Filtered Press Release : 2018 Mar


News Image
டோக்கியோ சீமெந்து விநியோகிஸ்தர் மாநாடு 2018 இல் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு கௌரவிப்பு

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி, தனது வருடாந்த சீமெந்து விநியோகிஸ்தர் மாநாட்டை அண்மையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. இதன் போது சிறப்பாக செயலாற்றியிருந்த விநியோகிஸ்தர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் சிறந்த விநியோகிஸ்தருக்கான விருதை வென்றிருந்ததுடன், மட்டக்களப்பு ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹார்ட்வெயார் டீலர்ஸ் இரண்டாமிடத்தையும், மட்டக்களப்பு அஹிலா ஹார்ட்வெயார் மூன்றாமிடத்தையும் பெற்றிருந்தன. நாடு முழுவதையும் சேர்ந்த 300க்கும் அதிகமான சிறப்பாக செயலாற்றியிருந்த டோக்கியோ சீமெந்து விநியோகிஸ்தர்கள் கடந்த ஆண்டில்

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி, தனது வருடாந்த சீமெந்து விநியோகிஸ்தர் மாநாட்டை அண்மையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. இதன் போது சிறப்பாக செயலாற்றியிருந்த விநியோகிஸ்தர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் சிறந்த விநியோகிஸ்தருக்கான விருதை வென்றிருந்ததுடன், மட்டக்களப்பு ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹார்ட்வெயார் டீலர்ஸ் இரண்டாமிடத்தையும், மட்டக்களப்பு அஹிலா ஹார்ட்வெயார் மூன்றாமிடத்தையும் பெற்றிருந்தன.

நாடு முழுவதையும் சேர்ந்த 300க்கும் அதிகமான சிறப்பாக செயலாற்றியிருந்த டோக்கியோ சீமெந்து விநியோகிஸ்தர்கள் கடந்த ஆண்டில் வெளிப்படுத்தியிருந்த சிறந்த பெறுபேறுகளுக்காக கௌரவிக்கப்பட்டிருந்தனர். இதில் 16 சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்தவர்களும், 175க்கும் அதிகமான வெற்றியாளர்களும் வௌ;வேறு பிரிவுகளில் பரிசுகளை பெற்றிருந்தனர்.

நிறுவனத்தினால் எய்தப்பட்டிருந்த சில சாதனைகள் குறித்து டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது விநியோகிஸ்தர்; வலையமைப்புடன் நாம் பேணி வரும் உறவு என்பது நம்பிக்கை மற்றும் பரஸ்பர மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. டோக்கியோ சீமெந்து பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, சந்தையில் தனது முன்னோடியாக திகழ்கிறது. நுகர்வோரால் அல்லது பாரிய திட்டமொன்றினால் எமது எந்தவொரு சீமெந்து, கொங்கிறீற் கலவை அல்லது பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்பை கொள்வனவு செய்யும் போதும், இந்த உறவு மேலும் உறுதி செய்யப்படுகிறது. நாம் மேலும் சிறப்பாக செயலாற்றுவதற்கு தூண்டப்படுகிறோம். விநியோகிஸ்தர் ஒன்றுகூடல் மாநாடு என்பது அவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டி ஊக்கமளிக்கும் வைபவமாக அமைந்துள்ளது’ என்றார். இந்த நிகழ்வில் டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் அவர்களுடன், நிர்வாகம், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை அணிகளின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

‘எமது விநியோகிஸ்தர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களின் பங்களிப்பினூடாக எமது வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது. எமது சந்தைப்படுத்தல் சூழலில் காணப்படும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும், எமது வாடிக்கையாளர்களுக்கு மேலதிக பெறுமதியை சேர்ப்பதற்கும் அவர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்பு எமக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. அவர்களின் பங்களிப்பை நாம் கௌரவிப்பதுடன், அவர்களை வெற்றிகரமான வியாபாரங்களை இயங்குவதற்கு எமது தொடர்ச்சியான வாக்குறுதியை வழங்குகிறோம்’ என டோக்கியோ சீமெந்து குழுமத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷந்த உடவத்த தெரிவித்தார்.

டோக்கியோ சீமெந்து குழுமம் தனது விநியோகிஸ்தர் வலையமைப்புடன் 30 ஆண்டுகளுக்கு மேலான உறவை வெற்றிகரமாக கட்டியெழுப்பியுள்ளது. இந்த வலையமைப்பு நம்பிக்கை மற்றும் பற்றுறுதி என்பவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. விநியோகிஸ்தர்; மாநாடு ஊடாக தனது வியாபார வலையைமப்பைச் சேர்ந்தவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். வருடாந்த விநியோகிஸ்தர்; மாநாட்டுக்கு மேலதிகமாக, விநியோகிஸ்தர் அபிவிருத்தி நிகழ்ச்சிகளையும் தனிநபர் வியாபார வளர்ச்சி மற்றும் சந்தை அபிவிருத்தி ஆகியவற்றை பேணும் வகையில் முன்னெடுத்திருந்தது. விநியோகிஸ்தர் வலையமைப்புடன் இணைந்து விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அணி டோக்கியோ சீமெந்து தயாரிப்புகளை நாட்டின் சகல பாகங்களுக்கும் சென்றடைவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

இலங்கையின் நிர்மாணத்துறையில் நம்பிக்கையை வென்ற, உயர் தரமான சீமெந்து மற்றும் கொங்கிறீற் நாமமாக டோக்கியோ சீமெந்து திகழ்கிறது. உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு வழங்கி, அபிவிருத்தியில் பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது. தேசத்தை கட்டியெழுப்புவதில் நிறுவனம் தனது நிலையை உறுதி செய்துள்ளதுடன், சந்தை முன்னோடி எனும் வகையில் தரத்தையும் பேணி வருகிறது.


காப்பகம்

2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec