நாம்
வழங்கும்
சேவைகள்

டோக்கியோ சீமெந்து நிறுவனமானது தொடர்ந்தும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பங்களிப்பினை முழுமையாக வழங்குவதுடன், இலங்கையின் கட்டுமானத் துறையின் நன்மதிப்பினை மேலும் அதிகரிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றது. உற்பத்தி மற்றும் செயற்;திறனின் தரத்தை அதிகரிக்க பாரம்பரிய கட்டுமான நடைமுறைகளை மாற்றும் வகையில் எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்தும்; நாம் கட்டுமானத் துறையினை இலகுவாக்கும் வகையில் எமது நிறுவனத்தின் வலையமைப்பினை விரிவுபடுத்தியுள்ளோம். இவ்விரிவாக்கத்தின் ஊடாக எமது சேவைகளின் தரத்தினை தேவையான கட்டுமானத் துறை பகுதிகளுக்கு உடனடியாகவும் தரமாகவும் வழங்கும் எமது நோக்க்;ததினை செவ்வனே நிறைவேற்றுகின்றோம். இதன் ஓர் கட்டமாக சீமெந்து, கொங்கி;ரீட் மற்றும் சீமெந்து சார் தயாரிப்பு பரிசோதனைகளுக்காக அதிநவீன ஆய்வகத்தை கட்டுமானத் துறைக்கு வழங்கியமையை முக்கியமான ஒரு செயற்பாடாகக் கருதுகின்றோம். இந்த ஆய்வகம் இலங்கையின் முதல் மற்றும் ஒரேயொரு ஐளுழு 17025 தர அங்கீகாரம் பெற்ற ஆய்வக வசதிகளைக் கொண்டதுடன் அது இலங்கையை எந்தவொரு நாட்டிற்கும் இணையாக உயர்த்தியுள்ளமைக்கான சான்றாகவும் அமைகின்றது.

கட்டுமானத் துறையின் தொழில் நிபுணர்களை சரியான திறன்களுடன் மேம்படுத்தும் முக்கியத்துவததினைக் கண்டறிந்து கொண்ட நாம் அதற்காக தம்புள்ளையில்; எமது கட்டுமான பயிற்சிக் கல்லூரியை ஆரம்பித்தோம்;. இக் கல்லூரியானது தேசிய தொழில் தகுதியினைப் பெற்ற கட்டுமான வல்லுனர்களை உருவாக்குவதுடன் அவர்கள் நாட்டின் உட்;கட்டமைப்பு வசதிகளை மாற்றியமைப்பதில் முன்னின்று செயற்படும் மனிதவளமாக செயற்படுகின்றனர். மேலும், சிறந்த கட்டுமான நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் கட்டிட கட்டுமானத் துறையில் தொழில்முறை வழிகாட்டுதல்களை வழங்கவும் டோக்கியோ சீமெந்து குழுமம் நாடுமுழுவதிலுமுள்ள மேசன்களுக்கான திறன் அபிவிருத்தி கருத்தரங்குகளையும் நடத்துகின்றமை மற்றுமொரு குறிப்பிடப்பட வேண்டிய செயற்பாடாகும். இம்முயற்கள் யாவையும் கட்டுமானத்துறைசார் நிபுணத்துவம் மற்றும் புதிய கட்டுமானத்துறை சார் முறைகள் தொடர்பான அறிவினைக் கொண்ட தேசிய தொழில் தகுதி பெற்ற வல்லுனர்கள் வலையமைப்பினை உருவாக்குவதற்கு ஏதுவான காரணிகளாக அமைந்துள்ளது.