Filtered Press Release : 2018 Oct


News Image
ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண கல்வியகத்தில் மற்றுமொரு இராணுவ குழுவினர் மேசன் பயிற்சியை பூர்த்தி

தம்புளையில் நிறுவப்பட்டுள்ள ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி கல்வியகத்தில் காணப்படும் பயிற்சி வசதிகளை இலங்கை இராணுவத்தினர் வழமையாக பயன்படுத்தி வருகின்றனர். இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு இந்த கல்வியகத்தில் வழங்கப்படும் சேவை அளப்பரியதாக அமைந்துள்ளது. இதுவரையில், கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த படைப்பிரிவுகளில் பணியாற்றும் 53 இராணுவத்தினர் வதிவிட பயிற்சியை பெற்றுள்ளதுடன், இதில் 34 பேர் தேசிய தொழிற் தகைமையை (மேசன்) நிலை 3 இல் பூர்த்தி செய்துள்ளனர். ஏஞ்சிய

தம்புளையில் நிறுவப்பட்டுள்ள ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி கல்வியகத்தில் காணப்படும் பயிற்சி வசதிகளை இலங்கை இராணுவத்தினர் வழமையாக பயன்படுத்தி வருகின்றனர். இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு இந்த கல்வியகத்தில் வழங்கப்படும் சேவை அளப்பரியதாக அமைந்துள்ளது.

இதுவரையில், கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த படைப்பிரிவுகளில் பணியாற்றும் 53 இராணுவத்தினர் வதிவிட பயிற்சியை பெற்றுள்ளதுடன், இதில் 34 பேர் தேசிய தொழிற் தகைமையை (மேசன்) நிலை 3 இல் பூர்த்தி செய்துள்ளனர். ஏஞ்சிய அனைவரும் தமது 1 மாத வதிவிட பயிற்சியை பூர்த்தி செய்துள்ளதுடன், NAITA அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ஆலோசனை பொறியியலாளரான மௌலி குணரட்ன இந்த பயிற்சி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதுடன், ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி கல்வியகத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி கற்கைகள் குறித்து கவனம் செலுத்துகிறார். இந்த கற்கையை NVQ தரத்துக்கு நிகரானதாக முன்னெடுப்பதிலும், இலங்கை இராணுவத்தினரின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் வழங்குவதிலும் மௌலி குணரட்ன முக்கிய பங்களிப்பை வழங்குகிறார்.



தம்புளை, ஏ.வை.எஸ். ஞானம் நிர்மாண பயிற்சி கல்வியகத்தில் இலங்கை இராணுவத்தினர் பயிற்சி பெறுகின்றனர்.

மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கிகாரத்தை பெற்ற இக்கல்வியகம் வதிவிட கற்கைகளை முன்னெடுத்து NVQ சான்றிதழை திறன் படைத்த மற்றும் முன் அனுபவமற்ற மேசன் வடிவமைப்பாளர்களுக்கு வழங்கி, அவர்களின் தொழில் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள பங்களிப்பு வழங்குகிறது. தம்புளையில் அமைந்துள்ள இந்த நவீன பயிற்சி கல்வியகத்தில் 50 வதிவிட பயிற்சியாளர்களை உள்வாங்க முடியும் என்பதுடன், விரிவுரைகள் மற்றும் பிரயோக பயிற்சிகளை வழங்கக்கூடிய சாதனங்கள் மற்றும் நிர்மாண மூலப்பொருட்கள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. வருடாந்தம் 200 க்கும் அதிகமான மேசன்மார் தமது தொழிற் தகைமையை இந்த கல்வியகத்தில் பெற்றுக் கொள்வதுடன், தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். இந்த நிலையம் நிறுவப்பட்டது முதல் 1500 க்கும் அதிகமான பயிற்சி பெற்ற மேசன்மார் உருவாக்கியுள்ளது.

மேசன்மாரின் திறனை கட்டியெழுப்புவதற்கு மேலாக, டோக்கியோ சீமெந்தினால் நாடளாவிய ரீதியில் பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனூடாக நிர்மாண முறைகள் தொடர்பான தமது நிபுணத்துவத்தை அவர்களால் மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த கருத்தரங்குகள் இலவசமாக வழங்கப்படுவதுடன், நிர்மாணத்துறையில் பின்பற்றப்படும் சிறந்த செயன்முறைகளை பகிர்ந்து கொள்வதற்கு உதவுவதுடன், சீமெந்து, கொங்கிறீற் மற்றும் சிமெந்து அடிப்படையிலான பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்கள் போன்றவற்றில் பின்பற்றப்படும் புத்தாக்கமான முறைகள் தொடர்பான அறிவை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் 1ல் தர சீமெந்து மற்றும் கொங்கிறீற் விநியோகத்தராக திகழும் டோக்கியோ சீமெந்து குழுமம், முறையான பயிற்சி பெற்ற, திறன் வாய்ந்த மற்றும் தகைமை வாய்ந்த நபர்களை உள்வாங்குவதற்கு தம்மை அர்ப்பணித்துள்ளதுடன், அதனூடாக உள்நாட்டு நிர்மாணத்துறையின் நிபுணத்துவ நியமத்தை மேம்படுத்த பங்களிப்பு வழங்குகிறது.


காப்பகம்

2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec