டோக்கியோ சீமெந்து நிறுவனம் எமது தேசத்தினை கட்டியெழுப்புவதிலும், அதன் மக்களின் வாழ்வினை வளப்படுத்துவதற்கும் எப்போதும் முன்னிற்கின்றது. அதனடிப்படையில், திருகோணமலையில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டியது. இடம்பெயர்ந்த மற்றும் சாதாரண வாழ்வினை தொலைத்த இச்சமூகத்திற்கு மீள் வாழ்வினையும், நம்பிக்கையினையும் அளிக்கும் காரணியாக அமைவது முறையான வீட்டுச்சூழல் என்பதினை இனங்கண்டு கொண்ட நாம் நிலாவெளி அடம்போடையில் எமது நிறுவனத்தின் சொந்த காணியினை 25 வீடுகளை அமைப்பதற்காக வழங்கியுள்ளோம். இத்திட்டமானது அவர்களுக்கான வீடொன்றினை வழங்குவது மட்டுமே என்ற நோக்கிலிருந்து மாறுபட்டு அவர்களுக்கு சிறந்த வாழ்கைத்தரத்தினையும் வழங்குவதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.


இத்திட்டமானது டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நிறுவுனர் மறைந்த தேசமாண்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களின் நினைவாக 2017 மே மாதம் 05ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வானது, மறைந்த ஓர் ஒப்பற்ற தலைவரின் பிறந்த நாளையொட்டி இடம்பெற்ற நிகழ்வுகளின் ஒரு பகுதியாகும் என்பதுடன் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தற்போதைய தலைவர், ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஹர்ஷ கப்ரால் விழாவில் தலைமையேற்று நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தினை போலவே டோக்கியோ சீமெந்து சுனாமி நிவாரண அறக்கட்டளையினால் 2009ஆம் ஆண்டு 25 குடும்பங்களுக்காக கட்டப்பட்ட சுனாமி வீட்டுத்திட்டத்திற்கான உறுதிப்பத்திரங்கள் இந்நிகழ்வின் போது உரியவர்களுக்கு அதிமேதகு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

content image
content image

அடுத்த ஒரு வருடத்தில் அதாவது 21 மார்ச் 2018 அன்று இடம்பெயர்ந்தோருக்கான புதிய வீட்டுத்திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரா.சம்பந்தன், திருகொணமலை மாவட்ட செயலாளர் திரு.ஏ.ஏ. புஷ்பகுமார, கலாநிதி ஹர்ஷ கப்ரால்- தலைவர், திரு .கிஸ்டோபர் நிர்வாக இயக்குனர் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரசாங்க பிரதிநிதிகள், பிரதேச செயலாளர் மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகள் தலைமையிலான மதிப்பீட்டுக் குழுவினால் பல தசாப்தங்களாக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்களின் பயனாளிகள் இத்திட்டத்திறகாக தேர்வு செய்யப்பட்டனர்.

இத்திட்டமானது, 10 மாதங்களில் நிறைவு செய்யப்பட்டதுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் 2.3 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வீடும் 10 பேர்ச்சஸ் காணியில்; அமைக்கப்பட்டுள்ளது என்பதுடன் நடைபாதை , சமூக நிலையம் மற்றும் சிறுவர்; பூங்கா உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட 02 படுக்கையறைகளுடனான வீடு அமைக்கப்பட்டதும் குடியேறுபவர்கள் புதிய வீட்டில் முதல் நாள் குடிபுகும் அனுபவத்தினை மேலும் மகிழ்ச்சியாக்கிட டோக்கியோ நிறுவனம் ஒரு படி மேலே சென்று ஒவ்வொரு புதிய வீட்டிற்கும் ஒரு படுக்கை மற்றும் அலுமாரியுடன் அவர்களின் புதிய வாழ்விற்கு நம்பிக்கை ஒளியேற்றியது.

content image