டோக்கியோ சுபர் பொன்ட் டைல் அடிசிவ் (STANDARD SET) ஆனது சீமெந்தினை பிரதான மூலப்பொருளாகக் கெண்ட டைல் ஒட்டும் பசையாகும். இதனைப்பயன்படுத்தி செரமிக் போர்சிலேன், டெராகொட்டா, கிரனைட் டைல்கள் போன்றவற்றைச் சீமெந்துத்தரையில் மற்றும் கொங்கிரீட் தரையில பதிக்க முடியும்.
டோக்கியோ சுபர் பொன்ட் டைல் அடிசிவ் (STANDARD SET) இனை சுவர் மற்றும் நிலத்தில் டைல் பதிப்பதற்கு பயன்படுத்த முடியும். இப்பசையானது நீரை அகத்துறிஞ்சி வைத்திருப்பதினால் சுவர் மற்றும் நிலத்தில் டைல்களை பதிப்பதனை இலகுவாக்குவதுடன் உறுதியாகவும் நீண்ட கால பாவனையையும் உறுதிப்படுத்துகின்றது.
பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்






பூசுவதற்காக தயார் செய்யும் முறை
கலவை செய்யயும் முறை

06 லீட்டர் சுத்தமான தண்ணீரை வாளியில் ஊற்றவும்.

டோக்கியோ சுபர் பொன்ட் இன் 25கி.கிராம் பை முழுவதையும் படிப்படியாக கலக்கியவாறு இடவும் (rpm 500)

பூசுவதற்கு ஏற்ற வகையில் மென்மையாகும் வரை 03 நிமிடங்களுக்கு கலக்கவும்

கலவையை 02 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.

மீண்டும் 02 நிமிடங்களுக்கு கலக்கவும். தேவைப்படின் பூசுவதற்று ஏற்ற வகையி;ல் மென்மையாகும் வரை அரை லீட்டர் வரை தண்ணீரை சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும்.
பூசும் முறை

சுத்தமான மற்றும் உலர்ந்த மேற்பரப்பில் 3-5 மி.மீ தடிப்புடனான படை கொண்டதாக சுப்பர் பொன்ட் இனை குறிப்பிடத்தக்க இழுவையுடன் பூசவும்.

20 நிமிடங்களுக்குள் பதிக்கக்கூடிய ஒரு பகுதியில் மட்டும் பசையைப் பூசவும்.

டைல்கள் இடையே 3மி.மீ இடைவெளி விட்டு ஈரமான பசை மீது உறுதியாக அழுத்தவும். பின்னர் இடைவெளிகளை சுத்தம் செய்யவும்.

டைல்களை சரிசெய்வதற்கு இறப்பர் சுத்தியலை பயன்படுத்தவும்.

டைல்களை பதித்த 07 மணித்தியாளங்களுக்கு பின்னர் க்ரவுட் செய்யவும்.
சில குறிப்புகள்

சுபர் பொன்ட் கலவையினை தயாரித்த 2 மணித்தியாலங்களுக்குள் பாவிக்கவும்.

டைல்களை ஈரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பதிக்க வேண்டிய தளத்தினை ஈரலிப்பான ஸ்பொன்ஜ் ஒன்றினால் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்

டைல்களை பதித்ததிலிருந்து 24 மணித்தியாளங்களுக்கு பின்னர் அதனை பயன்படுத்தவும்.

2அடி ஓ 2அடி மற்றும் அதற்கு குறைவான அளவுடைய டைல்களே இதற்காக பரிந்துரைக்கப்படுகின்றது.