எம்மைப் பொறுத்தவரை நிலைத்தன்மையானது மூன்று அடிப்பறப்பு கோட்பாடுகளான சமூகம், சுற்றுச்சூழல், நிதிக் கட்டமைப்புக்கள் மற்றும் எங்கள் செயற்;திறன் மூலம் அதிகமான பெறுமதியை அடைகின்றது. மேலும் நிறுவனத்தின் இலாபகரமான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக எமது முக்கிய செயற்பாட்டு முறைமைகளில் சரியான வணிகக் கொள்கைகளை நாம் பின்பற்றுகின்றோம். இக் கொள்கையானது அனைவருக்கும் ஒர் முன் உதாரணமாகத் திகழ்வதுடன் அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது.

இம் முயற்சிகளின் மூலமாக ஒர் பாரியளவிலான தாக்கத்தை உருவாக்க எமக்கு கைகொடுக்கும் மக்கள் சமூகத்தை உருவாக்கும் பல்வேறு பங்குதாரர் குழுக்களின் வாழ்க்கையுடன் நாங்கள் இணைந்து செயற்படுகிறோம். சமூக பொறுப்புணர்வை ஒர் வணிக நோக்காக மாற்றும் பல புத்தாக்க தொழில் முதலீடுகளைத் முதன் முதலாக ஆரம்பித்த பெருமை எம்மைச் சாரும். அத்துடன் இலாபகரமான வளர்ச்சியை அடைவதற்கும் பங்குதாரர்களின் நம்பிக்கையைப் பெறுவதும் ஒவ்வொரு பெருநிறுவன குடிமகனினதும் முயற்சியில் தங்கியிருப்பதனை நாம் வெற்றிகரமாக நிரூபித்துள்ளோம்.

எமது வணிக மூலோபாயத்தைப் பிரதிபலிக்கும் இக்கொள்கைகள், எங்கள் தயாரிப்புகள் குறைவான பாவனையில் அதிகமான பயன்பாட்டைத் தந்தது. இது கட்டுமானத்துறையில்; அதன் மிகப்பெரிய சவால்களைக் கடக்க உதவுகிறது. இதேபோல், சமூகப் பொறுப்புணர்வு குறித்த நமது செயற்பாடுகள்; எமது செழிப்பு மிகுந்த நாட்டிற்கு வழங்கப்பட்ட இயற்கை வளங்களை திறம்பட நிர்வகித்து பாதுகாக்கும் எமது உறுதிப்பாட்டினை பிரதிபலிக்கின்றது.

எங்கள் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பின் ஒரு பகுதியாக நாங்கள் மேற்கொண்டுள்ள சில முக்கிய திட்டங்கள் எமது நிறுவனத்திற்கு ஒப்பிடமுடியாத போட்டி நன்மையை அளித்து, எங்கள் சந்தை நிலையை பலப்படுத்தியுள்ளது. உதாரணமாக, எங்கள் சொந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்கம் எங்கள் பாரம்பரிய வியாபார முறையிலிருந்து மாறுபட்டிருப்பினும்;, அது எமது கொள்கை வளர்ச்சி இலக்குகளை அடைய உதவியது. எங்கள் கழிவு நீர் மறுசுழற்சி திட்டம் நிறுவனத்திற்கு பல மில்லியன் ரூபாய்களை சேமிக்க உதவியுள்ளதுடன் இப்பூமியின் மதிப்பிட முடியாத இயற்கை வளத்தையும் பாதுகாத்து வருகின்றது.

எமது அனைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளும் சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தினை புரிந்து கொண்டதில் இருந்து உருவானவையாகும். ஓர் பொறுப்புள்ள நாட்டின் குடிமகனாக எமது அனைத்து இயற்கை சுற்றுச்சூழலுடனான செயற்பாடுகளின் போதும் நாம் பெறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமானதாகும். இதற்கு முன்னோடியாகக் நாம் மேற்கொண்ட திட்டங்கள் நம் இதயங்களுடன் நெருக்கமாக இருக்கின்றமையும் அத்துடன் அவை நமக்கு நெருக்கமான இயற்கைச் சூழலின் ஒரு பகுதியைக் பிரதிநிதித்துவப்படுத்துவதும் மறுக்க முடியாத உண்மையே.