எமது நாடு, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலை வளப்படுத்தி பாதுகாக்கும் எமது அர்ப்பணிப்புள்ள குறிக்கோள்களின் ஒரு குறிப்பிடத்தக்க சான்றாக எமது நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள எமது வலையமைப்பினை குறிப்பிட முடியும்.
உள்நாட்டில் வளர்ச்சியடைந்து இலங்கை மக்களின் மனதில் மற்றும் அவர்களது அன்றாட செயற்பாடுகளில் ஆழமான பிணைப்பினைக் கெண்ட ஓர் பெரு நிறுவனமாக எம்மை வளப்படுத்திய மற்றும் டோக்கியோ சீமெந்து என்ற நாமத்தினை வளர்த்தெடுக்க உதவிய எமது நாட்டிலும் அதன் சமூகங்களிலுமே நாம் மீண்டும் முதலீடு செய்துள்ளோம்.