இத்தயாரிப்பானது வெளிப்புற பயன்பாட்டிற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டதாகும். இதன் நீர்க்காப்புத் திறன் காற்றினால் இயக்கப்படும் மழையின் காரணமாக வெளிப்புற சுவர்களுகளில் ஏற்படும் ஈரப்பதத்தினை தடுக்கின்றது.
சிக்கனமானது மற்றும் பூசுவதற்கு எளிதானது. பாரம்பரிய வர்ணப்பூச்சுக்களை விட வெளிப்புற சுவர்களின் நிறத்தினை நீண்ட காலத்திற்கு பாதகாக்கும் மற்றும் புற ஊதா எதிர்ப்பு வண்ண நிறமிகளுடன் கலந்து பாவிக்க முடியும்.
பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்
பூசுவதற்காக தயார் செய்யும் முறை
கலவை செய்யயும் முறை
3.5 லீட்டர் சுத்தமான தண்ணீரை வாளியில் ஊற்றவும்.
டோக்கியோ சுபர் காஸ்ட் இன் 25கி.கிராம் பை முழுவதையும் படிப்படியாக கலக்கியவாறு இடவும் (rpm <500)
ஓர் தடிப்பான தன்மையுடன் 03 நிமிடங்களுக்கு கலக்கவும்.தேவையேற்படின் சரியான கலவையை பெறும் வரை அரை லீற்றர் வரை குறைந்தளவான தண்ணீரை சேர்த்து கலக்கவும்
பூசும் முறை
மேசன் இழுவை அல்லது ஜப்பானிய மிதவையைக் கொண்டு உலந்த மேற்பரப்பில் பிளாஸ்டரை பூசவும்
பிளாஸ்டரை பரப்புவதற்கு ஜப்பானிய மிதவை அல்லது மேசன் இழுவையை மேல்நோக்கி இயக்கவும்
சமமான மற்றம் ஒழுங்கான ப்ளாஸ்டர் மேற்பரப்பினை உருவாக்க நேரான விளிம்பினை பயன்படுத்தவும்.
மிகச்சிறந்த முடிவிற்கு 5-20 மிமீ கலவைத் தடிப்பினை பேணவும்.
24 மணித்தியாளங்களின் பின்னர் பிளாஸ்டரை தண்ணீரை பயன்படுத்தி நிறைவு செய்யுங்கள். (03 நாட்கள்)
சில குறிப்புகள்
டோக்கியோ சுபர் காஸ்ட் கலவையினை தயாரித்த 1 மணித்தியாலங்களுக்குள் பாவிக்கவும்.
ப்ளாஸ்டர் செய்வதற்கு முன்னர் மேற்பரப்பினை ஈரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
வர்ணப் பிளாஸ்டர்களுக்காக தனிப் பயனாக்கப்பட்ட முன்கலவை வடிவமைப்புகளுக்கு எமது விற்பனைப்பிரிவை தொடர்பு கொள்ளவும்.
உள்ளக மற்றும் வெளிப்புற சுவர்களுக்காக விசேடமாக பரிந்துரைக்கப்படுகின்றது.