முறையூடாக கொண்டு செல்ல முடிவதோடு உங்களுக்கு தேவையான போது மட்டும் உபயோகிக்க முடியும்.

டோக்கியொ சுபர் காஸ்ட் ஆனது, பாரம்பரிய முறைக்கமைய நிலத்தில் மணல் மற்றும் பிற மூலக்கூறுகளை கலக்கும் போது ஏற்படும் விரயத்தினை 40 வீதம் தடுக்கின்றது.

பாரம்பரிய ப்ளாஸ்டர் முறையில் ப்ளாஸ்டரிங் செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மேசன் மற்றும் இரண்டு உதவியாளர்கள் தேவை.டோக்கியொ சுபர் காஸ்ட் மூலம் ஒரு மேசன் குறைந்தளவு நேரத்தில் இரு மடங்கு சுவர் பரப்பளவை ப்ளாஸ்டரிங் செய்ய முடியும்.

வெளியக மற்று உள்ளக பயன்பாட்டிற்கு ஏற்ற சுவர் ப்ளாஸ்டர்களை நாம் வழங்குகின்றோம்.டோக்கியோ சுபர் காஸ்ட் வைட் ப்ளாஸ்டர் மாஸ்டர் என்பது 2 இன் 1 ப்ளாஸ்டரிங் தீர்வாகும் என்பதுடன் அதற்கு ஸ்கிம் பூச்சு தேவையில்லை. மேலும் எம்மிடமிருந்து காலநிலை மாற்றங்களினால் சுவர்களில் ஏற்படும் கறைகள் மற்றும் பூஞ்சனம் ஏற்படுவதனைத் தடுக்கும் வெதர் ஷீல்ட் வகையும் கிடைக்கின்றது.

வாருங்கள்… டோக்கியோ சுபர் காஸ்ட் வைட் ப்ளாஸ்டர் மாஸ்டர் குறைந்த விலையில் அதிகளவு பணிகளை செய்ய உங்களுக்கு ஓர் பங்காளியாக செயற்பட்டு உங்களது ஆயிரக்கணக்கான ரூபாய்களை சேமிக்க உதவுவதை காண எம்முடைய சுற்றுப்பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள்.

டோக்கியோ சிமென்ட் குழுமத்தின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள் பற்றி மேலும் அறிந்துகொள்ளளுங்கள்.