கொங்கிறீற்று எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது
கொங்கிறீற்றானது இரண்டு கூறுகளை உள்ளடக்கியது. திரள் (கரடு முரடான மற்றும் தரமான) மற்றும் சாந்து நீர் மற்றும் சீமெந்து கொண்டு சாந்து தயாரிக்கப்படுகின்றது. நீரேற்றச் செயல்முறையின் மூலம் சீமெந்து மற்றும் நீர் திரள்கள் கடினப்படுத்தி பிணைக்கப்படுகின்றன. மணல், கற்கள் அல்லது நொறுக்கப்பட்ட கல் போன்றவற்றை உள்ளடக்கிய உறுதியான பாறை போன்றதே கொங்கிறீற்று என்று அழைக்கப்படும். இந்த கடினப்படுத்துதல் செயல்முறை பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்படுகிறது. அதாவது நீண்ட நாட்கள் செல்லும் போது கொங்கிறீற்று மேலும் வலுவடைகிறது.
கொங்கிறீற்று நம்பமுடியாத உயர் அமுக்கு வலிமையை கொண்டுள்ளது. அமுக்க வலிமை என்பது ஒரு பொருளை உடைக்க தேவையான சக்தியின் அளவைக் குறிக்கிறது. இது ஒரு சதுர அங்குலத்திற்கு (pளi) பவுண் என்ற முறையில் அளவிடப்படுகிறது. இன்று, கொங்கிறீற்று என்பது உலகின் மிகவும் பிரபலமான மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டுமானப் பொருளாகும், இது உயர் நெடுஞ்சாலை முதல் சமையலறை வேலைப்பாடுகள் வரை அனைத்தையும் உருவாக்க பயன்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 7 பில்லியனுக்கும் அதிகமான கனசதுர மீட்டர் கொங்கிறீற்று உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகின் ஒவ்வொரு நபருக்கும் ஒரு கனசதுர மீட்டர் கொங்கிறீற்று!
கொங்கிறீற்றின் பன்முகத்தன்மை
கொங்கிறீற்றானது தீக்காப்பு செய்யப்பட்டது. இது எரியாது, தீ வைக்க முடியாது, மேலும் இது தீப்பிழம்புகளை எதிர் கொள்ளும் போது நச்சுப் புகைகளை வெளியிடாது. கொங்கிறீற்றானது வெப்ப பரிமாற்றம் மற்றும் வெப்ப கடத்து திறனை குறைவான விகிதத்தில் கொண்டுள்ளதால் ஒரு பயனுள்ள தீ கவசமாக உள்ளது.
கொங்கிறீற்றானது இயற்கையாகவே நீர் எதிர்ப்பு திறனை கொண்டுள்ளது. சவ்வுகள் மற்றும் சிறப்பு கொங்கிறீற்று கலவைகளைப் பயன்படுத்துவதால் நிலையான நீர் எதிர்ப்பு திறனை உருவாக்க முடியும். சிறிய நிலை கட்டுமானங்கள், அடித்தளங்கள் மற்றும் வாகன தரிப்பிட கட்டமைப்புகள் போன்ற நிலத்தடி கட்டமைப்புகளுக்கு கொங்கிறீற்று சிறந்த கட்டுமானப் பொருளாக விளங்குகிறது.
கொங்கிறீற்று தண்ணீரை எளிதில் தாங்கக்கூடியது என்பதால் வீட்டுதோட்ட அலங்காரத்திற்கும் வெளிப்புற தளபாட ஒழுங்கமைப்புக்கும் ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது. வீட்டின் உட்புறத்தை அழகுபடுத்தவும் கொங்கிறீற்றை பயன்படுத்தலாம். கொங்கிறீற்று நம்பமுடியாத பல வகையான திறன்களையுடையது. இது அன்றாட சிறு வேலைப்பாடுகள், நீர் தொட்டிகள் மற்றும் நெருப்புடன்; தொடர்புடைய இடங்களுக்கு சிறந்த கட்டுமானப் பொருளாக விளங்குகிறது.
வலுப்படுத்தப்பட்ட கொங்கிறீற்று
ஒரு கூட்டு மூலப்பொருளானது உருக்கு வலைகள் அல்லது உலோகக் கம்பி அல்லது இதர நெகிழக்கூடிய மூலக்கூறுகளை சேர்ப்பதன் மூலம் பெறப்படும். இது மிகவும் வலுவானது. அதிகூடிய அழுத்தத்தை தாங்கும் திறன் காரணமாக இது கட்டிட கட்டுமானத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ் இரண்டு மூலக்கூறுகளின் வெற்றிகரமான கலவைக்கான மற்றொரு காரணியாக விளங்குவது கொங்கிறீற்று மற்றும் உருக்கு வலைகளின் ஒத்த வெப்ப குணமேயாகும்.
இதனால் வலுவூட்டப்பட்ட கொங்கிறீற்று மூலக்கூறுகளை கடுமையான வெப்பநிலைக்கு உட்படுத்தும் போது எந்தவிதமான நெளிவோ அல்லது விரிசல்;களோ ஏற்படாது. அத்துடன் கொங்கிறீற்று உருக்கை துருப்பிடிப்பதிலிருந்து பாதுகாக்கிறது. உலகெங்கிலும் குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை கட்டிடங்களுக்கான முக்கிய கட்டுமானப் பொருளாக வலுவூட்டப்பட்ட கொங்கிறீற்று விளங்குகிறது.
வலுவூட்டப்பட்ட கொங்கிறீற்று நீர் எதிர்ப்பு திறனையுடையது. இதற்கு இயல்பாக நீர் எதிர்ப்பு திறன் இல்லை எனினும் கொங்கிறீற்றானது பல்வேறான மூலக்கூறுகளின் கலவை என்பதால் தொழிநுட்ப ரீதியில்; நீர் எதிர்ப்பு திறனை வெளிப்படுத்தும். இதனால் நீருக்கடியில் மேற்கொள்ளப்படும் கட்டமானங்களுக்கு இது ஏற்றதாக விளங்குகிறது.
எனவே கொங்கிறீற்றானது மனிதனால் உருவாக்கப்பட்ட சிறந்த மூலப்பொருளாக திகழ்வதோடு சிறந்த கட்டுமான மூலப்பொருளாகவும்,வசதியாகவும்,வேகமான செயன்முறை மற்றும் வலிமையுடனும் விளங்குகிறது.
உடனடி கொங்கிறீற்று கலவை(சுஆஊ) என்றால் என்ன?
உடனடி கொங்கிறீற்று கலவை என்பது விகித அடிப்படையில் (கலவை வடிவம் என அழைக்கப்படும்), தொகுதி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும். பின்னர் ட்ரக் வண்டிகளில் வேலைத்தளத்திற்கு விநியோகிக்கப்படும், இது போக்குவரத்து மிக்சர்களுடன் பொருத்தப்படும்.
உடனடி கொங்கிறீற்று கலவையானது,
- உயர் தரத்திலானது
- நேரம் மற்றும் நேர முகாமைத்துவமிக்கது
- வசதியானது
- சுற்றுபுற சூழலுக்கு ஏற்றது
உடனடி கொங்கிறீற்று கலவையானது உலகெங்கிலும் வருடந்தோறும் பயன்படுத்தப்படும் அனைத்து கொங்கிறீற்றிலும் ஏறத்தாள நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. கொங்கிறீற்று கலவையை கலப்பது பாரம்பரிய வேலைகளில் ஒன்றாகும்.
கொங்கிறீற்று மிக்சர்களை கண்டுபிடிக்கும் வரை இவை பிற செயலாக்கங்களைப் பயன்படுத்தியே கலக்கப்பட்டது. எனவே ஒரு கொங்கிறீற்று மிக்சர் அதிக நேர வீண்விரயம் மற்றும் மனித வலுவை மீதப்படுத்தும். வழக்கமான முறைகளுடன் ஒப்பிடும்போது பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளதோடு கட்டுமானத் தொழில் வல்லுநர்கள் மற்றும் வீடு கட்டுபவர்கள் என அனைவராலும் விரும்பப்படுகிறது.
பரிந்துரைக்கப்பட்ட பயன்பாடுகள்
வழிகாட்டலுக்கான காணொலி
கொங்கிரீற்றை பதப்படுத்தல்
பாவனைக்கேற்ற வகையில் கொங்கிரீற்று பதப்படுத்த போதுமான ஈரப்பதம்,வெப்பநிலை மற்றும் நேரம் வழிவகுக்கிறது. இது கொங்கிரீற்றின் வலிமை மேம்பாடு மற்றும் ஆயுள் ஆகியவற்றில் முக்கிய பங்குவகிக்கிறது. கொங்கிரீற்று சரியாக பதப்படுத்தப்படாதபோது, அதன் ஆயுள், வலிமை பாதிக்கப்படலாம், இதன் விளைவாக விரிசல், கசிவுகள், தேனடை போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.