டோக்கியோ சீமெந்து நிறுவனம் உலக வங்கியின் உறுப்பினரான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ‘திவி சக்தி’ பயிற்சிக் கருத்தரங்குகளை தமது விநியோக வலையமைப்பின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக ஆரம்பித்தது.


இப் பயிற்சிக் கருத்தரங்கிற்காக பிராந்திய விற்பனைக் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட விற்பனை முகவர்கள் கலந்து கொண்டதுடன் அவர்கள் உள்ளுர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி அவர்களது பொருளாதார இயக்கத்திற்கான ஆதாரமாக விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப் பயிற்சிக் கருத்தரங்கானது சாதாரண குடும்ப வியாபாரத்திலிருந்து முன்னோக்கிச் சென்று தொழில்முனைவோராக மாறுவதற்கான அவர்களது நம்பிக்கையை அதிகரிப்பதனையும் அவர்களுக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுத்தருவதையே நோக்காகக் கொண்டது. அத்துடன் எங்கள் விற்பனை வலையமைப்பின் மூலம் நாம் ஏற்படுத்திக்கொண்ட 30 ஆண்டுகால உறவினை வலுவாக்குவதும் , போட்டித்தன்மை மிக்க வளர்ந்து வரும் சந்தையில் நம்பிக்கையுடனான பிணைப்பை வலுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு இக்கருத்தரங்குகள் இடம்பெற்றன.


இதன்போது சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தின் பயிற்சி முறைமைகளில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோர் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் முக்கியமாக விநியோக மற்றும் விற்பனை முகவர் வலையமைப்பிலுள்ள வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு பொருத்தமான முறையில் இப் பயிற்சிக் கருத்தரங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இப் பயிற்சிக் கருத்தரங்கானது புதிய வணிக வாயப்புக்களை உருவாக்குதல், வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளுதல், வாடிக்கையாளர் தொடர்பு முகாமைத்துவம், விலை முகாமைத்துவம், நிதி முகாமைத்துவம், இருப்பு மற்றும் பணப்புழக்க முகாமைத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கங்களாக கொண்டிருந்தது.

content image
content image

இத்திட்டமானது போரினால்; பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு உட்பட்ட ஏழு மாவட்டங்களின்; பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்தும்; முயற்சியின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது. அதன்படி இத்திட்டத்தின் முதல்; ஆண்டில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 இற்;கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களுக்கு சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்துடன்; இணைந்ததொரு திட்டமாக பயிற்சி அளிக்க எம்மால் முடிந்நது.


இந்த திட்டத்தின் பாரிய வரவேற்பை தொடர்ந்து டோக்கியோ சீமெந்து நிறுவனம் இந்த திட்டத்தின் முழு உரிமையையும் தன்னகத்தே கொண்டு தனது விநியோக வலையமைப்பை உள்ளடக்கி நாட்டின் பிற பகுதிகளுக்கும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தியது. அதன் மூலம்; சுமார் 500 இற்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களுக்கான பயிற்சிகளை பதுளை, மொனராகலை, கண்டி, குருநாகல், தம்புள்ளை, கம்பஹா, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, மற்றும் காலி மாவட்டங்களில் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.