Filtered Press Release : 2018 Jul
TOKYO SUPER BHC சீமெந்துக்கு தற்போது கட்டிட நிறுவனத்தின் பசுமைதரச் சான்றிதழ் (CIOB Green Mark)
டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் டோக்கியோ சுப்பர் BHC – நீரியல் கலவை (Blended Hydraulic) சீமெந்தானது, பெருமைக்குரிய பசுமைதரச் (Green Mark) சான்றிதழைத் தனதாக்கிக் கொண்டுள்ளது. இலங்கையில் சூழலுக்கு நட்பான கட்டிட செயன்முறைகளை மேம்படுத்துவதற்கான நிபுணத்துவ அமைப்பான இலங்கை கட்டிட நிறுவனத்திடமிருந்து (Ceylon Institute of Builders) இந்தக் கௌரவிப்பைப் பெற்றிருக்கின்றது. இலங்கை கட்டிட நிறுவனத்தின் பசுமை (CIOB Green Mark) விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு ரமாடா ஹோட்டலில் இடம்பெற்ற போது …
டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் டோக்கியோ சுப்பர் BHC – நீரியல் கலவை (Blended Hydraulic) சீமெந்தானது, பெருமைக்குரிய பசுமைதரச் (Green Mark) சான்றிதழைத் தனதாக்கிக் கொண்டுள்ளது. இலங்கையில் சூழலுக்கு நட்பான கட்டிட செயன்முறைகளை மேம்படுத்துவதற்கான நிபுணத்துவ அமைப்பான இலங்கை கட்டிட நிறுவனத்திடமிருந்து (Ceylon Institute of Builders) இந்தக் கௌரவிப்பைப் பெற்றிருக்கின்றது. இலங்கை கட்டிட நிறுவனத்தின் பசுமை (CIOB Green Mark) விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு ரமாடா ஹோட்டலில் இடம்பெற்ற போது இந்த சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. டோக்கியோ சுப்பர் BHC இன் உற்பத்தி செயன்முறை, தரம் மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரப்படுத்தல் கட்டமைப்புக்கமைய கவனமான மதிப்பீடு ஆகியவற்றுக்கமைய CIOB இன் நிபுணத்துவ அணியினால் இந்த சான்று வழங்கப்பட்டிருந்தது.
டோக்கியோ சுப்பர் BHC பொதுப் பாவனைக்கான சீமெந்தாகவும் மற்றும் கடற்கரை ஓரம், சதுப்பு நிலங்கள் போன்றவற்றிற்கான விசேட பாவனை சீமெந்தாகவும் அமைந்துள்ளது. இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் SLS 1247:2015 Strength Class 42.5 N தரச் சான்றிதழை பெற்ற சீமெந்தாக திகழ்கிறது. மேலும், இது உயர் வலிமை மற்றும் நீடித்த தன்மைக்கான சர்வதேச வலிமை வகுப்பு ஐரோப்பய கட்டளைச் சட்டமான BS EN 197-1: 2011ற்கு அமைவான CEM IV/A (V) 42.5N – SR எனும் சான்றிதழையும் பெற்றுள்ளது.
வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த தயாரிப்பு அமைந்துள்ளதுடன், சூழல் பாதுகாப்பு தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தி, நிலைபேறான எதிர்காலத்துக்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது. நிலக்கரிச்சாம்பலை கொண்டு உற்பத்தி செய்யப்படுவதனால் 25% க்கும் அதிகமாக காபனீரொட்சைட் வெளியீட்டை தடுத்து சூழல் வெப்பமடைவதைக் குறைப்பதற்கு துணை புரிவதனால், இச்சீமெந்தானது சூழலுக்கு பாதுகாப்பான பசுமைத் தயாரிப்பாக அமைந்துள்ளது. தனது காபன் வெளியீட்டை மேலும் குறைக்கும் வகையில், டோக்கியோ சுப்பர் BHC என்பது முற்றிலும் காபன் நடுநிலையான புதுப்பிக்கத்தக்க உயிரியல் வலுவைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. சந்தையில் காணப்படும் சூழலுக்கு நட்பான தெரிவாகவும் அமைந்துள்ளது.
டோக்கியோ சுப்பர் BHC இல் காணப்படும் இரசாயன சேர்மானங்களினால், சதுப்பு நிலங்கள், நீருக்கு கீழான நிர்மாணங்கள் அல்லது வெள்ள அனர்த்தம் அடிக்கடி இடம்பெறும் பகுதிகள், உயர் செறிமானம் கொண்ட சல்பேட் அல்லது குளோரைட் மண் கொண்ட பகுதிகள் என்பவற்றில் நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. அத்துடன், உருக்கிரும்புகள் துருப்பிடித்தலைத் தவிர்த்து கட்டிடங்களின் நின்று நிலைக்கும் தன்மையை உறுதி செய்கிறது.
இலங்கை கட்டிட நிறுவனத்தின் பசுமை (CIOB Green Mark) சான்றிதழினால் அதிகளவு சூழலுக்கு நட்பான நிலைபேறான நிர்மாண செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. பசுமை கட்டிடம் (Green Building) தயாரிப்பு சான்று என்பது, அவற்றின் சூழல் தாக்கம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. வலு, நீர், வளங்களின் வினைத்திறன், ஆரோக்கியம், மாசு கட்டுப்படுத்தல் மற்றும் இதர தேவைப்பாடுகளான சூழல் தர முகாமைத்துவ கட்டமைப்புகள் (EQMS) மற்றும் தொழில்நுட்ப வினைத்திறன் / புத்தாக்கம் பற்றியும் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், சூழலுக்கு நீண்ட கால அடிப்படையிலான தாக்கத்தைக் கண்டறியக்கூடிய மதிப்பீட்டுக்கான பரிபூரண வாழ்க்கை வட்ட மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.
இலங்கை கட்டிட நிறுவனத்திடமிருந்து (CIOB) பசுமைதரச் (Green Mark) சான்றை டோக்கியோ சுப்பர் BHC நீரியல் கலவை (blended hydraulic) சீமெந்து பெற்றுக் கொண்டதனூடாக, இலங்கையில் சீமெந்து மற்றும் கொங்கிறீற் உற்பத்தியில் அதிகளவு சூழல் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை காண்பிக்கும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் பெருமளவு புத்தாக்கமான சீமெந்து அடிப்படையிலான பெறுமதி சேர்க்கப்பட்ட தீர்வுகளான பிளாஸ்டர்ஸ் (plasters), புளோரிங் கம்பவுன்ட்ஸ் (flooring compounds), வோட்டர் ப்ரூஃவர்ஸ் (water proofers) மற்றும் டைல் அட்கசிவ்ஸ் (tile adhesives) போன்ற நிர்மாண செயற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்தும் தயாரிப்புகள் பல சூழலுக்கு நட்பான வகையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
டோக்கியோ சீமெந்து குழுமமானது, கட்டிட நிர்மாணத்துறைக்கு உயர் தரமான சீமெந்து மற்றும் கொங்கிறீற் ஆகியவற்றை விநியோகிப்பதில் உயர் நம்பிக்கை பெற்ற நிறுவனம் எனும் கீர்த்தி நாமத்தை பெற்றுள்ளது. இலங்கையின் அபிவிருத்தி வளர்ச்சிப் பாதையில் உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை விநியோகித்துள்ளதுடன், நாடு பூராகவும் பல கட்டிட நிர்மாணிப்புகள் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தயாரிப்புகளினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கொழும்பில் நிர்மாணிக்கப்படும் வானுயர்ந்த கட்டிடங்கள் பலதும் அடங்குவதுடன், மேம்பாலங்கள், புகையிரத பாதைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்புகள் போன்றன இதில் அடங்கியுள்ளன.
படம்:
இடமிருந்து: சம்மேளன அங்கத்தவரான சுதத் அமரசிங்க, தலைவரும் பொறியியலாளருமான கலாநிதி. ரொஹான் கருணாரட்ன, CIOB இன் சம்மேளன அங்கத்தவரான சம்பத் விஜேசேகர, Green Mark சான்றை, டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் எம்.ஜி.எம்.யு. இஸ்மைல் மற்றும் கூட்டாண்மை நிலைபேறாண்மை முகாமையாளர் சாலிந்த கந்தபொல ஆகியோரிடம் கையளிக்கின்றனர்.
The Music Project உடன் இரண்டாவது ஆண்டாகவும் டோக்கியோ சீமெந்து கைகோர்ப்பு
The Music Project க்கான தமது அனுசரணையை இரண்டாவது ஆண்டாகவும் வழங்க டோக்கியோ சீமெந்து குழுமம் முன்வந்துள்ளது. The Music Project என்பது அரச சார்பற்ற நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், குறைந்த வசதிகள் படைத்த இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை இசை ஊடாக மேம்படுத்துவதற்கு வலுவூட்டும் திட்டமாக இது அமைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்துக்கு டோக்கியோ சீமெந்து குழுமம் அனுசரணை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பங்காண்மை ஊடாக, டோக்கியோ சீமெந்து குழுமம் முல்லைத்தீவு, பாளிநகர் மகா வித்தியாலயத்தைச் …
The Music Project க்கான தமது அனுசரணையை இரண்டாவது ஆண்டாகவும் வழங்க டோக்கியோ சீமெந்து குழுமம் முன்வந்துள்ளது. The Music Project என்பது அரச சார்பற்ற நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், குறைந்த வசதிகள் படைத்த இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை இசை ஊடாக மேம்படுத்துவதற்கு வலுவூட்டும் திட்டமாக இது அமைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்துக்கு டோக்கியோ சீமெந்து குழுமம் அனுசரணை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான பங்காண்மை ஊடாக, டோக்கியோ சீமெந்து குழுமம் முல்லைத்தீவு, பாளிநகர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 110 மாணவர்களுக்கும், மாவத்தகம, ஸ்ரீ குணாநந்த கனிஷ்ட வித்தியாலயத்தின் 65 மாணவர்களுக்கும் இசையை பயில்வதற்கு அனுசரணை வழங்குகிறது. இந்தத் திட்டத்தினூடாக, தமக்கு பிடித்த இசைக்கருவியை இவர்கள் பயில்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள ஆறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களில் இவர்களும் அடங்கியுள்ளனர். நாடு முழுவதிலும் வௌ;வேறு பகுதிகளில் அழைப்பின் அடிப்படையில் இசைக் கச்சேரிகளை முன்னெடுக்கும் Music Project Orchestra கச்சேரியில் இவர்கள் பங்கேற்பார்கள்.
பாளிநகரில் முன்னெடுக்கப்பட்ட orchestra நிகழ்வில் 110 சிறுவர்கள், பாடசாலை நேரத்தை தொடர்ந்து இசை பயில்வதற்காக ஆர்வத்துடன் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர். இவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக ஈடுபடக்கூடிய ஒரே மேலதிக செயற்பாடாக இது அமைந்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்களும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று, தமது பிள்ளைகள் இசைக்கருவிகளை பயில்வதை கண்டு மகிழ்ச்சியடைகின்றனர். இதுபோன்ற அனுபவத்தை குருநாகலிலும் அவதானிக்க முடிந்தது. மர நிழலில், பாய்களில் மாணவர்கள் தமது ஆசிரியர்களுடன் அமர்ந்து, இசையை பயில்வதுடன், இந்த முறையினூடாக மாணவர்களுக்கு இலகுவாகவும், துரிதமாகவும் இசையை பயில்வதற்கு முடியும்.
முல்லைத்தீவு, பாளிநகர் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் இசை பாடத்தில் ஈடுபடுகின்றனர்.
பங்குபற்றுநர்கள் வயலின், வியோலா, செலோ, ட்ரம்பட், ஃபிரெஞ்ச் ஹோர்ன் மற்றும் வௌ;வேறு வகையான சாதனங்களை முழுநேர ஆசிரியர்கள் மற்றும் விஜயம் செய்யும் தன்னார்வ செயற்பாட்டாளர்களிடமிருந்து பயில்கின்றனர். மாணவர்கள் இசையை மட்டும் பயிலாமல், ஒன்றிணைவு, ஏனையவர்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் சுய ஆளுமை போன்ற திறன்களையும் பயில்கின்றனர். சிறுவர்கள் மத்தியில் ஒன்றிணைவை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பின்தங்கிய இரு விவசாய சமூகங்களை இசையினூடாக ஒன்றிணைத்துள்ளது. இந்த குழு வருடத்தில் இரு தடவைகள் ஒன்றுகூடி, வதிவிட நிகழ்ச்சியை முன்னெடுத்து பகிரப்பட்ட இசையால் ஒன்றிணைக்கப்படுகிறது.
மாவத்தகம, ஸ்ரீ குணாநந்த கனிஷ்ட வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த இசை பாடத்தில் பங்கேற்ற மாணவர்களை காணலாம்.
2011ஆம் ஆண்டில் வடக்கிலும், தெற்கிலும் இந்தத் திட்டம் இயங்க ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில், பாடசாலைகளில் வளங்களை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியிருந்ததுடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை செவிமடுப்பதாக அமைந்திருந்தது. அம்பாறை, குருநாகல், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இந்தத் திட்டம் பயிற்சிகளை வழங்கியிருந்ததுடன், 3000 க்கும் அதிகமான பதிவு செய்யும் இயந்திரங்கள் மற்றும் கற்பித்தல் சாதனங்களை விநியோகித்திருந்தது.
தற்போது ஏழாவது ஆண்டாக Music Project முன்னெடுக்கப்படுவதுடன், பிள்ளைகள் தமிழ் மற்றும் சிங்கள இசைகளை பயின்று, ஒன்றிணைந்த இலங்கையில் அங்கம் வகிப்பதையிட்டு பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. நாடு முழுவதிலும் orchestra அங்கமாக பயணிப்பதனூடாக அவர்களுக்கு வௌ;வேறு கலாசாரங்களை பற்றி அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள், பொதுப் பரீட்சைகளிலும், பிரத்தியேக திறன்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆர்வலர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் பங்களிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்திருந்தன. டோக்கியோ சீமெந்து கம்பனி இந்த ஆண்டில் அனுசரணையாளராக இணைந்துள்ளது. நாளைய தலைவர்களுக்கான உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்துவது எனும் நிறுவனத்தின் நம்பிக்கையின் பிரகாரம், புதிய சாதனங்களை பயன்படுத்தி உலகை வெல்ல வாய்ப்பை வழங்க டோக்கியோ சீமெந்து முன்வந்துள்ளது.
சமூக நலன் மற்றும் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை தனது நிறுவனத்தின் உள்ளக அங்கமாக கொண்டுள்ள டோக்கியோ சீமெந்து நிறுவனம், நாட்டை வளமூட்டும் தனது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்த வண்ணமுள்ளது. இந்நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற செயற்பாடுகளில் டோக்கியோ சீமெந்து பாடசாலைகளுக்கிடையிலான Super Quiz, தம்புளையில் அமைந்துள்ள ஏவைஎஸ் ஞானம் நிர்மாண பயிற்சி கல்வியகம் மற்றும் Foundation of Goodness அமைப்புடனான பங்காண்மை ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. மேலும், பவளப்பாறைகள் மறுசீரமைப்பு மற்றும் கண்டல் காடுகளை வளர்த்தல் போன்றவற்றை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
படங்கள்:
டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம், The Music Project காப்பாளர் ஷலினி விக்ரமசூரிய ஆகியோர் அனுசரணைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றனர்.
காப்பகம்
2024 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2023 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2022 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2021 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2020 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2019 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2018 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2017 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |