கட்டுமானத் திரட்டு என்றால் என்ன..?
இத்திரட்டில் மணல். சரளைக்கற்கள் மற்றும் கற்துகள் போன்ற சிறுதுணிக்கை வடிவிலான பொருட்கள் அடங்குகின்றது. மேற்குறிப்பிட்ட பொருட்களை கலந்து பதனப்படுத்தும் போது அவை கடினமான மற்றும் நீடித்துழைக்கும் மூலப்பொருளாக உருவாகின்றது. இக்கலவையானது கட்டமானத்துறையில் ஓர் இன்றியமையாத அங்கமாகும்.
டோக்கியோ சுபர் அக்ரிகேட் (தனி) நிறுவனமானது டோக்கியொ சீமெந்து குழுமத்தின் முழு உரித்துடைய நிறுவனமாகும். இந்நிறுவனமானது டோக்கியோ சுபர் மிக்ஸ் தயார் நிலை கொங்கிரீட் வலையமைப்பிற்கான கட்டுமானத்திரட்டு தேவையை முழுமையாக வழங்குகின்றது. தொம்பே இல் அமைந்துள்ள இக்கட்டுமானத்திரட்டு தொழிற்சாலை டோக்கியோ சுப்பர் சேண்ட் எனும் நாமத்தில் தயாரிக்கப்பட்ட மணலினை உற்பத்தி செய்கின்றது. மேலும், இங்கு ¾ கற்துகள்கள் மற்றும் சரளைக்கற்கள் உயர்தர கிரனைட் கொண்டு தயாரிக்கப்படுவதுடன் அவற்றைக் கொண்டே எமது உயர்தர கொங்கிரீட் தயாரிக்கப்படுகின்றது.
செயற்கை மணல் என்றால் என்ன..?
ஓர் கட்டுமானத்தில் மணலானது முதன்மைப் பங்கு வகிக்கும் ஓர் மூலப்பொருளாகும். இது கட்டிடத்தின் ஆரம்பம்பம் முதல் இறுதி நிறைவுப் பணி வரை பயன்படுத்தப்படுகின்றது. கட்டுமானத்துறை சராசரியாக ஆண்டு தோறும் சுமார் 2 மில்லியன் மி3 அளவிலான மணலை கொங்கிரீட்டிற்காக மட்டுமே பயன்படுத்துகின்றது. நாம் நாடு முழுவதிலுமுள்ள ஆற்றுப்படுக்கைகளிலிருந்து பெறப்படும் மணலைக் பிரதானமாகக் பெற்றுக்கொள்கின்றோம். மேலும் மணலுக்கான தேவை அதிகரித்து வருவதினால் சட்டவிரோத மற்றும் கட்டுப்பாடற்ற மணல் அகழ்வு செயற்பாடுகள் அதிகரித்துள்ளது. அதிகளவான மணல் அழ்வினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் கட்டுமானத்துறையினை உற்பத்தி செய்யப்பட்ட மணல் அல்லது செயற்கை மணலை நடைமுறை மாற்றீடாக பயன்படுத்த வேண்டிய நிலையினை உருவாக்கியுள்ளது.
செயற்கை மணல் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது...?
கொங்கிரீட் தயாரிப்பிற்கு ஏற்றவாறான பண்புகளை பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட வகையான கிரனைட் இனை நொறுக்குவதன் மூலம் செயற்கை மணல் பெறப்படுகின்றது. நொறுக்கப்பட்ட மணலானது மேலதிக மூன்றாம் நிலை பெறுமதி சேர் செயற்பாட்டுக்காக அனுப்பப்படுகின்றது. அங்கு மணல் மேலும் நொறுக்கப்பட்டு மற்றும் கழுவப்பட்டு செயற்கை மணல் உற்பத்தி செய்யப்படுகின்றது. இது ஓர் இயந்திர செயல்முறையினைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதினால் கொங்கிரீட் கலவைக்கு தேவையான பண்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் தயாரிக்கப்பட முடியும்.
எதற்காக செயற்கை மணல்..?
ஆற்று மணல் அல்லது கடல் மணல் போன்றல்லாது, செயற்கை மணலில் களிமண், ஓடுகள் மற்றும் சுண்ணாம்பு துகள்கள் அல்லது கொங்கிரீட்டின் வலு மற்றும் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பிற கரிம மற்றும் இரசாயன கலவைகள் போன்ற எவ்வித அசுத்தங்களும் இருப்பதில்லை. உயர்தர கிரானைட்டை நொறுக்குவதன் மூலம் தயாரிக்கப்பட்ட செயற்கை மணலானது அரிப்பு மற்றும் இரசாயன தாக்குதல்களைத் தாங்கி கொங்கிரீட்டின் ஆயுள் மற்றும் வலுவினை மேம்படுத்த உதவுகிறது.
செயற்கை மணலை உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப செயல்முறை மணல் துகள்களுக்கு வட்டமான விளிம்புகளுடன் ஒரு கடினமான க்யூபிகல் வடிவத்தை அளிக்கிறது, இது சீமெந்து மற்றும் கரடுமுரடான திரட்டுக் இடையில் வலுவான பிணைப்புகளை உருவாக்க அனுமதிக்கிறது. மேலும் இத்தொழில்நுட்பம் செயற்கை மணலின் அளவுகளுக்கமைய தரப்படுத்தப்படுவதினால் ஓர் குறிப்பிட்ட அளவினை தொடர்ந்து பாராமரிக்கவும் விநியோகம் செய்யவும் முடிகிறது.
ஆற்று மணலைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கொங்கிரீட்டுடன் ஒப்பிடுகையில், நேர்த்தியான மற்றும் கரடுமுரடான செயற்கை மணல் துகள்களின் சரியான விகிதாசாரம் அடர்த்தியான கொங்கிரீட் கலவையை உருவாக்குவதுடன் அதே அளவிலான வலுவை வழங்க குறைந்தளவு சீமெந்தே தேவைப்படுகிறது. இது கட்டுமானத்துறைக்கு பாரிய ஆதரவினையும் வலுவான பொருளாதார சலுகைகளையும் வழங்குகின்றது.
பௌதீக சிறப்பியல்புகளின் ஒப்பீடு
சிறப்பியல்புகள் | ஆற்று மணல் | நொறுக்கப்பட்ட மணல் | செயற்கை மணல் |
---|---|---|---|
தரம | நன்றாக தரப்படுத்தப்பட்டது | மத்திம தரப்படுத்தப்பட்டது | நன்றாக தரப்படுத்தப்பட்டது |
மைக்ரோ பைன்ஸ் (<75nm) | குறைவு | அதிகம | நடுத்தரம் |
பொதி திறன் | கோள வடிவம் | கோண வடிவம் | கன வடிவம் |
மேற்தளத்தின் அமைப்பு | மென்மையான | கரடுமுரடான | கரடுமுரடான |
களிமண் மற்றும் வண்டல்; இருப்பு | அதிகம | நடுத்தரம் | குறைவு |
எதற்காக | கனிமம | கிரனைட் | கிரனைட் |
நாம் ஏன் செயற்கை மணலினை பயன்படுத்த வேண்டும்?
முன்னர் குறிப்பிட்டது பொல ஆற்றுமணல் மற்றும் நொறுக்கப்பட்ட மணலை ஒப்பிடுகையில் செயற்கை மணலுக்கு அதன் மிகச்சிறந்த பொதி திறன் காரணமாக கொங்கிரீட்டில் அதேயளவான வலுவை வழங்க குறைந்தளவு சீமெந்தே தேவைப்படுகின்றது. இதிலுள்ள அதிகளவான மைக்ரோ பைன்ஸ்; கொங்கிரீட்டில் கசிவினைக் குறைத்து கொங்கிரீட்டின் ஆயுள் மீது அதிகளவு செல்வாக்கு செலுத்துகின்றது. மேலும் குறைந்தளவிலான மாசுப்பொருட்களை கொண்டிருப்பதினால் கொங்கிரீட்டின் ஆயுள் அதிகரிப்பதற்கு பெரும் பங்காற்றுகின்றது. மேற்குறிப்பிட்ட அனைத்து குணாதிசயங்களும் .கரடுமுரடான மேற்தளம் மற்றும் செயற்கை மணலின் கன வடிவம் போன்றன ஓர் உறுதியான கொங்கிரீட்டிற்கு வழிவகுக்கின்றது.
செயற்கை மணலுக்கு எதிர்மறையாக செயற்படும் அளவுருக்கள் மிகக் குறைவாகவே உள்ளது. அதாவது அதிகளவான தண்ணீருக்கான தேவை, துகள்களின் கன வடிவம் காரணமாக ஏற்படும் குறைந்த வேலைத்திறன் மற்றும் பணி நேரத்தின் போது உயர் அளவிலான நீர் குறைப்பாளர்களின் தேவை என்பவற்றை குறிப்பிட முடியும். மேற்குறிப்பிட்ட எதிர்மறைக் காரணிகளை எதிர்கொள்ள இரு பணிகள் மற்றும் அமுக்க வலுவை மேம்படுத்துவதற்கு பொருத்தமாக கலவையை பயன்படுத்த முடியும்.
உந்துக் காரணிகள் | செயற்கை மணலின் சிறப்பியல்புகள் |
குறைந்தளவான சீமெந்துத் தேவை |
|
குறைந்தளவான கசிவு |
|
அதிக ஆயுள் |
|
அதிக வலு வளர்ச்சி |
|
டோக்கியோ சுபர் சேண்ட் அனது எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் டோக்கியோ சுபர் மிஸ் முன் தயாரிக்கப்பட்ட கொங்கிரீட்டின் தரத்தினை உறுதிப்படுத்தவதற்காக கடமையான தரக்கட்டுப்பாடுகளின் கீழ் தயாரிக்கப்படுகின்றது. இந்த ஒப்பிடமுடியாத ஒருங்கிணைப்புத்திறன் காரணமாக டோக்கியொ சுபர் மிக்ஸ் தயாரிப்பிற்காக அனுப்பப்படும் செயற்கை மணல் மற்றும் கட்டுமானத்திரட்டுக்களின் துகள் அளவுகளை தரப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் எம்மால் முடிகின்றது. இதனால் பரந்த அளவிலான மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை சரியான முறையில் பூர்த்தி செய்யயும் விதத்திலுமான பல்வேறு கொங்கிரீட் தீர்வுகளை வழங்க எம்மால் முடிகின்றது.
டோக்கியோ சுபர் மிக்ஸ் அதன் எந்தவொரு கொங்கிரீட் தீர்வுகளுக்கும் கடல் மணலை பயன்படுத்துவதில்லை என உத்தரவாதம் அளிக்கின்றது. ஏனெனில் கடல் மணல் கொங்கிரீட்டின் தரம் மற்றும் வலிமையில் குறைகளை எற்படுத்த முடியும் என்பதினால் ஆகும்.