Filtered Press Release : 2017 Mar


News Image
The Music Project திட்டத்துடன் கைகோர்த்துள்ள டோக்கியோ சீமெந்து

இசை ஊடாக சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வளமூட்டும் இலாப நோக்கற்ற செயற்திட்டமான The Music Project உடன் டோக்கியோ சீமெந்து கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பங்காண்மையினூடாக, முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பாடசாலைகள் மற்றும் குருநாகல், மாவத்தகமயைச் சேர்ந்த பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கு தமது இசைக் கல்வியை மேம்படுத்திக்கொள்ள டோக்கியோ சீமெந்து அனுசரணை வழங்கும். முல்லைத்தீவின் யோகபுரம் மகாவித்தியாலயம், தேரன்கண்டல் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் 140 மாணவர்கள் மற்றும் குருநாகலின் குணாநந்த மகாவித்தியாலயத்தின் 50 மாணவர்கள் ஆகியோர் இந்த

இசை ஊடாக சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வளமூட்டும் இலாப நோக்கற்ற செயற்திட்டமான The Music Project உடன் டோக்கியோ சீமெந்து கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பங்காண்மையினூடாக, முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பாடசாலைகள் மற்றும் குருநாகல், மாவத்தகமயைச் சேர்ந்த பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கு தமது இசைக் கல்வியை மேம்படுத்திக்கொள்ள டோக்கியோ சீமெந்து அனுசரணை வழங்கும். முல்லைத்தீவின் யோகபுரம் மகாவித்தியாலயம், தேரன்கண்டல் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் 140 மாணவர்கள் மற்றும் குருநாகலின் குணாநந்த மகாவித்தியாலயத்தின் 50 மாணவர்கள் ஆகியோர் இந்த ஒன்றிணைவினூடாக 2017 முழுவதும் பயன்பெறவுள்ளனர்.

இந்த அனுசரணை வழங்கும் பங்காண்மை தொடர்பான நிகழ்வில் டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், “The Music Project என்பது இசை பயில ஆர்வமாக உள்ள சிறுவர்களை இணைப்பதன் ஊடாக சமூகங்களை ஒன்றிணைக்கும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது குழந்தைகளுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க எதிர்பார்க்கின்றனர். இசையில் மட்டுமின்றி, இந்த திட்டத்தினூடாக ஏனையவர்களுக்கு மதிப்பளிப்பதனூடாக சிறந்த பெறுமதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறது. இந்த செயற்திட்டத்தில் நாம் கைகோர்ப்பதையிட்டு மிகவும் பெருமை கொள்கிறோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த சிறுவர்கள் சிறந்த நிலைக்கு உயர்வார்கள் என நாம் நம்புகிறோம்’ என்றார்.

தற்போது ஐந்தாவது ஆண்டாக முன்னெடுக்கப்படும் The Music Project என்பது நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த பின்தங்கிய நிலையைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இசையை பயில்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த மாணவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், முல்லைத்தீவு மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களில் வதிவிட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் இந்த இரு பிரதேசங்களையும் சேர்ந்தவர்களை ஒன்றிணைப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. வடக்கு மற்றும் தென் பிராந்தியங்களை சேர்ந்த சிறுவர்களுக்கு ஒருவருடன் ஒருவர் இணைந்து இசையை பயில்வதற்கும் இசையமைப்பதற்கும் வாய்ப்பாக அமைகின்றது.

முல்லைத்தீவு, மல்லாவி தேரன்கண்டல் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னதாக இசைப்பயிற்சிகளை பெறுகின்றனர். இந்த பயிற்சிகளின் போது, புல்லாங்குழல், வயலின், செல்லோ, ட்ரம்பட், க்ளரினெட் மற்றும் பல இசைக்கருவிகளை பயன்படுத்துவது பற்றிய விளக்கங்கள் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து இந்த இசைக்கருவிகளை இயக்குவது பற்றி பயிலும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

The Music Project ன் காப்பாளர் திருமதி. ஷலினி விக்ரமசூரிய கருத்துத் தெரிவிக்கையில், ‘வெனிசுலாவின் El Sisitema வை அடிப்படையாகக் கொண்ட “The Music Project” என்பது இசையை வித்தியாசமான கற்பித்தல் முறையினூடாக பயில வழிவகுக்கிறது. இசைக்கருவிகளை பயில்வது என்பது ஒன்றிணைவு, ஆக்கத்திறன், வினைத்திறனின் உணர்வு மற்றும் அவற்றினூடாக நம்பிக்கை மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றை வழங்குகின்றது என நாம் கருதுகிறோம். இணைக்கும் மொழி என்பது இன்மையால், இசை என்பது அந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதாக நாம் கருதுகிறோம். வடக்கு மற்றும் தெற்கில் இந்த நிகழ்ச்சி இரு இடங்களில் முன்னெடுக்கப்படுகிறது. உலக இசைச் சமூகத்தில் தாமும் ஒரு அங்கம் வகிப்பதாக உள்நாட்டு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்த சிறுவர்கள் உணர்வார்கள்.’ என்றார்.

இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆர்வலர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் பங்களிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்திருந்தன. டோக்கியோ சீமெந்து கம்பனி இந்த ஆண்டில் அனுசரணையாளராக இணைந்துள்ளது. நாளைய தலைவர்களுக்கான உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்துவது எனும் நிறுவனத்தின் நம்பிக்கையின் பிரகாரம், புதிய சாதனங்களை பயன்படுத்தி உலகை வெல்ல வாய்ப்பை வழங்க டோக்கியோ சீமெந்து முன்வந்துள்ளது.

சமூக நலன் மற்றும் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை தனது நிறுவனத்தின் உள்ளக அங்கமாக கொண்டுள்ள டோக்கியோ சீமெந்து நிறுவனம், நாட்டை வளமூட்டும் தனது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்த வண்ணமுள்ளது. இந்நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற செயற்பாடுகளில் டோக்கியோ சீமெந்து பாடசாலைகளுக்கிடையிலான Super Quiz, தம்புளையில் அமைந்துள்ள ஏவைஎஸ் ஞானம் நிர்மாண பயிற்சி கல்வியகம் மற்றும் Foundation of Goodness அமைப்புடனான பங்காண்மை ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. மேலும், பவளப்பாறைகள் மறுசீரமைப்பு மற்றும் கண்டல் காடுகளை வளர்த்தல் போன்றவற்றை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

படம்: டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், அனுசரணைக்கான பங்களிப்பை The Music Project ன் காப்பாளர் திருமதி. ஷலினி விக்ரமசூரியவிடம் கையளிப்பதை காணலாம்.

News Image
டோக்கியோ சீமெந்தின் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த விநியோகஸ்த்தர்கள் கௌரவிப்பு

2016ல் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்த விநியோகஸ்த்தர்கள் அண்மையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற வருடாந்த விநியோகஸ்த்தர் மாநாட்டின் போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர். 2016ம் ஆண்டின் சிறந்த விநியோகஸ்த்தராக, யாழ்ப்பாணத்தின் சிட்டி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டாமிடத்தை மட்டக்களப்பு ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹார்ட்வெயார் விநியோகஸ்த்தர் பெற்றிருந்ததுடன், மூன்றாமிடத்தை மட்டக்களப்பு அகிலா ஹார்ட்வெயார் பெற்றிருந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த 300க்கும் அதிகமான டோக்கியோ சீமெந்தின் சிறந்த விநியோகஸ்த்தர்கள்

2016ல் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்த விநியோகஸ்த்தர்கள் அண்மையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற வருடாந்த விநியோகஸ்த்தர் மாநாட்டின் போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர். 2016ம் ஆண்டின் சிறந்த விநியோகஸ்த்தராக, யாழ்ப்பாணத்தின் சிட்டி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டாமிடத்தை மட்டக்களப்பு ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹார்ட்வெயார் விநியோகஸ்த்தர் பெற்றிருந்ததுடன், மூன்றாமிடத்தை மட்டக்களப்பு அகிலா ஹார்ட்வெயார் பெற்றிருந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த 300க்கும் அதிகமான டோக்கியோ சீமெந்தின் சிறந்த விநியோகஸ்த்தர்கள் இந்த ஒன்றுகூடல் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். இதில் 2016ல் சிறப்பாக தமது செயற்பாடுகளை வெளிப்படுத்தியிருந்த 175க்கும் அதிகமான விநியோகஸ்த்தர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தலைவர் கலாநிதி. ஹர்ஷா கப்ரால் பிசி மற்றும் டோக்கியோ சீமெந்து கம்பனி லங்கா பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த விநியோகஸ்த்தர் ஒன்றுகூடல் மாநாடு, கடந்த ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை அணியினால் எய்தப்பட்டிருந்த சாதனைகளை கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது.

டோக்கியோ சீமெந்து கம்பனி குழுமத்தின் தலைவர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி, ஒன்றுகூடியிருந்தோர் மத்தியில் உரையாற்றும் போது ‘எமக்கு எமது விநியோகஸ்த்தர் வலையமைப்பிலிருந்து ஊக்குவிப்பு கிடைக்கிறது. வெற்றிகரமான எமது செயற்பாட்டில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. எம்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை என்பது, நிறுவனத்துக்கு ஒப்பற்ற திறன் வளர்ச்சியை நோக்கி பயணிக்க உதவியிருந்ததுடன், உயர் தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்தவும் உதவியாக அமைந்துள்ளது. இவை அனைத்தும் சந்தையில் நாம் உயர்ந்த ஸ்தானத்தை பெற்றுக்கொள்ள உதவியாக அமைந்துள்ளதுடன், சிறந்த தயாரிப்புகளையும் வெளியிட உதவியாக அமைந்துள்ளன. எமது பங்காளர்களை அழைப்பது என்பதை நாம் கௌரவமாகக் கருதுகிறோம். உங்களுடன் இணைந்து நாமும் வளர்வதற்கு நீங்கள் வழங்கி வரும் வலிமைக்கு நாம் நன்றி பகர்கிறோம்’ என்றார்.

டோக்கியோ சீமெந்து கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது விநியோகஸ்த்தர் வலையமைப்பு என்பது எமக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னதாக நாம் பதித்த உறுதியான அடித்தளத்தின் அடிப்படையில், எமது நிலையை நாம் படிப்படியாக உயர்த்தி வளர்ந்து வருகிறோம். எமது வியாபாரத்தின் ஸ்தாபிப்பு அல்லது அவர்களின் வியாபார ஸ்தாபிப்பிலிருந்து பெருமளவான விநியோகஸ்த்தரகள் எம்முடன் கைகோர்த்துள்ளனர். எம் ஒவ்வொருவரின் வளர்ச்சியையும் நாம் கண்டுள்ளோம். இதன் காரணமாக அதிகளவு பிணைப்பைக்கொண்ட ஒரு குடும்பமாக நாம் அமைந்துள்ளோம். ஒவ்;வொரு குடும்பத்தைப் போலவும், எமது வெற்றியை நாம் இணைந்து கொண்டாடுவோம். உங்கள் நேர்மை மற்றும் உண்மைத்தன்மை குறித்து நாம் திருப்தியடைகிறோம்.’ என்றார்.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷந்த உடவத்த கருத்துத் தெரிவிக்கையில், ‘எம்மைப்பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது. எம்மால் பல இலக்குகளை எய்த முடிந்திருந்தது. திருகோணமலையில் எமது நான்காவது சீமெந்து அரைக்கும் ஆலை மற்றும் மொத்த சீமெந்து உற்பத்தி ஆலை ஆகியவற்றின் விஸ்தரிப்பு செயற்திட்டம் என்பது இதில் மாபெரும் ஒன்றாக அமைந்துள்ளது. எமது உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கியிருந்ததன் மூலமாக, எமது தலைமைத்துவ நிலையை மாற்றிமைத்து உறுதி செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம். இதற்கு உங்களின் பங்களிப்பு எமக்கு அவசியம். இதை எம்மால் எய்த முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என்றார்.

தனது விநியோகஸ்த்தர் வலையமைப்பை கௌரவிக்கும் வகையில் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வௌ;வேறு நிகழ்வுகளில் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும் ஒன்றாக அமைந்துள்ளது. ஏனைய நிகழ்ச்சிகளில் IFC இனால் முன்னெடுக்கப்படும் ‘திவி சக்தி’ பயிற்சிப்பட்டறைகள் அடங்குகின்றன. சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு வியாபார உத்திகள் பற்றிய விளக்கங்களை வழங்கும் வகையில் இந்த பயிற்சிப்பட்டறைகள் அமைந்துள்ளன. இந்த நிகழ்ச்சியானது, சகல டோக்கியோ சீமெந்து விநியோகஸ்த்தர்களுக்கும் அவசியமான ஆளுமைகள் மற்றும் அறிவை பெற்றுக்கொடுப்பதுடன், தமது வியாபாரத்தை குடும்ப நிலையிலிருந்து தொழில்முயற்சியாண்மை நிலைக்கு மேம்படுத்திக்கொள்ள உதவியாக அமைந்துள்ளன. இந்த செயற்பாடுகளினூடாக, நிறுவனத்தின் மூலமாக சுமார் 30 வருடகால உறவுகள் விநியோகஸ்த்தர்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல ஏதுவாக அமைந்துள்ளன.

இலங்கையின் நிர்மாணத்துறையில் உயர் தரம் வாய்ந்த சீமெந்து மற்றும் கொங்கிறீற் கலவை விநியோகஸ்த்தர் எனும் கீர்த்தி நாமத்தை டோக்கியோ சீமெந்து சம்பாதித்துள்ளது. இலங்கையின் வளர்ச்சியை உறுதி செய்யும் திட்டங்களுக்கு அவசியமான உயர் தர பொருட்களை வழங்குவதில் நிறுவனம் முக்கிய பங்கை வகிப்பதுடன், தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளிலும் தனது பங்களிப்பை நிறுவனம் வழங்கிய வண்ணமுள்ளது.


காப்பகம்

2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec