Filtered Press Release : 2021 May
மகாவலி ஆற்றோரப் பகுதிகளில் 200,000 மரங்களை நடுவதற்காக சுற்றாடல் அமைச்சுடன் டோக்கியோ சீமெந்து கைகோர்ப்பு
டோக்கியோ சீமெந்து குழுமம், சுற்றாடல் அமைச்சுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், மஹாவலி ஆற்றோரப் பகுதிகளில் 200,000 மருத மரங்கள் மற்றும் மூங்கில் மரங்களை பயிரிடுவதற்கு முழு அனுசரணையை வழங்கவுள்ளது. தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பெறுமதி வாய்ந்த அன்பளிப்பை பாதுகாக்கும் நோக்குடன் இந்தப் பணிகளை முன்னெடுக்க முன்வந்துள்ளது. “Ivura rakina Pawura” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டம், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி …
டோக்கியோ சீமெந்து குழுமம், சுற்றாடல் அமைச்சுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், மஹாவலி ஆற்றோரப் பகுதிகளில் 200,000 மருத மரங்கள் மற்றும் மூங்கில் மரங்களை பயிரிடுவதற்கு முழு அனுசரணையை வழங்கவுள்ளது. தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பெறுமதி வாய்ந்த அன்பளிப்பை பாதுகாக்கும் நோக்குடன் இந்தப் பணிகளை முன்னெடுக்க முன்வந்துள்ளது.
“Ivura rakina Pawura” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டம், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் ஆகியோரின் பங்கேற்பில் இடம்பெற்றது. தேசிய மர நடுகைத் திட்டமான “Husma dena Thuru” என்பதற்கு நிகராக இந்தத் திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது. 2 மில்லியன் மரங்களை நாட்டும் அரசாங்கத்தின் கொள்கையுடன் நேரடியாகத் தொடர்புடையதாக இந்தத் தேசியத் திட்டம் அமைந்துள்ளது. ஆற்றோரப் பகுதிகளை நிலைபேறான வகையில் பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்தி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றனர்.
மூன்றாண்டு காலத் திட்டமாக முன்னெடுக்கப்படும் மருத மற்றும் மூங்கில் மரங்கள் நடுகைத் திட்டத்துக்கு அவசியமான கன்றுகள், பிராந்தியத்தில் காணப்படும் தாவரக் கன்று வளர்ப்பகங்களிலிருந்து பெறப்பட்டு, 335 கிலோமீற்றர்கள் நீளமான மஹாவலி கங்கை ஓரத்தில் நடப்படும். இந்தப் பணிகளுக்கான முழு ஆதரவை டோக்கியோ சீமெந்து வழங்குவதுடன், சுற்றாடல் அமைச்சினால் மேற்பார்வை மற்றும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். திருகோணமலை மற்றும் மஹியங்கனை பகுதிகளில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்தின் வனாந்தர மரக் கன்றுகள் வளர்ப்பகங்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டுக்கும் அவசியமான மருத மரக் கன்றுகள் வழங்கப்படும். நடுகைப் பணிகளை முன்னெடுப்பதற்கு மாகாண அரச நிறுவனங்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் உதவியை அமைச்சு பெற்றுக் கொள்ளும். தாவரங்களை பாதுகாப்பது மற்றும் பராமரிக்கும் பணிகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு செயற்திட்டத்தின் பங்காளர்கள் பங்களிப்பு வழங்குவார்கள்.
பயிரிடப்படும் தாவரக் கன்றுகளின் நீண்ட கால பராமரிப்பாளர்களாக அப்பிரதேசங்களைச் சேர்ந்த பண்ணைச் சமூகத்தார் மற்றும் பாடசாலை மாணவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நீண்ட காலத் திட்டத்தையும் டோக்கியோ சீமெந்து கொண்டுள்ளது. உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஈடுபடுத்துவதனூடாக, அவர்களுக்கு அனுகூலமளிக்கும் பூக்கள் மற்றும் பழங்களை வழங்கும் தாவரங்களை நாட்டுவதனூடாக, விவசாயிகளுக்கும் அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன், ஒவ்வொரு காலநிலை வலயத்திலும் இயற்கை உயிரியல் பரம்பலை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருக்கும்.
டோக்கியோ சீமெந்தின் இரு கன்று வளர்ப்பகங்களும் மருத்துவ குண நலன்களைக் கொண்ட மருத மரம், கெரந்த, மீ மற்றும் இங்கினி போன்ற தாவரக் கன்றுகளை பயிரிடப்படுவதை ஊக்குவிப்பதுடன், நாட்டின் பிரத்தியேகமான உயிரியல் பரம்பலை பாதுகாக்கும் நோக்குடன் இந்தப் பணிகளை முன்னெடுக்கின்றது. இந்தத் தாவரங்கள் பல்வேறு சமூகங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. மகாவலி வலயங்கள் அடங்கலாக நாடு முழுவதிலும் மீள்வனாந்தரச் செய்கையை மேற்கொள்வதற்காக இந்த தாவரங்களை இந்நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதிகளவு கேள்வியைக் கொண்ட தாவரக் கன்றுகளை இந்த வளர்ப்பகங்கள் உற்பத்தி செய்வதுடன், நாட்டின் சகல வலயங்களிலும் பயிரிடக்கூடியனவாக அமைந்துள்ளன. அதன் பிரகாரம் மகாவலி ஆற்றோரப் பகுதிகளை பாதுகாப்பதற்கு தாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு சுற்றாடல் அமைச்சு மேற்கொண்ட கோரிக்கைக்கு, டோக்கியோ சீமெந்து முன்வந்து பங்களிப்பு வழங்குவதுடன், பெருமைக்குரிய இலங்கையராக தேசியக் கடமையை ஆற்ற முன்வந்துள்ளது.
திருகோணமலை மற்றும் மகியங்கனை பகுதிகளில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து குழுமத்தின் வனாந்தர மரக் கன்றுகள் வளர்ப்பகங்களினூடாக, ஒவ்வொரு வருடத்துக்கும் அவசியமான மருத மரக் கன்றுகள் விநியோகிக்கப்படும்.
எமது அழகிய தீவின் அரிய இயற்கை அன்பளிப்பாக அமைந்துள்ள மகாவலி கங்கை, இது திருகோணமலை குடாப் பகுதியில் இணைப்பை கொண்டுள்ளதால், டோக்கியோ சீமெந்துடன் பிரத்தியேகமான பிணைப்பைக் கொண்டுள்ளது. ஹோர்டன் பிளேன்ஸ் தேசிய பூங்காவில் ஆரம்பித்து, இலங்கையின் மிக நீளமான நதியாக பயணித்து, திருகோணமலையில் இந்து சமுத்திரத்தில் சங்கமிக்கின்றது. இந்தப் பகுதியில் டோக்கியோ சீமெந்தின் உற்பத்தி வளாகமும் காணப்படுகின்றது.
டோக்கியோ சீமெந்து குழுமம் முன்னெடுக்கும் பல நிலைபேறான செயற்பாடுகளில் ஒன்றாக வனாந்தர மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கையும் அடங்கியுள்ளது. நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் கண்டல்காடு வளர்ப்பு மற்றும் பவளப்பாறைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றன அடங்கியுள்ளன. சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு என்பது இது போன்ற செயற்பாடுகளினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றினூடாக தமது சமூக நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் சூழல்பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை தமது கூட்டாண்மை அடையாளத்தினுள் வெற்றிகரமாக இணைத்துள்ளது.
படங்கள்:
சுற்றாடல் அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில், மகாவலி கங்கை கரைப்பகுதிகளில் 200,000 தாவரங்களை நடும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது.
காப்பகம்
2024 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2023 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2022 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2021 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2020 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2019 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2018 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2017 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |