வேகமாக வளர்ந்து செல்லும் தகவல் தொழில்நுட்பத்தில் இணையம் ஊடாக எமது பிள்ளைகள் கல்வி மற்றும்; பொழுதுபோக்கு விடயங்கள் உட்பட புதிய மாற்றங்கள் தொடர்பான அறிவினையும் பெற்றுக்கொள்கின்றனர். அதே வேளை, அவற்றின் சரியான பயன்பாடு மற்றும் மாணவ சமூகத்திற்கு பொருத்தமற்ற விடயங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை கற்றுக்கொடுக்கும் வழிகாட்டியாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாரிய பொறுப்பினைக் கொண்டுள்ளனர். முறையான வழிகாட்டல் இல்லாவிடின் எமது பிள்ளைகளின் கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை முறையற்ற திசையில் பயணிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
டோக்கியோ சீமெந்து வினாடி வினா போட்டியானது மாணவர்களுக்கு இணையத்தின் சரியான பயன்பாட்டினையும், அவர்களது வாழக்கையை வளப்படுத்தும் புதிய விடயங்கள் தொடர்பான அறிவினையும் பெற்றுக்கொடுக்கின்றது. அதனூடாக கிடைக்கும் வாய்ப்புகளின் முக்கியத்துவத்தினை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதன் மூலம் அவர்களுக்குள் ஓர் தேடல் பசியை உருவாக்கும் வாய்ப்பினை வழங்குகின்றது.
இந்நிகழ்ச்சியானது தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான போட்டியாக டோக்கியோ சீமெந்து நிறுவனம் மற்றும் சுவர்ணவாஹினி ஆகியவற்றின் ஆக்கபூர்வமான படைப்பாக கல்வி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது. இவ் வினாடி வினா போட்டிக்காக நாட்டின் மூலை முடுக்கெங்கிலுமுள்ள ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதுடன் அதன் மூலம் இணையத்தின் பயன்பாடு தொடர்பான அறிவினை ஓர் மகிழ்ச்சியான வினா விடை போட்டி ஊடாக பெற்றுக்கொண்டனர்.
டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் இவ் ஆக்கப்பூர்வமானதும் தொலைநோக்குப் பார்வையுடனானதுமான போட்டியின் மூலம் வெற்றிகரமான கல்விக்கு தேவையான பொது அறிவினை எமது மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதை உறுதி செய்வதுடன் இப்போட்டியானது அவர்களது உலகம் தொடர்பான பார்வையை விரிவுபடுத்துவதற்கான ஒரு ஆரம்பப்புள்ளியாக இருக்குமென எதிhப்;பார்க்கின்றது. அத்துடன் இப்போட்டியின் மூலம் பொது அறிவு தொடர்பான அவர்களது மட்டத்தினை தெரிந்து கொள்ளவும் அதனை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்;ப்பாகவும் பயன்படுத்திக்கொள்ள மாணவர்கள் இப்போட்டிக்காக ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியின் நீண்ட கால நோக்கு என்னவென்றால், மிகச்சிறந்த விழுமியங்களுடனான நற்பிரஜைகள் மற்றும் எதிர்கால தலைவர்களை உருவாக்குவதே ஆகும். இப்போட்டியானது மாணவர்களின் பொது அறிவினை சோதிப்பதில் உயர் தர நிலைகளுக்கு உட்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அத்தரநிலைகளை உறுதிப்படுத்தும் வகையில் டோக்கியோ சீமெந்து சூப்பர் வினாடி வினா போட்டியானது சுமதி தொலைக்காட்சி விருது மற்றும் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ரைகம் டெலீஸ் ஆகிய இரண்டு விருது விழாக்களிலும் சிறந்த மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் சந்தர்ப்பம் உண்டு என்பதுடன் திறமைகளுக்கிடையாலான இப்போட்டியில் பங்கு பெறும் பாடசாலைகளுக்கு 5.2 மில்லியன் பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. தோலைக்காட்சியில் இடம்பெற்ற இறுதிச்சுற்றிற்கு இலங்கையின் மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 32 அரசாங்க பாடசாலைகள் பிரம்மாண்ட மேடையில் தங்களுக்கிடையில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைக்கு அவர்களது பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக 1 மில்லியன் ரூபா பரிசாக வழங்கப்பட்டது.