Filtered Press Release : 2023 Mar
டோக்கியோ சீமெந்து மற்றும் Foundation of Goodness இணைந்து இளம் கிரிக்கட் வீரர்களை ஊக்குவிக்கும் பங்காண்மையை விஸ்தரித்துள்ளன
கிரிக்கட் பயிற்சி முகாமைங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக டோக்கியோ சீமெந்து குழுமம், Foundation of Goodness உடன் தனது பங்காண்மையை நீடித்துள்ளது. இந்தப் பங்காண்மை ஒன்பதாவது வருடமாகவும் தற்போது முன்னெடுக்கப்படுவதுடன், இந்தப் பங்காண்மையினூடாக, நாட்டின் பின்தங்கிய பிரசேதங்களைச் சேர்ந்த இளம் கிரிக்கட் வீரர்களுக்கு, தரமான பயிற்சி வசதிகளைப் பெற்றுக் கொண்டு, தமது கிரிக்கட் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், 2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்கட் …
கிரிக்கட் பயிற்சி முகாமைங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக டோக்கியோ சீமெந்து குழுமம், Foundation of Goodness உடன் தனது பங்காண்மையை நீடித்துள்ளது. இந்தப் பங்காண்மை ஒன்பதாவது வருடமாகவும் தற்போது முன்னெடுக்கப்படுவதுடன், இந்தப் பங்காண்மையினூடாக, நாட்டின் பின்தங்கிய பிரசேதங்களைச் சேர்ந்த இளம் கிரிக்கட் வீரர்களுக்கு, தரமான பயிற்சி வசதிகளைப் பெற்றுக் கொண்டு, தமது கிரிக்கட் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், 2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்கட் பயிற்சி முகாமுக்கான அனுசரணையை, Foundation of Goodness இன் ஸ்தாபகரும், பிரதம காப்பாளருமான குஷில் குணசேகரவிடம் கையளிப்பதைக் காணலாம்.
இந்த உடன்படிக்கையினூடாக, இலங்கையின் வடக்கு மற்றும் தென் பிராந்தியங்களைச் சேர்ந்த பாடசாலை கிரிக்கட் வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் புகழ்பெற்ற பயிற்றுவிப்பாளர்களால் இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படும். இதன் போது சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்கள், உயர்நிலை விளையாட்டு வீரர்கள் வரிசையில் தெரிவு செய்யப்பட்டு, விசேடத்துவம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். டோக்கியோ சீமெந்து- Foundation of Goodness பயிற்சி முகாமினூடாக, நூற்றுக் கணக்கான இளம் பாடசாலை ஆண் மற்றும் பெண் கிரிக்கட் வீர, வீராங்கனைகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தற்போது பிரதேசமட்ட மற்றும் தேசிய மட்டத்தில் விளையாடுகின்றனர்.
Foundation of Goodness இன் விளையாட்டு பணிப்பாளர் அனுர டி சில்வா கிரிக்கட் அகடமிக்கு தலைமைத்துவமளிப்பதுடன், தேசிய பெண் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஹேமந்த தேவப்பிரிய மற்றும் தகைமை வாய்ந்த பயிற்றுவிப்பாளர்கள் இந்தப் பயிற்சிகளை முன்னெடுக்கின்றனர். ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல MCC லோர்ட்ஸ் மற்றும் சீனிகம ஸ்ரீ விமலபுத்தி Surrey Oval ஆகிய இரு மைதானங்களில் தென் பிராந்திய பயிற்சி முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மைதானங்களில் முழுமையான உள்ளக மற்றும் வெளியக வலைப் பயிற்சி வசதிகள் காணப்படுகின்றன. இந்த வசதிகள் டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரு நிறுவனங்களினதும் பகிர்ந்த இலக்கானது, எதிர்கால தலைவர்களுக்கு உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்து, சர்வதேச மட்டத்தில் இலங்கைக் கொடியை உயரப் பறக்கச் செய்வதாகும்.
காப்பகம்
2024 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2023 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2022 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2021 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2020 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2019 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2018 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2017 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |