Filtered Press Release : 2021 Oct


News Image
சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு டோக்கியோ சீமெந்து கம்பனியின் விநியோகப் பணிகள் துரிதப்படுத்தல்

சந்தையில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷா கப்ரால் பிசி அறிக்கை வெளியிட்டுள்ளார். திருகோணமலையிலுள்ள தனது சீமெந்து உற்பத்தி ஆலையை அதன் உச்ச கொள்ளளவுத் திறனில் இயக்குவதாக அவர் தெரிவித்ததுடன், மாதமொன்றுக்கு 170,000 மெட்ரிக் டொன்கள் எடை சீமெந்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. நாடு முழுவதிலும் துரித கதியில் சீமெந்து விநியோகத்தை நிறுவனம் மேற்கொள்ளும் என அந்த அறிக்கையில்

சந்தையில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷா கப்ரால் பிசி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருகோணமலையிலுள்ள தனது சீமெந்து உற்பத்தி ஆலையை அதன் உச்ச கொள்ளளவுத் திறனில் இயக்குவதாக அவர் தெரிவித்ததுடன், மாதமொன்றுக்கு 170,000 மெட்ரிக் டொன்கள் எடை சீமெந்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. நாடு முழுவதிலும் துரித கதியில் சீமெந்து விநியோகத்தை நிறுவனம் மேற்கொள்ளும் என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு உற்பத்தி உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதுடன், 30,000 மெட்ரிக் டொன் மொத்த சீமெந்தை மாதாந்தம் இறக்குமதி செய்யும் பணிகளை நிறுவனம் தனது டோக்கியோ சீமெந்து கொழும்பு டேர்மினல் ஊடாக மேற்கொள்கின்றது. அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம், மேலும் மாதாந்தம் 12,000 மெட்ரிக் டொன் சீமெந்தை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாட்டின் மாபெரும் சீமெந்து உற்பத்தியாளர் எனும் வகையில், நாடு முழுவதிலும் காணப்படும் வாடிக்கையாளர்களின் சீமெந்து தேவையை நிவர்த்தி செய்வதற்கு தனது தேசிய கடமையை எப்போதும் நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாக அந்த அறிக்கையில் கலாநிதி. கப்ரால் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பல்வேறு காரணங்களால் சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு எழுந்துள்ளதாகவும், இது நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மொத்த சரக்குக் கப்பல்கள் காணப்படாமை முதல் காரணியாக அமைந்துள்ளது. இரண்டாவதாக, இதுவரை காலமும் ஒரே நாளில் கடன்பத்திரங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவற்றை விநியோகிப்பதற்கு சில வாரங்கள் தேவைப்பட்டுள்ள நிலையில், தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் சந்தையில் தற்போதைய சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையிலுள்ள தனது உற்பத்தி ஆலையை நிறுவனம் தற்போது விரிவாக்கம் செய்துள்ளதுடன், அதனூடாக மேலும் 1 மில்லியன் மெட்ரிக் டொன் எடை கொண்ட சீமெந்தை உற்பத்தி செய்வதற்காக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்டு நிர்மாணத் துறையில் எழும் கேள்வியை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும். என்பதுடன், இலங்கையில் முன்னணி சீமெந்து உற்பத்தியாளர் மற்றும் விநியோகத்தர் எனும் நிலையை பேணவும் உதவியாக அமைந்திருக்கும்.

News Image
யாழ்ப்பாணத்தில் கடற்படை முன்னெடுக்கும் கண்டல்காடு பாதுகாப்பு திட்டத்துடன் டோக்கியோ சீமெந்து கைகோர்ப்பு

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், இலங்கை கடற்படையின் வடபிராந்தியத்துக்கான கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர், பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற கண்டல்காடு தாவர நடுகை நிகழ்வில் காணப்படுகின்றனர். யாழ்ப்பாண குடாநாட்டு பகுதியில் 5000 கண்டல்காடு மரங்களை நாட்டும் திட்டத்தை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது. இலங்கை கடற்படை கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவின் மேற்பார்வையின் கீழ், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் கண்டல்காடு கன்றுகளை நாட்டுவதை அடிப்படையாகக்

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், இலங்கை கடற்படையின் வடபிராந்தியத்துக்கான கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர், பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற கண்டல்காடு தாவர நடுகை நிகழ்வில் காணப்படுகின்றனர். யாழ்ப்பாண குடாநாட்டு பகுதியில் 5000 கண்டல்காடு மரங்களை நாட்டும் திட்டத்தை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது. இலங்கை கடற்படை கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவின் மேற்பார்வையின் கீழ், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் கண்டல்காடு கன்றுகளை நாட்டுவதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனூடாக, நாட்டின் கரையோர மற்றும் கடல்சூழலை பேணுவதற்கான தமது அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக டோக்கியோ சீமெந்து குழுமம் 3500 கண்டல்காடு தாவரக் கன்றுகளை அன்பளிப்புச் செய்து, இந்தத் திட்டத்தில் கைகோர்த்திருந்தது. திருகோணமலையிலுள்ள டோக்கியோ சீமெந்து குழுமத்தின் கண்டல்காடு கன்று வளர்ப்பகத்திலிருந்து இந்தக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. திருகோணமலை டோக்கியோ சீமெந்து கண்டல்காடு தாவரக் கன்று வளர்ப்பகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கப்பல் மூலமாக கண்டல்காடு தாவரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கடல் உயிரின பாதுகாப்பு தொடர்பில் நீண்ட காலமாக தாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் அடையாளமாக, டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.மஹேசன் ஆகியோர் இந்த கண்டல்காடு தாவரங்கள் நடும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வை வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வு, காரைநகருக்கான நுழைவாயிலாக அமைந்திருக்கும் பொன்னாலை பகுதியில் இடம்பெற்றது. யாழ்ப்பாண கரையோர சமூகங்களின் பிரதான பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரண்டு சூழல் பாதுகாப்புத் திட்டங்களில் நீண்ட காலமாக கைகோர்த்துள்ள பங்காளராக இலங்கை கடற்படை திகழ்கின்றது. டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் பவளப் பாறைகள் பாதுகாப்பு மற்றும் கண்டல்காடு வளர்ப்பு திட்டங்களில் அவர்களின் தீவிர ஈடுபாட்டினூடாக, இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடிந்திருந்தது. திருகோணமலையிலுள்ள டோக்கியோ சீமெந்து குழுமத்தின் கண்டல்காடு தாவரக் கன்று வளர்ப்பகத்திலிருந்து வழங்கப்பட்ட 20,000 க்கும் அதிகமான கண்டல்காடு தாவரங்களை வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் இதுவரையில் இலங்கை கடற்படை பயிரிட்டுள்ளது. யாழ்ப்பாண குடா பகுதியில் இந்த இயற்கை கண்டல்காடு செய்கையை மேற்கொள்ளும் இலங்கை கடற்படையின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பது என்பதனூடாக, நாடு, நாட்டு மக்கள் மற்றும் சூழல் ஆகியவற்றை வளமூட்டிப் பேணும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


காப்பகம்

2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec