எமது கொள்கைகள்

டோக்கியோ சீமெந்து (லங்கா) பி.எல்.சி நிறுவனமானது 1982 ஆம் ஆண்டில் ஜப்பானின் மிட்சுய் மைனிங் நிறுவனம் (பின்னர் நிப்பான் கோக் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்தின்; கீழ் கொண்டுவரப்பட்டது) மற்றும் எமது தொலைநோக்குப் பார்வையுடைய நிறுவனர் தலைவர், அமரர் தேசமன்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் தலைமையின் கீழ் இலங்கையின் சென்.அந்தோனிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான ஒர் கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது. இந்நிறுவனம் முதல் சீமெந்து நிறுவன உற்பத்தியாளராக 1984 ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முற்றுமுழுதாக தனியாருக்குச் சொந்தமான நிறுவனமாகும் என்பதுடன் டோக்கியோ சீமெந்து (லங்கா) பி.எல்.சி நிறுவனமானது நாட்டின் கட்டுமானத் துறைக்கு ஓர் புதியதொரு அடையாளத்தை உருவாக்கியுள்ளதை மறுக்க முடியாது.

டோக்கியோ சீமெந்து குழுமம் தற்போது இலங்கையில் உயர்தரத்திலான சீமெந்து, கொங்கிரீட் மற்றும் சீமெந்து சார் தயாரிப்புகளை வழங்கும்; போட்டித்தன்மை மிக்க சந்தையில் முன்னிலை வகிக்கின்றது. மேலும் டோக்கியோ சீமெந்து நிறுவனமானது எமது நாட்டில் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்ட சீமெந்து மற்றும் கொங்கிரீட் சோதனை ஆய்வுகூடத்தினைக் கொண்டு இயங்கும் ஒரேயொரு நிறுவனமாகும். தரம் என்பதை முன்னிலையாகக் கொண்டு செயற்படும் டோக்கியோ சீமெந்து நிறுவனமானது சுற்றுச்சூழல் முகாமைத்துவ அமைப்பிற்கான சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தின் 14001 சான்றிதழை பெற்ற முதலாவது உள்நாட்டு நிறுவனமாவதுடன், சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தின் 9001 எனும் தர முகாமைத்துவ அமைப்புகளுக்கான சான்றிதழை பெற்ற முதல் சீமெந்து உற்பத்தி நிறுவனமாகவும் திகழ்கின்றது. எமது டோக்கியோ சுபர் வர்த்தக நாமத்திலான சீமெந்தின் சுற்றுச்சூழலுக்கு இசைவான உற்பத்தி செயன்முறை காரணமாக “கிரீன் மார்க்” எனும் சான்றிதழுடன் சந்தையில் கிடைக்கின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

டோக்கியோ சீமெந்து நிறுவனமானது இலங்கையின் முதல் தானியங்கி சீமெந்து தொழிற்சாலையை கொண்டுள்ளதுடன் பல புத்தாக்க தொழில் முயற்சிகளை முதன்முதலாக அறிமுகப்படுத்திய பெருமை அதனைச் சாரும். சந்தை முன்னோடி என்ற வகையில் ‘’கொங்கிரீட் கட்டிடங்களுக்குள் ஓர் பசுமைச் சுற்றாடல்;;’’ எனும்; தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அதற்காக அனைத்து முன்னேடுப்புக்ளையும் மேற்கொள்வோம்; என உறுதியளித்துள்ளோம். அதன்படி படிப்படியான கட்டங்களைக் கொண்ட ஒரு பயணமாக எங்களையும் நமது எதிர்கால சந்ததியினரையும் பசுமையான, ஆரோக்கியமான, நிலையான நாளைய நோக்கி அழைத்துச் செல்கின்றோம். தற்போது எமது 23 மெகாவாட் திறன் கொண்ட பசுமை ஆற்றலைக் கொண்ட எங்கள் உயிரி மின்வலுத் திட்டம், கடந்த பத்து ஆண்டுகளாக இலங்கையில் நீர் ஆற்றல் வலு அல்லாத புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தியின் மிகப்பெரிய பங்காளராக எங்களை உருவாக்கியுள்ள அதேவேளை எமது கார்பன் உமிழ்வுத்தடம் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதுடன் நாம் 100 வீதம் தன்னிறைவு எரிபொருள் தயாரிப்பாளராக விளங்குகின்றோம்.

ஒரு பெருநிறுவனம் என்ற எண்ணக்கருவில் எமது நாட்டின் சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வெற்றிகரமாக இணைத்து அதன் மக்களையும் சுற்றுச்சூழலையும் வளப்படுத்த எமது நிறுவனம் முன்னின்று செயற்படுகின்றது என்பதை மறுக்க முடியாது.

எங்கள் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முக்கியமான சுற்றுச்சூழல் பாதுப்பு முயற்சிகளான முருங்கைக்கற்பாறைகளை பாதுகாக்கும் திட்டம், சதுப்பு நில கண்டல் தாவர மீள் வளர்ப்பு மற்றும் வனத்தாவர நாற்று வேலைத்திட்டம் போன்றன அவற்றின் ஒரு பகுதியாவதுடன், நமது நாட்டின் நிகரற்ற உயிரியல் பல்வகைமையை தக்கவைக்க சுற்றுச்சூழலின் முக்கியமான பகுதிகளைப் பாதுகாப்பது எமது கடமையென்பதில் நாம் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இம்முயற்சிகள் ஊடாக இலாபகரமான வளர்ச்சியினை எட்டுவது ஒவ்வொரு பெருநிறுவன பங்காளரினதும் கைகளில் உள்ளது என்பதனை நாம் நிரூபித்துள்ளதுடன் எமது முதன்மை வணிக நோக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தொடர்பான நிலையான குறிக்கோள்கள் மற்றும் சமூக நலன் எமது பங்குதாரர்களின் நம்பிக்கையினை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

டோக்கியோ சீமெந்து நிறுவனமானது புத்தாக்க செயல்முறைகள், நவீன தொழிற்சாலைகள் மற்றும் உயர்தர மூலப்பொருட்களில் தொடர்ந்து தனது முதலீடுகளை மேற்கொள்கின்றது. அத்துடன் எமது நாட்டின் வளர்ச்சியினை வெளிக்காட்டும் திட்டங்களுக்கு பொருத்தமான தரமான தயாரிப்புக்களை வழங்குதல், வானுயரக் கட்டிடங்கள் ,மேற் பாலங்கள் ,இரயில் பாதைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்புக்கள் போன்ற தேசத்தினை கட்டியெழுப்புவதில் ஒரு பங்காளராக அதன் பாரம்பரியத்தை மற்றும் பங்களிப்பினை தொடர்ந்தும் உறுதிப்படுத்துகின்றது.