Filtered Press Release : 2017 Oct


News Image
திருகோணமலை கடற்கரைகளை தூய்மையாக்கும் நடவடிக்கையில் டோக்கியோ சீமெந்து மற்றும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்த சகலருக்கும் நன்றி

டோக்கியோ சீமெந்து நிறுவனம் மற்றும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை திருகோணமலை மாவட்ட அலுவலகம் ஆகியன இணைந்து திருகோணமலை கடற்கரை பகுதிகளை சுத்திகரிக்கும் நடவடிக்கைகளில் கைகோர்த்திருந்த சகல தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளன. தேசிய கடற்கரை மற்றும் கடல்வள பாதுகாப்பு வாரம் 2017 செயற்பாடுகளின் ஒரு அங்கமாக இந்த திருகோணமலை கடற்கரைப்பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தன்னார்வ அடிப்படையில் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் 20 ட்ரக்களில் குப்பைகளையும் கடற்கரையை அசுத்தப்படும் ஏனைய கழிவுகளையும் சேகரித்திருந்தனர். பாடசாலை

டோக்கியோ சீமெந்து நிறுவனம் மற்றும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை திருகோணமலை மாவட்ட அலுவலகம் ஆகியன இணைந்து திருகோணமலை கடற்கரை பகுதிகளை சுத்திகரிக்கும் நடவடிக்கைகளில் கைகோர்த்திருந்த சகல தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளன. தேசிய கடற்கரை மற்றும் கடல்வள பாதுகாப்பு வாரம் 2017 செயற்பாடுகளின் ஒரு அங்கமாக இந்த திருகோணமலை கடற்கரைப்பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தன்னார்வ அடிப்படையில் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் 20 ட்ரக்களில் குப்பைகளையும் கடற்கரையை அசுத்தப்படும் ஏனைய கழிவுகளையும் சேகரித்திருந்தனர்.



பாடசாலை மாணவர்கள், பிரதேசவாசிகள், திருகோணமலை ரொட்டரி கழக (Club – 1598) அங்கத்தவர்கள், முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய படை வீரர்கள், இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், திருகோணமலை பட்டினமும், சூழலும், மூதூர், கிண்ணியா மற்றும் குச்சவெளி பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகம் போன்ற அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் மீன்பிடித்திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். பிரதேசத்தில் காணப்படும் இதர நிறுவனங்களான பிரீமா, லங்கா ஐஓசி மற்றும் உள்ளூர் நீச்சல் கழகங்கள் போன்றனவும் இந்த நடவடிக்கையில் இணைந்து தமது பங்களிப்பை வழங்கியிருந்தன.



திருகோணமலை குடாவின் அழகிய கடற்கரைகளின் வனப்பை மீள நிறுவும் நோக்குடன், திருகோணமலையில் காணப்படும் டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை பிரதிநிதிகளுடன் கைகோர்த்து இந்த திட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நடவடிக்கைகாக ஊடகங்கள் வழங்கியிருந்த பிரச்சாரங்களுக்கு டோக்கியோ சீமெந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், இந்த செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பெருமளவானோரை ஈர்ப்பதற்கு இந்த பிரச்சார உதவிகள் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

Facebooktwitterredditpinterestlinkedinmail

Archive

2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2025JanFebMarAprMayJunJulAugSepOctNovDec