Filtered Press Release : 2019 Sep
“BUILDING BEYOND 2019” வளர்ந்து வரும் பொறியியல் மாநாடு டோக்கியோ சீமெந்தினால் ஏற்பாடு
‘BUILDING BEYOND 2019’ வளர்ந்து வரும் பொறியியல் மாநாட்டை டோக்கியோ சீமெந்து அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 21ஆம் திகதி BMICH இல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், கலந்து கொண்ட பேச்சாளர்கள், நிர்மாணத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். மொரட்டுவ, பேராதனை, றுகுணு, ஸ்ரீ ஜயவர்தனபுர, தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பொறியியல் பீடங்களில் மற்றும் SLIIT இல் பயிலும் 250க்கும் அதிகமான இறுதியாண்டு மாணவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். மேலும், SEC, வீதி அபிவிருத்தி …
‘BUILDING BEYOND 2019’ வளர்ந்து வரும் பொறியியல் மாநாட்டை டோக்கியோ சீமெந்து அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 21ஆம் திகதி BMICH இல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், கலந்து கொண்ட பேச்சாளர்கள், நிர்மாணத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். மொரட்டுவ, பேராதனை, றுகுணு, ஸ்ரீ ஜயவர்தனபுர, தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பொறியியல் பீடங்களில் மற்றும் SLIIT இல் பயிலும் 250க்கும் அதிகமான இறுதியாண்டு மாணவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். மேலும், SEC, வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர் வழங்கல் சபை, மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, போர்ட் சிட்டி மற்றும் இதர சில முக்கியமான அரச துறையைச் சேர்ந்த நிர்மாண செயற்திட்டங்களில் பங்கேற்றுள்ளவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
BUILDING BEYOND 2019 மாநாட்டில் ஜப்பானின், சப்பொரொவிலுள்ள ஹொகைதோ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இணை பேராசிரியர் கலாநிதி. மைக்கல் ஹென்ரி உரையாற்றுகின்றார்.
‘BUILDING BEYOND 2019” மாநாட்டின் பிரதான அம்சமாக, ஜப்பானின், சப்பொரொவிலுள்ள ஹொகைதோ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இணை பேராசிரியர் கலாநிதி. மைக்கல் ஹென்ரி கலந்து கொண்டு, ‘கொங்கிறீற் கட்டிடங்களின் நீடித்த பாவனை பிரச்சினைகள்’ எனும் தலைப்பில் விரிவுரை ஆற்றியிருந்தார். பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து இந்த தலைப்புக்கு பெருமளவு வரவேற்பு காணப்பட்டது.
BUILDING BEYOND 2019 இல் விரிவுரையாற்றிய ஏனையவர்களில், இலங்கை நிர்மாண துறை சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் செயலாளர் நாயகமுமான பொறியியலாளர் நிஸங்க விஜேரட்ன அவர்களின் ‘நிர்மாணத்துறையின் தற்போதைய நிலை மற்றும் செலவு நிர்வாக நடவடிக்கைகள்’ எனும் தலைப்பில் உரையாற்றியிருந்தார்.
‘BUILDING BEYOND 2019’ மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகரும் CECB இன் முன்னாள் பொது முகாமையாளருமான பொறியியலாளர் கே.எல்.ஸ்ரீலால் சஹாபந்து, தேசியமட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சில பாரியளவு நிர்மாணத்திட்டங்களின் போது எதிர்கொண்டிருந்த சவால்கள் பற்றிய விளக்கங்களையும் வடிவமைப்புகள் பற்றிய தகவல்களையும் வழங்கியிருந்தார். இந்த சவால்களை வெற்றி கொள்வதற்கு, பகுப்பாய்வு நுட்பங்கள் எவ்வாறு உதவியிருந்தன என்பது பற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தார்.
BUILDING BEYOND 2019 மாநாட்டில் இலங்கை நிர்மாண துறை சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் செயலாளர் நாயகமுமான பொறியியலாளர் நிஸங்க விஜேரட்ன உரையாற்றுகின்றார்.
டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு. இஸ்மைல் தமது விளக்கவுரையில், ‘Turbo Blending’ ஐ பயன்படுத்துவதன் அனுகூலம் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தார். சாம்பல் துகள்களை கொண்டு, உயர் தரம் வாய்ந்த பிளென்டட் சீமெந்து தயாரிப்பதனூடாக, பிரத்தியேகமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தார். BHC தயாரிப்புக்கு உயர் தரம் வாய்ந்த சீமெந்து வகைகளை பிளென்ட் செய்வதன் அனுகூலங்கள் பற்றிய விளக்கங்களையும் இவர் வழங்கியிருந்தார். BHC க்கு மாற்றமடைவதன் முக்கியத்துவம் பற்றியும் இவர் விளக்கங்களை வழங்கியதுடன், இது சூழலுக்கு நட்பானதாகவும், நிலைபேறானதாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
BUILDING BEYOND 2019 மாநாட்டில் மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் கே.எல்.ஸ்ரீலால் சஹாபந்து உரையாற்றுகின்றார்.
மாநாட்டின் இறுதியில் இடம்பெற்ற குழுநிலை கலந்துரையாடலின் வளவாளராக டோக்கியோ சுப்பர்மிக்ஸ் (பிரைவட்) லிமிடெட் RMC சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஜனக பெரேரா செயலாற்றியிருந்தார். இந்த அமர்வினூடாக பங்குபற்றுநர்களுக்கு தமது ஆய்வு செயற்திட்டங்கள் மற்றும் கொங்கிறீற் தொடர்பான பரந்தளவு விடயங்கள் பற்றி தெளிவுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு தமது அறிவை, நிஜ வாழ்க்கையில் தீர்வுகளாக மாற்றிக் கொள்வதற்கு எந்த வகையில் மாற்றியமைப்பது என்பது பற்றிய விளக்கங்களையும் இந்த குழு வழங்கியிருந்தது.
BUILDING BEYOND 2019 மாநாட்டில் டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு. இஸ்மைல் உரையாற்றுகின்றார்.
தொழிற்துறை-கல்வியகசார் பங்காண்மையை ஏற்படுத்தும் நோக்கில் டோக்கியோ சீமெந்து குழுமம் BUILDING BEYOND 2019 நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதனூடாக அறிவுபகிர்வை ஏற்படுத்தி, தேசத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் இளம் பொறியியலாளர்கள் மத்தியில் புத்தாக்கத்தை தூண்டுவது இலக்காக அமைந்திருந்தது.
காப்பகம்
2024 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2023 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2022 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2021 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2020 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2019 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2018 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2017 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |