பங்குதாரர்களுடன் தேசத்தை கட்டியெழுப்புவோம்
உலகத்தை வியக்க வைக்கும் பல நிகரற்ற கட்டுமான அதிசயங்களுடன் இலங்கை ஒரு புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட சில புதுமையான கட்டடக்கலை வடிவமைப்புகள் , கட்டிட தொழில்நுட்பங்கள் மற்றும் பொறியியல் அதிசயங்களில் அவற்றின் காலப்பகுதிகளை ஒப்பிடும் போது அக்காலகட்டத்தில் இருந்த கட்டிடக்கலைகளை விஞ்சும் அளவில் இருந்தமை பெரும் ஆச்சரியத்தை அளிக்கின்றது. அது நமது நாட்டின் கட்டிடக்கலையின் திறனை பறை சாற்றும் ஒரு விடயமாத் திகழ்கின்றது. சரியான திறன்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்த எங்கள் உள்ளூர் திறமைகள் உலகளாவிய பாராட்டுக்கு தகுதியான கட்டுமான சாதனைகளை உருவாக்கும் திறன் கொண்டது என்பதற்கு அவை சான்று பகர்கின்றன. இன்றும் இது போன்ற நிகரற்ற திறனைத் கொண்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் மேலும் கட்டுமானத் துறையில் இன்னும் பல சாதனைகளைப் புரிய எமது; நாட்டிற்கு ஆற்றல் உண்டு என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
சீமெந்து மற்றும் கொங்கிரீட்; தயாரிப்பதில் இலங்கைச் சந்தையின் முன்னோடியாகவும், முழுமையாக உள்நாட்டில் வளர்ச்சியடைந்த ஒரு நிறுவனமான டோக்கியோ சீமெந்து குழுமம் நமது கட்டுமானத்தொழிற்;துறைக்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்கி முன்னேற உதவியுள்ளது. இந் நோக்கத்தை அடைய, தொழில்துறையின் பலதரப்பட்ட பங்குதாரர் குழுக்களுடன் கைகோர்த்து செயல்படும் பல திட்டங்களை நாங்கள் மேற்கொண்டுள்துடன், அதனூடாக நாம் ஒன்றாக வளர்ச்சியடைகின்றோம்.
மேலும் நாம் இலங்கையிலும் உலகெங்கிலுமுள்ள துறைசார்;ந்தோர் மற்றும் வல்லுநர்களிடையே புதிய எண்ணங்கள், துறைசார் அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்வதற்கான பதிய தளங்களை உருவாக்குவதன் மூலம் கட்டுமானத் துறையில் புதியதொரு கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றோம். உலகளாவிய ரீதியில் கட்டுமானத்துறையின்; முன்னிலை பெற்றுள்ள நாடாகக் கருதப்படும் ஜப்பானுடனான எமது ஒன்றிணைந்த செயற்பாடுகள் இதற்கு சான்று பகர்கின்றது. மேலும் இது போன்ற கூட்டு நடவடிக்கைகள் கட்டமைப்பு மற்றும் குடிசார்; பொறியியல் துறைகளில் நிபுணத்துவம் சார் செயற்பாடுகளை வளர்க்க் உறுதுணையாக அமைந்துள்ளது. புதிய அறிவை பெறுவதற்கான சரியான வழிமுறை அறிவை பரிமாறுவதேயாகும். அதனடிப்படையில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தொழில்சார் நிபுணர்களை வரவழைத்து செயலமர்வுகள்; ,கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் அவர்களின் துறைசார் அறிவைப் பரிமாறிக்கொள்ள வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருகின்றோம். அத்துடன் தொழில்சார் நிபுணர்கள் அவர்களின் ஆய்வு முடிவுகள் மற்றும் தொழில்நுட்ப நுணுக்கங்களை மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையில் அவர்கள் முகம் கொடுத்த சவால்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வது இந்நிகழ்வுகளின் சிறப்பம்சமாகும்.
முறையான பயிற்சிகள் மற்றும் திறன் அபிவிருத்தித் திட்டங்களின் மூலமும் தொழில்முறை நிபுணத்துவத்தினை அபிவிருத்தி செய்வதன் மூலமும் இத்தேசத்தை நாம் வளமூட்டுகின்றோம். அத்துடன் தொழில்சார் அமைப்புகளுடன் இணைந்து பயிற்சி செயலமர்வுகள்;, கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதுடன் அதில் பரிமாறப்படும் தகவல்கள் ஊடாக துறைசார்ந்த பலருக்கும் எமது அறிவையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்கின்றோம்.
டோக்கியோ சீமெந்து நிறுவனம் தேசிய தரங்களை மேம்படுத்துவதை முக்கிய நோக்காகக் கொண்டு செயற்படும் நிறுவனமாகும் என்பதுடன் இது பல தொழிற்;துறை அமைப்புக்களுடன் வெற்றிகரமாக இணைந்து செயற்பட வழிவகுத்தது. மேலும் சீமெந்து உற்பத்தியில் முதன் முதலில் ளுடுளு தரச்சான்றிதழை பெற்ற நாம் இலங்கை கட்டுமானத் துறையி சந்தையில்; தரமான தயாரிப்புகளின் இருப்பை உறுதிசெய்தோம். மேலும் இது தரமான உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கான ஆரம்பப் புள்ளியாக, பிற உற்பத்திகளுக்கான ஒரு முன்மாதிரி சந்தை வாய்ப்பாகவும் அமைந்தது. மேலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உற்பத்திப் பொருட்களுடன் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு சந்தையில் இருக்கும் போட்டிக்கு முகம் கொடுக்க இது உந்து சக்தியாக அமைந்தது என்பதும் உண்மையே.
எமது மற்றுமொரு முக்கிய நோக்குகளில் ஒன்றான கட்டமைப்பு மற்றும் குடிசார்; பொறியியலில் நிபுணர்களிடையே நிபுணத்துவம் மிக்க கட்டுமானத் தொழிலாளர்களை உருவாக்குவதும்; அவர்களின் பற்றாக்கறையை இல்லாதொழிப்பதும், எவரொருவர்; வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் படைப்பாற்றலுடன் எங்கள் தொழிற்;துறையை முன்னோக்கி நகர்த்துவதற்கான தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளாரோ அவர்களை கண்டறிவதுமே ஆகும். மேலும் தொழிற்துறையை முன்னோக்கி நகர்த்திச்; செல்லும் புதிய சிந்தனையைக் கண்டறிவதற்காகவும், தூண்டுவதற்காகவும் பொறியாளர்கள், ஆலோசகர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் உருவாக்குனர்களுடன்; நாட்டின் அனைத்து முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் இளங்கலை பட்டதாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம். மேலும் பொறியியல் இளங்கலை மாணவர்களின் கருத்தரங்கிற்கு அனுசரனை வழங்குவதன் மூலம், புதிய அறிவுசார் முயற்சிகள் வெளிவர உகந்த சூழலை உருவாக்க நாம் உதவுகின்றோம்.
தொழில்முறை சங்கங்களுடன் கூட்டாக இணைவதன் மூலம் அவர்களின் படிப்படியான வளர்ச்சியை வலுப்படுத்துவதையும், எங்கள் தொழில்துறையை புதிய முயற்சிகள் மூலம் தொழில்சார் உயரங்களை எட்டுவதற்கு அவர்களை ஊக்குவிப்பதையும் நாம் நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் தொழில்சார் நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களுடனான ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் உலக அரங்கில் எந்தவொரு நாட்டிற்கும் இணையான தொழில்துறைத் தரத்தை உயர்த்த எம்மால் முடிந்ததுள்ளது.