இலங்கை கட்டட நிர்மாணத்; துறையானது தற்போது நிபுணத்துவம் வாய்ந்த கட்டுமான வல்லுனர்களின் கடுமையான பற்றாக்குறையில் இயங்கும் ஒரு துறையாக மாறியுள்ளது. குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான அபிவிருத்தித் திட்டங்களினால் குறித்த துறையில் முறையான பயிற்சியுடன் கூடிய கட்டுமானத் தொழிலாளர்களின் பற்றாக்குறை இலங்கையின்; கட்டுமானத்துறைக்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுள் மிகக் குறைந்த சதவீதமானவர்கள் மட்டுமே தங்கள் துறையில் முறையான பயிற்சி பெற்றுள்ளனர். பலரும் அவர்களுடைய சக ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அவர்களுக்குக் கற்பித்த விதத்திலேயே தமது பணிகளை முன்னெடுக்கின்றார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மேசன்கள் மட்டுமே தங்கள் தொழில்முறை திறனை நிரூபிக்க அரசாங்க அங்கீகாரம் பெற்ற திறமைச்; சான்றிதழ் மற்றும் பயிற்சிகளை பெற்றுள்ளனர். மேலும் இத்துறையின் முன்னணி தொழில்துறை சங்கங்களான இலங்கை கட்டுமானத் தொழிற்; கழகத்தின் மற்றும் முழு கட்டுமானத் துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை கட்டிடக்கலை பயிற்சி நிறுவகம் போன்றவற்றால் திறன்களை மேம்படுத்துவதற்கான முழுமையான தேவைகள் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெறாத ஒரு தொழிலாளியுடன் ஒப்பிடும்போது அங்கீகாரம் பெற்ற திறமைச் சான்றிதழ் கொண்ட ஒரு கட்டுமானத் தொழிலாளருக்கு அதிக வருமானம் ஈட்ட வாய்ப்புக்கள் உண்டு. மேலும், வளர்ந்து வரும் நாடுகளான தென் கொரியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தொழிற்; சான்றிதழ் பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான கேள்வி அதிகமாக உள்ளது.

content image
content image

திறமையான கட்டட நிர்மாண தொழிலாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கத்துடன், ஏ.வை.எஸ் ஞானம் கட்டட நிர்மாண பயிற்சிக் கல்லூரி டோக்கியோ சீமெந்துக்; குழுமத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. இது தம்புள்ளையில் அமைந்துள்ளதுடன், இந்த பயிற்சிக் கல்லூரியானது 2012 ஆம் ஆண்டு டோக்கியோ சீமெந்துக்; குழுமத்தின் ஸ்தாபகர், தலைவர் தேசமான்ய அமரர். ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


இந்த பயிற்சிக்கல்லூரியில் ஒரே தடவையில் 50 பேருக்கு பயிற்சிகளை வழங்கக்கூடிய வகையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய வீடமைப்பு பயிற்சி திட்டங்கள் தங்குமிட வசதியுடன் நடாத்தப்படுகின்றன. இக்கட்டுமான பயிற்சி நிலையமானது தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுவதுடன் மூன்றாம் நிலைக்கல்வி ,தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


இப்பயிற்சிக் கல்லூரி;யில் வழங்கப்படும் பயிற்சித்திட்டங்கள் :


  • மூன்றாம் நிலைக்கல்வி ,தொழிற்கல்வி ஆணைக்குழுவினால்; அனுமதியளிக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்களுக்கான தேர்ச்சி அடிப்படையிலான தேசிய தொழில் தகுதிச் சான்றிதழ் நிலை 3 இற்கான தேர்ச்சி அடிப்படையிலான பயிற்சி. இப் பயிற்சித்திட்டத்தில் 2 மாத கால கல்லூரிப் பயிற்சி மற்றும் 4 மாத தொழிற் பயிற்சி உள்ளடக்கப்பட்டுள்ளது.
  • தேசிய தொழில் தகுதிச் சான்றிதழ் நிலை 3 ஐ இலக்காகக் கொண்ட முன் கற்றலை அங்கீகரித்தல்.

இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சுமார் 1,000 பயிலுனர்கள் இங்கு நடாத்தப்பட்ட தேசிய தொழில் தகுதிப் பரீட்சையை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை மதிப்பீட்டாளர்களின் மேற்பார்வையில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.


மேலும் 2012 ஆம் ஆண்டு கல்வி மற்றும் பயிற்சி - கட்டுமான பயிற்சி திட்டத்திற்காக இலங்கை கட்டுமானத் தொழிற்; கழகத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு விருதினைப் பெற்றுக்கொண்டது. ஓர் பெரு நிறுவனமாக நிலையான வணிக நடைமுறைகள் ஊடாக சமூகத்திற்கான அதன் பங்களிப்பிற்கு இவ்விருது டோக்கியோ சீமெந்து நிறுவனத்திற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.