வலு
எரிசக்தி பாதுகாப்பு என்பது அதிக வலு தேவையுடைய செயல்முறையின் நீடித்த நிலைப்பிற்கு ஓர் முக்கிய காரணியாகும். டோக்கியோ சீமெந்து குழுமம் உள்நாட்டு பெருநிறுவனத்துறையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை ஆரம்பித்து இலங்கையில் முதலாவது 10 மெகாவோட் உயிரி மின்னுற்பத்தி நிலையத்தினை 2008 ஆம் ஆண்டு திருகோணமலையில் அமைத்தது.இந்த மின்னுற்பத்தி நிலையமானது வருடத்திற்கு 43,000 கார்பன் வரவினப் புள்ளிகளை ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றக் கட்டமைப்பின் மாநாடு ஊடாக பெற்றுக்கொள்கின்றது.
2014ஆம் ஆண்டு மஹியங்கனையில் 6 மெகாவோட் திறன் கொண்ட இலங்கையின் முதலாவது மற்றும் பாரியளவிலான பசுமை மின்னுற்பத்தி நிலையத்தினை நாம் உருவாக்கியுள்ளோம். இப் பசுமை மின்னுற்பத்தி நிலையம் 30,000 கிராமிய வீடுகளுக்கு மின்சார வசதியிiனைப் பெற்றுக்கொடுப்பதுடன் தேசிய மின்சார கட்டமைப்பிற்கு தனது பங்களிப்பினையும் வழங்குகின்றது. இதற்கு மேலதிகமாக திருகோணமலையில் அமைந்துள்ள எமது 02ஆவது உயிரி மின்வலு நிலையம் 08 மெகாவோட் வலுவினை உற்பத்தி செய்கின்றது. இவற்றின் ஊடாக மொத்தம் 24 மொகா வோட் மின்னுற்பத்தியுடன் டோக்கியோ சீமெந்து குழுமம் இலங்கையின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க உயிரி வலு பங்களிப்பாளராக விளங்குகின்றது.
மேலும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தினை உறுதி செய்வதற்காக நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வுத்திட்டத்தின் கீழ் மஹியங்கனை மற்றும் திருகோணமலையில் அமைந்தள்ள எமது மூன்று மின்னுற்பத்தி நிலையங்களின் சுற்றுப்புறத்தில் 6 மில்லியனுக்கும் அதிகமான சீமை அகத்தி மரங்கள் நடப்பட்டுள்ளது. இச் செயற்பாடுகள் எரிபொருளை இறக்குமதி செய்ய செலவிடும் தொகையானது உள்நாட்டில் சேமிக்கப்படுவதுடன் அது கிராமப்புற பொருளாதார வளத்தினை அதிகரிக்கின்றது.
எங்கள் சமூக அடிப்படையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பொறுப்புணர்வுத் திட்டங்கள் மூலம் 2500 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றோம். இம்முன்னெடுப்பின்; ஊடாக ஏறத்தாழ 500 நேரடி வேலைவாய்ப்புக்களையும், 1000 இற்கும் மேற்பட்ட மறைமுக வேலைவாய்ப்புக்களையும் நாம் உருவாக்கியுள்ளோம்.
எமது புதுப்பிக்கத்தக்க பசுமை மின்னுற்பத்தியின் மொத்தக் கொள்ளலவு 24 மெகா வோட் என்பதுடன் எமது நாட்டின் தேசிய மின் கட்டமைப்பிற்கு ஆண்டுக்கு 60,000 மெகாவோட்ஃமணி அளவிலான மின்சாரத்தினை பங்களிப்பு செய்கின்றோம்.
நாம் 100 வீத தன்னிறைவு எரிபொருள் தயாரிப்பாளராக விளங்குவதோடு இம்முயற்சிகள் யாவும் எமது காபன் உமிழ்வுத் தடத்தினை வருடத்திற்கு 100,000 மெட்ரிக் டொன் காபனீரொட்சைட் இனால் குறைக உதவியுள்ளது.