Filtered Press Release : 2021 Nov


News Image
1 மில். மெட்ரிக் டொன் உற்பத்தி விரிவாக்கத்துக்கு டோக்கியோ சீமெந்து அடிக்கல் நாட்டல்

திருகோணமலையில் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வை டோக்கியோ சீமெந்து (கம்பனி) லங்கா பிஎல்சி அண்மையில் முன்னெடுத்திருந்தது. அதனூடாக தனது உற்பத்திக் கொள்ளளவை 1 மில்லியன் மெட்ரிக் டொன்களால் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்தத் திட்டம் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் மொத்த நிறுவப்பட்டுள்ள கொள்ளளவு 4 மில்லியன் மெட்ரிக் டொன்களாக அதிகரிக்கச் செய்யும். அதன் மூலம் இலங்கையின் மாபெரும் சீமெந்து உற்பத்தியாளர் எனும் தனது நிலையை மேலும்

திருகோணமலையில் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வை டோக்கியோ சீமெந்து (கம்பனி) லங்கா பிஎல்சி அண்மையில் முன்னெடுத்திருந்தது. அதனூடாக தனது உற்பத்திக் கொள்ளளவை 1 மில்லியன் மெட்ரிக் டொன்களால் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்தத் திட்டம் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் மொத்த நிறுவப்பட்டுள்ள கொள்ளளவு 4 மில்லியன் மெட்ரிக் டொன்களாக அதிகரிக்கச் செய்யும். அதன் மூலம் இலங்கையின் மாபெரும் சீமெந்து உற்பத்தியாளர் எனும் தனது நிலையை மேலும் நிறுவனம் உறுதி செய்யும். திருகோணமலையிலுள்ள டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையின் புதிய விரிவாக்கத் திட்டம் என்பது, உள்நாட்டின் நிர்மாணத் துறையில் அதிகரித்துச் செல்லும் கேள்விக்கேற்ப நிறுவனம் விநியோகத்தை மேற்கொள்வதற்கு தன்னை தயார்ப்படுத்துவதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. 18 மாத கால விரிவாக்கத்திட்டத்துடன், சந்தையின் முன்னணி சாதாரண போர்ட்லாந்து சீமெந்து மற்றும் பிளென்டட் ஹைட்ரோலிக் சீமெந்து வர்த்தக நாமங்களான டோக்கியோ சுப்பர், நிப்பொன் சீமெந்து மற்றும் நிப்பொன் சீமெந்து ப்ரோ ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை டோக்கியோ சீமெந்து மேற்கொள்ளும். இந்தச் செயற்பாடு உள்நாட்டு பெறுமதி உருவாக்கத்தை பெருமளவு அதிகரிக்கும் என்பதுடன், மேலும் பல நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கும். உள்நாட்டு சீமெந்து உற்பத்தியினூடாக, உள்நாட்டின் ஆயிரக் கணக்கான பாரம்பரிய மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு தமது உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் டோக்கியோ சீமெந்தின் நிலையை மேலும் உறுதி செய்வதாக இந்தப் பணிகள் அமைந்திருக்கும். திருகோணமலையிலுள்ள டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொழிற்சாலை விரிவாக்க திட்டம் பூர்த்தியடைவதனூடாக, உற்பத்திக் கொள்ளளவில் மேலும் 1 மெட்ரிக் டொன் எடையுடைய சீமெந்து உள்வாங்கப்படும். டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் – கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி, முகாமைத்துவ பணிப்பாளர் – எஸ்.ஆர்.ஞானம், பணிப்பாளர் சபை அங்கத்தவர்களான – ரவி டயஸ், நிறைவேற்றுப் பணிப்பாளர் – கிறிஸ்டோபர் பெர்னான்டோ ஆகியோருடன், ரதெல்ல ஹோல்டிங்ஸ் / ஹன்கோ கஸ்ட்ரக்சன்ஸ் (பிரைவட்) லிமிடெட் – நிஹால் ரதெல்ல ஆகியோர் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டனர். செயற்திட்டத்தின் ஆரம்பத்தை வண.பிதா. கென்டல் அட்கின்சன் மேற்கொண்டதுடன், டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து கம்பனி பணிப்பாளரும், டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை பொது முகாமையாளருமான வி.எம்.ரவீந்திரகுமார், டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து கம்பனி வலு மற்றும் சக்தி பிரிவின் பொது முகாமையாளர் ஈ.குகப்பிரிய மற்றும் குழுமத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷந்த உடவத்த ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். யள: (இடமிருந்து) ரதெல்ல ஹோல்டிங்ஸ் / ஹன்கோ கஸ்ட்ரக்சன்ஸ் (பிரைவட்) லிமிடெட் – நிஹால் ரதெல்ல, டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் – கிறிஸ்டோபர் பெர்னான்டோ, தவிசாளர் – கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி, முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர் ரவி டயஸ் ஆகியோர் காணப்படுகின்றனர்.


காப்பகம்

2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec