தற்போது கட்டிட நிர்மாணத்; துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று திறமையான தொழிலாளர் பற்றாக்குறையாகும். ஆனால் இந்த பற்றாக்குறை நிலையை முன்பே கணித்த டோக்கியோ சீமெந்துக்; குழு கட்டுமான வல்லுனர்களுக்காக தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகாரசபையிடமிருந்து திறன் சான்றிதழைப் பெறுவதற்கான ஒரு பயிற்சித்திட்டத்தை 2001 ஆம் ஆண்டு திருகோணமலையில் தொடங்கியது. மேலும் இச் செயற்பாட்டின் மற்றுமொரு படியாக கட்டுமான வல்லுனர்களின் திறனை மேம்படுத்த தேசிய தொழில் தகுதி சான்றிதழுடன் ஒரு முழுமையான, முறையான பயிற்சி நிறுவனமாக 2012 ஆம் ஆண்டு ஏ.வை.எஸ் ஞானம் கட்டிட நிர்மாண பயிற்சிக் கல்லூரி தம்புள்ளையில் நிறுவப்பட்டது. இச்செயற்திட்டங்களிள் வழங்கப்படும் பயிற்சிகளின் மூலம் கட்டுமான வல்லுனர்கள் தங்களது தகைமைகள் மற்றும் தகுதியில் உயர்நிலையைப் பெற்றுக்கொள்ளக்கூடியதுடன் சிறந்த வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதே டோக்கியோ சீமெந்துக்; குழுவின் முயற்சியாக உள்ளது. மேலும் நிறுவப்பட்ட காலகட்டத்தில் இருந்தே இப்பயிற்சிக்கல்லூரி பல்லாயிரக்கணக்கான கட்டட நிர்மாணத்; துறையில் தகுதிவாய்ந்த கட்டுமான வல்லுனர்களை உருவாக்கியுள்ளதுடன், அவர்கள் நாட்டின் தனித்துவமாக விளங்கும் பல தேசிய கட்டுமானங்களில் தமது பங்களிப்பை வழங்கிவருகின்றனர்.
சான்றிதழ் நிலை பயிற்சிகளை மட்டுமல்லாது டோக்கியோ சீமெந்துக்; குழுமமானது பயிற்சி செயலமர்வுகள்;, கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதுடன் அதில் பரிமாறப்படும் தகவல்கள் ஊடாக துறைசார்ந்த பலருக்கும் எமது அறிவையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதுடன் கட்டிட நிர்மாணத்; துறையின் செயற்திறனின் தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் மற்றும் புதிய தயாரிப்பு பயன்பாட்டு முறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படுகின்றது.
கட்டுமான வல்லுனர்களுக்கான கற்பித்தல் மற்றும் மேம்படுத்தல்கள் மாத்திரமின்றி நூதன கட்டுமானம் மற்றும் பொறியியல் பொறிமுறைகளில் பொறியாளர்கள், பொது மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த தொழிநுட்ப அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிபுணத்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொள்கின்றோம். சீமெந்து பயன்பாட்டில் புதுமையான முறைகள், கொங்க்ரீட் மற்றும் சீமெந்து அடிப்படையிலான தயாரிப்புக்கள் தொடர்பிலான சிறந்த நடைமுறைகள் தொடர்பாகவும், அறிவுப் பகிர்வு போன்ற விடயங்கள் இவ் இலவசக்கருத்தரங்களில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடப்பட வேண்டிய சிறப்பம்சமாகும்.