Filtered Press Release : 2022 Mar
வருடாந்த மாபெரும் விநியோகத்தர் மாநாட்டில் 2021 ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த விற்பனையாளர்களை டோக்கியோ சீமெந்து கௌரவிப்பு
2021ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த தனது விற்பனையாளர்களை டோக்கியோ சீமெந்து குழுமம் கௌரவித்திருந்தது. இந்த நிகழ்வு சினமன் பெந்தோட்ட பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் நிர்வாக அணியினர் கலந்து கொண்டனர். இதில் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், குழும பிரதம செயற்பாட்டு அதிகாரி எம் தயானந்தன், ஆலோசனை பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டெர் மற்றும் குழும சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷந்த உடவத்த ஆகியோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதையும் சேர்ந்த டோக்கியோ சீமெந்து …
2021ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த தனது விற்பனையாளர்களை டோக்கியோ சீமெந்து குழுமம் கௌரவித்திருந்தது. இந்த நிகழ்வு சினமன் பெந்தோட்ட பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் நிர்வாக அணியினர் கலந்து கொண்டனர். இதில் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், குழும பிரதம செயற்பாட்டு அதிகாரி எம் தயானந்தன், ஆலோசனை பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டெர் மற்றும் குழும சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷந்த உடவத்த ஆகியோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதையும் சேர்ந்த டோக்கியோ சீமெந்து விற்பனையாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், கடந்த ஆண்டில் அவர்களின் சிறப்பாக செயற்பாடுகளுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. 2021 ஆம் ஆண்டில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்த விற்பனை பங்காளர்களின் ஆதரவுக்கும் இந்நிகழ்வில் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக நெருக்கடி நிறைந்த சந்தைச் சூழலில், பல்வேறு வியாபார தடங்கல்களுக்கு மத்தியிலும் நிறுவனத்தின் விற்பனைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அயராது தமது பங்களிப்பை வழங்கியிருந்தவர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் இந்நிகழ்வின் போது பாராட்டுதலைப் பெற்றிருந்தது. நான்கு தசாப்த காலமாக டோக்கியோ சீமெந்து குழுமம் கட்டியெழுப்பி நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளராக திகழும் உறுதியான பிணைப்புகளுக்கு மேலும் வலுச் சேர்த்திடும் வகையில் செயலாற்றியிருந்த ஒவ்வொரு விற்பனையாளரின் பங்களிப்புக்கும் நிர்வாகம் நன்றி தெரிவித்திருந்தது. நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்ததுடன், நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் வெற்றிகரமாக வழிநடத்த ஆற்றியிருந்த பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்திருந்தார். திருகோணமலையில் அமைந்துள்ள உற்பத்திப் பகுதியில் மேலும் 1 மில்லியன் மெட்ரிக் டொன் சீமெந்து உற்பத்தி விரிவாக்கத்தை மேற்கொள்வதற்கும், கொழும்பு துறைமுக வளாகத்தில் மொத்த சீமெந்து செயற்பாடுகளின் கொள்ளளவை 1 மில்லியன் மெட்ரிக் டொனினால் அதிகரிக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அடிக்கல் நாட்டல் பற்றிக் குறிப்பிடுகையில், வாடிக்கையாளர்களின் எதிர்காலத் தேவை அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் டோக்கியோ சீமெந்து தனது தயார்ப்படுத்தலை வெளிப்படுத்தியுள்ளது என்றார். நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக இலங்கையின் முன்னேற்றத்துக்கு சிறந்த தயாரிப்புகளை விநியோகிப்பதில் முன்னோடியாகத் திகழும் டோக்கியோ சீமெந்து குழுமம், உயர் தரம் வாய்ந்த சீமெந்து, கொங்கிறீற் மற்றும் சீமெந்து சார் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்கள் போன்றவற்றின் நம்பிக்கையை வென்ற விநியோகத்தராகத் திகழ்கின்றது. நாட்டின் மாபெரும் சீமெந்து உற்பத்தியாளர் எனும் வகையில், தேசிய பொருளாதாரத்துக்கு உள்நாட்டில் பெறுமதி சேர்ப்பதனூடாக பெறுமதி சேர்ப்பதில் கவனம் செலுத்துகின்றது. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னோடியான பங்காளராக டோக்கியோ சீமெந்து குழுமம் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளது.
காப்பகம்
2024 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2023 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2022 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2021 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2020 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2019 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2018 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2017 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |