இலங்கையில் தனியாருக்கு சொந்தமான முதலாவது சீமெந்து உற்பத்தியாளர் மற்றும் எமது நாட்டின் மிகப் பெரிய கனரக தொழிற்சாலைகளில் ஒன்றாகும் என்ற பெருமையினைப் பெற்ற டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி 1982 ஆம் ஆண்டு கூட்டிணைக்கப்பட்டது.

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி ஆனது இலங்கையின் மிகப் பழமையான வெளிநாட்டு கூட்டிணைவுடன் நிறுவப்பட்ட தனியார் நிறுவனமாக நிப்பான் கோக் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனம் (முன்னர் ஜப்பானின் மிட்சுய் மைனிங் நிறுவனம் என அழைக்கப்பட்டது) மற்றும் இலங்கையின் சென்.அந்தோனிஸ் உடன் ஒருங்கிணைந்து நிறுவனர் தலைவர், அமரர் தேசமன்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் தலைமையின் கீழ் நிறுவப்பட்டது.

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி ஆனது 1984 ஆம் ஆண்டு கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

2017 ஆம் ஆண்டு டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி சிங்கப்பூரின் யூ.பீ.இ. தனியார் நிறுவனத்துடன் புதிய தொழில்நுட்ப ஒத்துழைப்பில் இணைந்து கொண்டது.

டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி செயற்பாடுகளாக சாதாரண போர்ட்லண்ட் சீமெந்து, போர்ட்லண்ட் போசோலானா சீமெந்து மற்றும் கலப்பு ஹைட்ரோலிக் சீமெந்து போன்ற உற்பத்திகளை குறிப்பிட முடியும்.

அத்துடன் 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு ஹைட்ரோலிக் சீமெந்து தயாரிப்பினை டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆரம்பித்தது.

மேலும் சீமெந்தினை அடிப்படையாகக் கொண்ட உலர் சீமெந்துக் கலவை தயாரிப்புக்களான டைல் பசைகள், நீர் உட்புகா தயாரிப்புக்கள்,சுவர் கலவைகள், நிலத்திற்கான தீர்வுகள், முன் கலவை கொங்கிரீட்,உடன் தயாரித்த கொங்கிரீட் கலவை போன்ற உற்பத்திகளை டோக்கியோ சீமெந்து நிறுவனம் வழங்குகின்றது.

அத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியிலும் டோக்கியோ சீமெந்து நிறுவனம் தனது பங்களிப்பினை வழங்குகின்றது.

டோக்கியோ சீமெந்து குழுமம் 2020 மார்ச் மாத இறுதி வரையில் நான்கு துணை நிறுவனங்களை கொண்டுள்ளது.