டோக்கியோ சீமெந்து நிறுவனமானது, நற்குண முன்னேற்ற அமைப்புடன் இணைந்து இலங்கையின் கிராமப்புற பகுதிகளில் இருக்கும் கிரிக்கெட் திறமைசாலிகளை வெளிக்கொணரும் தூர நோக்கு கொண்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டுக்கான தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்து சகோதரத்துவம் மற்றும் மரியாதை ஊடாக இந்நாட்டினை கட்டியெலுப்ப உதவுவதே ஓர் முன்னோடி நிறுவனமாக டோக்கியொ சீமெந்து நிறுவனத்தின் முதன்மை அர்ப்பணிப்பாகும். இவ்விணைப்பானது 2014ஆம் ஆண்டு ஹிக்கடுவை மற்றும் சீனிகமையில் கிரிக்கெட் பயிற்சி வசதிகளை ஏற்படுத்தியதன் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் நற்குண முன்னேற்ற அமைப்பின் வீட்டுத்திட்டத்திற்கு அருகாமையில் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் இரண்டு கிரிக்கெட் மைதானங்கள் நிர்மாணிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இம்மைதானங்கள் ஊடாக கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் நடாத்தப்படுவதுடன் பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகளின் அபிலாஷைகளை பூர்த்தி செய்துகொள்ளவும் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த வெற்றிகளை ஈட்டுவதற்குமான பயிற்சிகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஹேமந்த தேவபிரிய அவர்களினால் 15 பிரதேசங்களை சேர்ந்த 600 இற்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் தென் பகுதியிலருந்து 40 பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான தயார்ப்படுத்தும் விசேட பயிற்சிகளும் இங்கு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது மிகச்சிறந்த முறையில் தங்களின் திறமைகளை மெருகூட்டிக்கொண்டுள்ள இளைஞர் யுவதிகளில் 13 வயதிற்கு கீழ்ப்பட்ட குழாமில் 11 பேரும் , 15 வயதிற்கு கீழ்ப்பட்ட குழாமில் 12 பேரும், 17 மற்றும் 19 வயதிற்கு கீழ்ப்பட்ட குழாமில் 17 பேரும் தொடர்ச்சியாக மிகச்சிறந்த மற்றும் உயர் மட்ட பயிற்சிகளையும் , உடற்; பயிற்சிகளையும் பெறுகின்றனர்.


 

content image
content image

இன்றுவரை தென் கிரிக்கெட் அகாடமியானது, தேசிய மற்றும் சர்வதேச மட்ட கிரிக்கெட் சாதனைப் பட்டியலில் எமது நாட்டின் பெயரினை பொன் எழுத்தினால் பொறித்த பல நட்சத்திர மட்ட வீரர்களை உருவாக்கியுள்ளது. வளர்ந்து வரும் திறமைகளை அடையாளம் காண்பதில் தென் பயிற்சி முகாம் பெற்றுக்கொண்ட வெற்றி 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வட மாகாணத்திற்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட ஏதுவான காரணியாக அமைந்தது. அதன்படி இத்திட்டமானது தற்போது யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய கிளிநொச்சி, ஓட்டுச்சுட்டான், மாங்குளம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் வளர்ந்து வரும் புதிய திறமையான வீர வீராங்கனைகளை இனங்காணும் நோக்குடன் இடம்பெறுகின்றது. மேலும் இத்திட்டத்தினை கிழக்கு மாகாணத்திற்கும் விரிவுபடுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த திறமை வாய்ந்த இளம் கிரிக்கெட் வீர வீராங்கனைகளுக்கும் அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள இதன் மூலம் சந்தர்ப்பம் கிட்டுகின்றது. இன, மொழி தடைகளைத் தாண்டி விளையாட்டின் உண்மையான உணர்வினை வெளிப்படுத்த மற்றும் பல்வகை கலாசாரங்களை கொண்ட எமது நாட்டின் பிரதேசங்களை இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளையாட்டு விளங்குமென டோக்கியோ சீமெந்து நிறுவனம் நம்புகின்றது.

 


 

content image