எமது நிறுவனம் மற்றும் அதன் மாறுபட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கிடையிலுள்ள இணைப்புப் பாலமாக அவர்களுக்கான ஒரு தீர்வாளர்களாக மற்றும் அவர்களுக்கான சமூக மேம்பாட்டுத்; திட்டங்களைக் முன்னேடுத்தல் போன்றவற்றினை குறிப்பிட முடியும். மேலும் நிறுவனத்தின் பணிக்கு ஆதரவாக பல்வேறு பங்குதாரர் குழுக்களுடன் நாம் பணியாற்றுவதுடன் அது எமது தேசத்தை கட்டியெழுப்புவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நிறுவனம் என்ற வகையில் தொழிற்திறன் மேம்பாட்டுக்கு சில தொழில்முறை பங்குதாரர் சமூகங்களை இணைத்துக் கௌ;ளுதல் மற்றும் வளப் பற்றாக்குறையுள்ள கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துதல் என இரு முனை அணுகுமுறையை மையமாகக் கொண்டு நாம் எமது பணிகளை முன்னெடுக்கின்றோம்.


இவையே மக்களுடனான எமது உறவை பலமாக்கும் காரணிகளாக அமைவதுடன், தொழில் சமூகத்துடன் நாம் முன்னெடுக்கம் பரஸ்பர உறவினால் பாவனையாளர்களுடன் வலுவான ஒரு தொடர்பை பேண முடிவதுடன், தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவையும் அவர்களுடன் பகிரமுடிகின்றது. மேலும் தொழில் முறை குழுக்கழுக்கான புதிய நவீன கட்டுமான வாய்ப்புக்களை உருவாக்குவதில் நாம் அதிக கவனம் செலுத்துகின்றோம். அதனூடாக நமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கான புத்தாக்க எண்ணங்கள் மற்றும் அவர்களின் முழுமையான திறனை வெளிப்படுத்த ஒரு புதிய பாதைக்கான வாய்ப்பினையும் உருவாக்குகின்றோம்.


இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதற்கு பரந்த சமூக நலனுடன் அவர்களுக்கு தேவையான வளங்களை அணுகுவதற்காக நிறுவனம் சில சுயாதீன குழுக்களுடன்; நெருக்கமாக செயல்படுகிறது என்பதுடன் நம் தேசத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல நாளைய தலைவர்களை உருவாக்க குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட திட்டங்களையும் நாம் முன்னெடுத்துள்ளோம்.