சில ஆண்டுகளுக்கு முன்னர் எமது நாட்டிலுள்ள கொங்கிரீட் கட்டிடங்களுக்குள் ஓர் பசுமைச் சுற்றாடலை உருவாக்கும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம் என வாக்குறுதியளித்தோம். அவ்வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, படிப்படியான செயல்முறைகளைக் கொண்ட ஒர் பயணத்தை நாங்கள் மேற்கொண்டோம், அவை நம்மையும், நமது எதிர்கால சந்ததியினரையும் பசுமையான, ஆரோக்கியமான, நிலையான எதிர்காலத்தினை நோக்கி அழைத்துச் செல்கின்றன.

இப்பயணத்தின் ஓர் முக்கிய மைல்கல்லாக 2017 ஆம் ஆண்டு இலங்கை வன பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து இரண்டு வனத்தாவர நாற்று மேடைகளை எமது திருகோணமலை தொழிற்சாலையிலும், மஹியங்கனை மின்னுற்பத்தி நிலைய வளாகத்திலும் நிறுவினோம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வனத்தாவர மேடையும் ஆண்டுக்கு 10,000 எண்ணிக்கையளவில் இந்நாட்டிற்கு உரித்தான வன மரக்கன்றுகளை உருவாக்குகின்றது. அவை வன பாதுகாப்புத் திணைக்களத்தின் தேசிய மீள் வன வளர்ப்புத் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மர நடுகை திட்டத்திற்கு வழங்கப்படுகின்றது.

புங்கை, இலுப்பை, தேத்தான் போன்ற மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைத்தாவரங்களை பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்பதுடன் நமது எதிர்கால சந்ததியினருக்கு எமது பல்லுயிர் பெருக்கம் தொடர்பான அறிவினை வழங்கும் அதே வேளையில் நமது இயற்கை வனப்பகுதியை செழுமைப்படுத்துவதும் இதன் குறிக்கோளாகும். இத்திட்டத்தின் ஊடக நகர்ப்புற பிரதேசங்களிலுள்ள நகர வாசிகளுக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில் மாகாண சபைகளினால் மேற்கொள்ளப்படும் நகர வனவியல் திட்டங்களில் வளர்ந்த மரக்கன்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.

content image
content image content image