டோக்கியோ சுபர் ப்ளோ ப்ளோரிங் கொம்பவுண்ட் என்பது நிலத்தினை மட்டப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் இயல்பாகவே பரவக்கூடிய கலவையாகும்.இக்கலவையை பம்பியைக் கொண்ட அல்லது சாதாரண பிரயோகத்தின் மூலம் பரவச் செய்ய முடியும்.தட்டையான மற்றும் சமமான தளத்தின் இறுதிப் பூச்சாக இதனை பயன்படுத்த முடியும்.

களஞ்சியசாலைகள் ,தொழிற்சாலைகள், உற்பத்தி தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், வணிக கட்டிடங்கள்,குடியிருப்புக்கள் மற்றும் உள்ளகப்பகுதிகள் போன்றவற்றிக்கு பயன்படுத்த முடியும். நிலத்திற்கு இட முன்னர் பிரைமர் ஐ இருமுறைப் பூசி நன்றாக உலர்ந்த பின்னரே டோக்கியோ சுபர் ப்ளோ கலவையை நிலத்திற்கு இடுதல் வேண்டும் என்பதுடன் பரிந்துரைக்கப்படும் கலவையின் தடிப்பு 5-10மி.மீ ஆகும்.

சுரியான விகிதத்தில் தண்ணீரைச் சேர்த்தல், தரையின் வெப்பநிலை மற்றும் நிலத்தில் இட்ட பின்னர் அப்பகுதியை மூடிவைத்தல் போன்ற விடயங்கள் டோக்கியோ சுபர் ப்ளோ ப்ளோரிங் இனை பயன்டுத்துவதற்கு முன்னர் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயங்களாகும்.

பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்

பூசுவதற்காக தயார் செய்யும் முறை

கலவை செய்யயும் முறை

01

5.5 - 6.0 லீற்றர் தூய நீரை (அறை வெப்பநிலையில்) வாளியினுள் இட்டுக் கொள்ளவும்.

02

அதே வாளியினுள் டோக்கியோ சுப்பர் ஃபுளோ 25 மப பை முழுவதும் வெறுமையாகும் வரை சிறிது சிறிதாக இட்டுக் கலக்கிக் கொள்ளவும் (rpm <500).

03

இயந்திர கைகலப்பானை பயன்படுத்தி, 5 நிமிடங்கள் வரை நன்கு கலக்கி மிருதுவான கலவையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

04

இக்கலவையை ஓய்வு நிலையில் 2 நிமிடங்கள் வைக்கவும்.

05

மீண்டும் 2 நிமிடங்கள் வரை கலக்கவும்.

06

கலக்கப்பட்ட கலவையை 10 நிமிடங்களில் பயன்படுத்தி முடிக்கவும்.

பூசும் முறை

01

பிரயோகிக்கும் மேற்பரப்புகள் உலர்ந்த, உறுதியான, தூய்மையான மற்றும் எண்ணெய், கிறீஸ், வெக்ஸ், பொலிஷ் போன்றன இல்லாத இறுக்கமானதாக இருக்க வேண்டும்.

02

“பிரைமர்" பூசுவதன் மூலம் நுண்துளைகள் மற்றும் சுருக்க வெடிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

03

தயார் செய்யப்பட்ட மேற்பரப்பின் மீது டோக்கியோ சுப்பர் ஃபுளோ கலவையை ஊற்றி, வைப்பர் அல்லது மிதவை கரண்டி கொண்டு சீரான தடிப்பைப் பெறும் வரை பரவச் செய்யவேண்டும்.

04

தரைக்கு பரிந்துரைக்கப்படும் ஆகக்குறைந்த பூச்சின் தடிப்பு 5மி.மீ. “ஸ்கெக்" லெவலர் இனைப் பயன்படுத்தி சீரான தடிப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.

05

பூச்சினுள் காணப்படும் காற்றை வெளியேற்ற “ஸ்பைக் ரோலர்" இனைப் பயன்படுத்தவும்.

06

காற்றின் மூலம் சுயமாக பதனிடல் பரிந்துரைக்கப்படுகிறது. நீரின் மூலம் பதனிடல் தவிர்க்க வேண்டும்.

சில குறிப்புகள்

01

புதிதாக இடப்பட்ட கொங்கிறீற் அல்லது சீமெந்து நிலங்களில் ஆகக்குறைந்தது 3 வாரங்களுக்கு பின்னரே டோக்கியோ சுப்பர் ஃபுளோ இனை பிரயோகிக்க வேண்டும்.

02

சூழல் வெப்பநிலை 28ழஊ க்கு மேற்பட்டதாயின் நீரைத் தெளித்து, வெப்பநிலையை குறைக்கவும். மேற்பரப்பு காயும் வரை காத்திருக்கவும்.

03

24 மணித்தியாலங்களின் பின்னர் நடந்து செல்லப் பயன்படுத்தலாம்.

04

14 நாட்களின் பின்னர் நிலத்தைப் "பொலிஷ்" செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

05

டோக்கியோ சுப்பர் ஃபுளோ உடன் நிறம் சேர்த்து பயன்படுத்த விரும்பினால், அசேதன நிறமிகளை பயன்படுத்தலாம். பரிந்துரைக்கப்படும் நிறமி சேர்மான அளவு 0.5மூ. மேலதிக விபரங்களுக்கு விற்பனைப் பிரிவை தொடர்பு கொள்ளவும்.

தொழில்நுட்பத் தரவுகள்

வீடியோ வழிகாட்டி