Filtered Press Release : 2025 Jul


News Image
டோக்கியோ சீமெந்து திருகோணமலையில் 1 மில்லியன் டொன் ஆலையை நிறுவி தனது கொள்ளளவை மேம்படுத்தியுள்ளது

படங்கள்: தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மிட்சுபிஷி உபே சீமெந்து கோர்பரேஷனின் முகாமைத்துவ நிறைவேற்று அதிகாரி மசாஹரு சன்சுயி மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் நவோகி கமோஷிடா ஆகியோர் திருகோணமலையில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் புதிய சீமெந்து அரைக்கும் ஆலையை வைபவ ரீதியில் திறந்து வைக்கின்றனர். டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த சீமெந்து உற்பத்தி ஆலையை திருகோணமலையில், தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அண்மையில்

படங்கள்: தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மிட்சுபிஷி உபே சீமெந்து கோர்பரேஷனின் முகாமைத்துவ நிறைவேற்று அதிகாரி மசாஹரு சன்சுயி மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் நவோகி கமோஷிடா ஆகியோர் திருகோணமலையில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் புதிய சீமெந்து அரைக்கும் ஆலையை வைபவ ரீதியில் திறந்து வைக்கின்றனர்.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த சீமெந்து உற்பத்தி ஆலையை திருகோணமலையில், தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அண்மையில் திறந்து வைத்தார். முழுமையாக தன்னியக்கமயப்படுத்தப்பட்ட, உயர் தொழினுட்பத்திறன் கொண்ட சீமெந்து அரைக்கும் ஆலையினூடாக, டோக்கியோ சீமெந்தின் மொத்த உற்பத்தி கொள்ளளவில் 1 மில்லியன் மெட்ரிக் டொன் சேர்க்கப்பட்டுள்ளது. அதனூடாக, வருடமொன்றில் 4 மில்லியன் மெட்ரிக் டொன் சீமெந்து உற்பத்தி மேற்கொள்ளக்கூடிய வசதியை கொண்ட மாபெரும் சீமெந்து உற்பத்தியாளராக திகழ்கிறது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் நவோகி கமோஷிடா, ஜப்பானிய தூதரகத்தின் நிதி இணைப்பாளரும் முதல் செயலாளருமான டகாஃபுமி நகாநிஷி, கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோருடன், அரசாங்க அதிகாரிகளும், அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் PC மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், டோக்கியோ சீமெந்தின் தொழினுட்ப பங்காளரான மிட்சுபிஷி உபே சீமெந்து கோர்பரேஷனின் முகாமைத்துவ நிறைவேற்று அதிகாரி மசாஹரு சன்சுயி ஆகியோரும் அழைப்பின் பேரில் நிகழ்வில் கலந்து கொண்டனர். பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அமைச்சர் இந்நிகழ்வில் உரையாற்றும் போது, “டோக்கியோ சீமெந்து ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அவதானிக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தேசத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியிலும் பெரும் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தை அதிசிறந்த வணிக மையமாக திகழச் செய்யக்கூடிய வாய்ப்பு பல தசாப்த காலப்பகுதிக்கு முன்னரே, மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களால் இனங்காணப்பட்டிருந்தது, இதே நோக்கையே நானும் தொடர்ச்சியாக முன்மொழிந்து வருகிறேன். பொது-தனியார் பங்காண்மைகளினூடாக எய்தக்கூடிய உயர் முன்னேற்றங்களுக்கான, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாகவும் இது அமைந்துள்ளது. அரசாங்கம் எனும் வகையில், இது போன்ற உள்நாட்டு முதலீடுகளுக்கு நாம் எமது ஆதரவை மீள உறுதி செய்வதுடன், தொழிற்துறை விருத்திக்கான முதலீட்டாளர்களுக்கு நட்பான சூழலை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் நவோகி கமோஷிடா ஆகியோர் திருகோணமலையில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் புதிய சீமெந்து அரைக்கும் ஆலையிலுள்ள நினைவுச் சின்னத்தை திரைநீக்கம் செய்கின்றனர்.

இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் நவோகி கமோஷிடா கருத்துத் தெரிவிக்கையில், “நாடு முழுவதிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சில ஆண்டுகளுக்குள் டோக்கியோ சீமெந்து வெற்றிகரமாக ஆலை விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளதை காண்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் விரிவாக்கம் என்பது காலகட்டத்துக்கு அவசியமானதாக அமைந்திருப்பது மட்டுமன்றி, தொலைநோக்கத்தைக் கொண்டதாகவும் உள்ளது. நிறுவனத்தின் மூலோபாய தொலைநோக்கு என்பது, தேசிய முன்னேற்றத்துக்கு பங்களிப்பு வழங்கும் என்பதுடன், இந்தப் பிராந்தியத்துக்கும், நாட்டுக்கும் எதிர்காலத்துக்கான எதிர்பார்ப்பை வழங்குவதாக அமைந்திருக்கும். ஜப்பானிய மற்றும் இலங்கையின் வியாபாரங்கள் இணைந்து நிலைபேறான விருத்தி மற்றும் பரஸ்பர சுபீட்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயலாற்றுவதற்கு இது தெளிவான உதாரணமாக அமைந்துள்ளது. எமது இரு நாடுகளுக்குமிடையிலான உறுதியான மற்றும் நீண்ட பொருளாதார பந்தத்துக்கான எடுத்துக்காட்டாக இந்தப் பங்காண்மை அமைந்துள்ளது.” என்றார்.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் PC, கருத்துத் தெரிவிக்கையில், “இந்த உற்பத்தி ஆலையுடன், எமது உற்பத்தித் திறன் 4 மில்லியன் மெட்ரிக் டொன்களாக அதிகரித்துள்ளது. அதில் நவீன வசதிகள் படைத்த ஐரோப்பிய தொழினுட்பங்கள் முக்கிய பங்காற்றுவதுடன், புத்தாக்கம் மற்றும் சூழலுக்கு நட்பான உற்பத்திக்கான டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பை மீள உறுதி செய்வதாக அமைந்துள்ளது. மிக முக்கியமாக, முழு செயற்திட்டமும் எமது உள்ளக பொறியியல் அணியினரால் நிறைவேற்றப்பட்டதுடன், இலங்கையின் ஆற்றலுக்கான சக்தி வாய்ந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதுடன், எமது நாட்டினுள் பெறுமதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பற்ற நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது. இந்த நாற்பதுக்கு அதிகமான ஆண்டுகளில் எமது மூலோபாய முன்னுரிமைகளினூடாக, எமது உள்நாட்டு பெறுமதி சங்கிலியை விரிவாக்கம் செய்வதிலும், எமது நாட்டின் எதிர்காலத்தில் மீள முதலீடு செய்வதிலும் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்தது. இந்த மைல்கல்லுடன், நிர்மாணத்துறையில் அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்வதற்கு டோக்கியோ சீமெந்து தயாராக உள்ளதுடன், இறக்குமதிகளுக்காக செலவிடப்படும் பல மில்லியன் டொலர்களை சேமிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.” என்றார்.

உயர் தரம் வாய்ந்த சீமெந்து, கொங்கிறீற் மற்றும் சீமெந்து சார் புத்தாக்கமான தயாரிப்புகள் உற்பத்தியில் ஈடுபடும் இலங்கையின் மாபெரும் உற்பத்தியாளராக டோக்கியோ சீமெந்து குழுமம் திகழ்கிறது. முற்றிலும் உள்நாட்டு நிறுவனம் எனும் வகையில், டோக்கியோ சீமெந்து, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் உள்ளக அங்கமாக அமைந்திருப்பதுடன், நிர்மாணத்துறையின் நம்பிக்கையை வென்ற விநியோகத்தராகவும் திகழ்கிறது. பாலங்கள், புகையிரத பாதைகள் மற்றும் உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகள் போன்றன முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புகள் நிர்மாணத்தில் டோக்கியோ சீமெந்து தயாரிப்புகள் முக்கிய பங்காற்றியுள்ளன. தரம், புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மை போன்றவற்றில் ஒப்பற்ற அர்ப்பணிப்புடன், நிறுவனம் தொடர்ந்தும் உள்நாட்டு நிர்மாணத்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் முன்னோடியாக அமைந்துள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பிரதான பங்காளர் எனும் வகையில், டோக்கியோ சீமெந்து உள்நாட்டு பெறுமதி உருவாக்கத்தினூடாக தேசிய பொருளாதாரத்துக்கு வலுவூட்டுவதுடன், தனது சந்தை தலைமைத்துவத்தை வலிமைப்படுத்தி, இலங்கையின் தொழிற்துறை முன்னேற்றத்தின் முக்கிய அடையாளமாகவும் அமைந்துள்ளது.

திருகோணமலையின் சீன குடா பகுதியில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து குழுமத்தின் 1 மில்லியன் மெட்ரிக் டொன் சீமெந்து அரைக்கும் ஆலையின் திறப்பு விழாவின் சில காட்சிகள்.


காப்பகம்

2025JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec