Filtered Press Release : 2021 Jul


News Image
சுற்றாடல் அமைச்சு மன்னம்பிட்டியவில் டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் இணைந்து ‘Ivura Rakina Pawura’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது

டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் இணைந்து, மன்னம்பிட்டிய மஹாவலி கங்கைக் கரையில் ‘Ivura Rakina Pawura’ எனும் திட்டத்தை சுற்றாடல் அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்ததுடன், இதில் சில முக்கிய அரசாங்க அதிகாரிகளும், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். மஹாவலி கங்கைக் கரையோரத்தின் 335 கிலோமீற்றர் தூரப் பகுதியில் கும்புக் மற்றும் மீ கன்றுகளை பயிரிடும் நடவடிக்கைகளை டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் இணைந்து, மன்னம்பிட்டிய மஹாவலி கங்கைக் கரையில் ‘Ivura Rakina Pawura’ எனும் திட்டத்தை சுற்றாடல் அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்ததுடன், இதில் சில முக்கிய அரசாங்க அதிகாரிகளும், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். மஹாவலி கங்கைக் கரையோரத்தின் 335 கிலோமீற்றர் தூரப் பகுதியில் கும்புக் மற்றும் மீ கன்றுகளை பயிரிடும் நடவடிக்கைகளை டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு முகாமையாளர் சாலிந்த கந்தபொல மற்றும் பொலன்நறுவை மத்தும டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் நிறுவனத்தின் ஏ.ஜி. மத்தும பண்டார ஆகியோர் இணைந்து, அங்குரார்ப்பண தாவரக் கன்று பயிர்ச் செய்கை நிகழ்வின் போது கும்புக் மரக் கன்றுகளை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்திருந்தனர். பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் அமைச்சரும் மரக் கன்றுகளை விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மஹாவலி கங்கையின் உணர்திறன் மிக்க நீரேந்து பகுதிகளின் நிலைபேறான முகாமைத்துவத்துக்கு இவர்கள் உதவிகளை வழங்குவார்கள். சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, டோக்கியோ சீமெந்து குழுமத்தின் கூட்டாண்மை நிலைபேறாண்மை முகாமையாளர் சாலிந்த கந்தபொல மற்றும் பொலன்நறுவை மத்தும டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் நிறுவனத்தின் ஏ.ஜி. மத்தும பண்டார ஆகியோருடன் இணைந்து Ivura Rakina Pawura அங்குரார்ப்பண நிகழ்வில் காணப்படுகின்றனர். சுற்றாடல் அமைச்சின் Ivura Rakina Pawura எனும் மாபெரும் செயற்திட்டமானது, தேசிய மர நடுகைத் திட்டமான ‘Husma Dena Thuru’ என்பதன் இரண்டாம் கட்டமாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தினூடாக 2 மில்லியன் மரக் கன்றுகளை பயிரிட்டுவது, நாட்டின் இயற்கையான வனாந்தரப் பகுதியை உள்வாங்குவது இலக்காக அமைந்துள்ளது. டோக்கியோ சீமெந்துக் குழுமம் தமது வனாந்தர மர நடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாக இந்த நடவடிக்கைக்கு அனுசரணை வழங்க முன்வந்திருந்தது. கும்புக், கரந்த, மீ மற்றும் இங்கினி போன்ற மருத்துவ குணங்கள் மிக்க வனாந்தர மரங்களை நடுவதைக் குறிப்பதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. திருகோணமலை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் இரு வனாந்தர மரக் கன்றுகள் வளர்ப்பகங்களிலிருந்து இந்த மரக் கன்றுகள் விநியோகிக்கப்படுகின்றன. அந்த வகையில், 3ஆண்டு திட்டத்துக்கு அனுசரணை வழங்குகின்றமைக்கு மேலாக, டோக்கியோ சீமெந்து வனாந்தர மரக் கன்றுகள் வளர்ப்பகங்களினூடாக Ivura Rakina Pawura திட்டத்துக்கும் அவசியமான கும்புக் மற்றும் மீ மரக் கன்றுகளை விநியோகிக்கும். சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, பொலன்நறுவை பிரதேசத்தைச் சேர்ந்த சமூகப் பிரதிநிதிகள் சிலர் மத்தியில் கும்புக் மரக் கன்றுகள் சிலதை விநியோகிப்பதை காணலாம். டோக்கியோ சீமெந்து குழுமம் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள நிலைபேறாண்மையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் தேசிய மீள் வனாந்தரச் செய்கைக்காக வனாந்தர மரக் கன்றுகளை நாட்டும் பணிகளும் அடங்குகின்றன. நிறுவனம் பவளப் பாறைகள் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் கண்டல் காடுகள் செய்கையையும் நிறுவனம் மேற்கொள்கின்றது. சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு என்பது, இவ்வாறான நடவடிக்கைகளினூடாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சமூக நலன்புரி மற்றும் சூழல் பாதுகாப்பு போன்ற பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கும், தமது கூட்டாண்மை வர்த்தக நாமத்திலும், நாட்டுக்கும், மக்களுக்கும் மற்றும் சூழலுக்கும் தொடர்ச்சியாக வலுவூட்டுவதற்கும் உதவியாக அமைந்துள்ளது. படங்கள்: Ivura Rakina Pawura அங்குரார்ப்பண நிகழ்வில் சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர முதலாவது கும்புக் மரத்தை நாட்டுவதை காணலாம்.

News Image
டோக்கியோ சீமெந்து நிறுவனம் சியம்பலாகஸ்வெவ பகுதியில் ‘Fountain of Life’குடிநீர் வழங்கும் திட்டத்தை முன்னெடுப்பு

மிஹிந்தலையின் சியம்பலாகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு தூய்மைப்படுத்திய குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் டோக்கியோ சீமெந்து குழுமம் தனது ‘Fountain of Life’திட்டத்தை விரிவாக்கம் செய்திருந்தது. “PureHydro®” நீர் தூய்மையாக்கல் கட்டமைப்பை Reverse Osmosis தொழில்நுட்பத்துடன் நிறுவியிருந்தது. நாளொன்றில் 5000 லீற்றர்கள் நீரை வழங்கும் திறன் கொண்டதாக இது அமைந்துள்ளது. சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சுமார் 650 கிராமத்தாருக்கு அனுகூலமளிப்பதாக இது அமைந்துள்ளது. நாட்டின் சகலருக்கும் தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது எனும் அரசாங்கத்தின்

மிஹிந்தலையின் சியம்பலாகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு தூய்மைப்படுத்திய குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் டோக்கியோ சீமெந்து குழுமம் தனது ‘Fountain of Life’திட்டத்தை விரிவாக்கம் செய்திருந்தது. “PureHydro®” நீர் தூய்மையாக்கல் கட்டமைப்பை Reverse Osmosis தொழில்நுட்பத்துடன் நிறுவியிருந்தது. நாளொன்றில் 5000 லீற்றர்கள் நீரை வழங்கும் திறன் கொண்டதாக இது அமைந்துள்ளது. சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சுமார் 650 கிராமத்தாருக்கு அனுகூலமளிப்பதாக இது அமைந்துள்ளது. நாட்டின் சகலருக்கும் தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது எனும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. மிஹிந்தலையிலுள்ள சியம்பலாகஸ்வெவ பிரதேச மக்களுக்கு தூய குடிநீரை பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ள டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Fountain of Life திட்டம். Fountain of Life நீர் தூய்மையாக்கல் திட்டத்தை டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து கம்பனியின் பணிப்பாளரும், டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையின் பொது முகாமையாளருமான வி.எம். ரவீந்திரகுமார், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் விநியோக வலையமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அனுராதபுரம் கீர்த்தி டிரேடர்ஸ் திரு. திருமதி. கே. நானயக்கார மற்றும் அனுராதபுரம் நியு கிரான்ட் டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் ஜே.எம்.திரிமான்ன ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார். இந்தத் திட்டத்தை நிறுவுவதற்கு டோக்கியோ சீமெந்து குழுமத்துக்கு, வட மத்திய மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் சியம்பலாகஸ்வெவ மிஹிந்து கிராம அபிவிருத்தி சங்கமும் தமது முழு ஆதரவை வழங்கியிருந்தது. டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், “அனைத்து உயிரினங்களுக்கும் அத்தியாவசிய தேவையான பாதுகாப்பான மற்றும் தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நாம் Fountain of Life திட்டத்தை ஆரம்பித்தோம். ஆயிரக் கணக்கான உயிர்களைப் பாதுகாப்பதற்கு தூய தரமான நீர் முக்கியமாக காணப்பட்ட நாட்டின் தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய பகுதிகளில் இந்தத் திட்டம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் அனைவருக்கும் தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது எனும் அரசாங்கத்தின் இலக்கை எய்துவதற்கு, ‘Fountain of Life‘ திட்டத்தினூடாக பங்களிப்பு வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார். அனுராதபுரத்தைச் சேர்ந்த கீர்த்தி டிரேடர்ஸ் திரு மற்றும் திருமதி. கே. நானயக்கார மற்றும் நியு கிரான்ட் டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் ஜே.எம். திரிமான்ன ஆகியோர் டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து கம்பனியின் பணிப்பாளரும் டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையின் பொது முகாமையாளருமான வி.எம்.ரவீந்திரகுமார் ஆகியோர், மிஹிந்தலை, சியம்பலாகஸ்வெவ பகுதியில் நிறுவப்பட்ட டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Fountain of Life குடிநீர் விநியோக திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் காணப்படுகின்றனர். சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த மக்களின் பிரதான ஜீவனோபாயமாக, சேனைச் செய்கை மற்றும் புகழ்பெற்ற மஹாகந்தராவ வாவியில் நன்னீர் மீன்பிடித்தல் போன்றனவாக அமைந்திருக்கும் நிலையில், தூய குடிநீர் வசதியின்மையால் பெருமளவு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளனர். கொடிய சிறுநீரக நோயினால் (CKDu) இந்த கிராமத்தைச் சேர்ந்த சில வசிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூகத்தின் இலகுவில் பாதிப்புறக்கூடிய குழுவினர் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கைக்கும் பெரும் அச்சுறுத்தலாக இந்த நோய் அமைந்துள்ளது. வட மத்திய மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சியம்பலாகஸ்வெவ கிராமிய அபிவிருத்தி சங்கத்துடன் டோக்கியோ சீமெந்து குழுமம் இணைந்து, கைவிடப்பட்ட நீர் விநியோகக் கட்டமைப்பொன்றை புதுப்பித்து புனருத்தாரணம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்காக புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட RO திறன் கொண்ட நீர் தூய்மையாக்கல் கட்டமைப்பு நிறுவப்பட்டது. Fountain of Life திட்டத்தின் காரணமாக, சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானமீட்டும் 171 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனூடாக எதிர்கால தலைமுறையினரின் நலனும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சியம்பலாகஸ்வெவ பகுதியில் நிறுவப்பட்ட டோக்கியோ சீமெந்து ‘Fountain of Life’ நீர் சுத்திகரிப்பு ஆலையில், மிஹிந்து கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் வட மத்திய மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதிநிதிகள் காணப்படுகின்றனர். டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ‘Fountain of Life’ குடிநீர் தூய்மைப்படுத்தல் திட்டத்தினூடாக, இதுவரையில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த 3100க்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையில் அனுகூலம் சேர்க்கப்பட்டுள்ளது. ஐந்து நீர் தூய்மையாக்கல் தொகுதிகளை நிறுவியுள்ளதனூடாக, நாளொன்றில் மொத்தமாக 30,000 லீற்றர்கள் நீரை சுத்திகரித்து விநியோகிக்கக்கூடியதாகவுள்ளது. இந்தத் திட்டங்களினூடாக பயன்பெறும் கிராமங்களில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேரவில், வலைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனை மற்றும் அனுராதபுர மாவட்டத்தில் சிறுநீரக நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமமான நாவற்குளம் ஆகியன அடங்கியுள்ளன. எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பின்தங்கிய கிராமங்களில் மேலும் பல நீர் தூய்மைப்படுத்தல் வசதிகளை நிறுவி அதனூடாக Fountain of Life செயற்திட்டத்தின் சென்றடைவை மேலும் விஸ்தரிப்பதற்கு டோக்கியோ சீமெந்து குழுமம் திட்டமிட்டுள்ளது. இது போன்ற பல சமூக வலுவூட்டல் செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ள நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டோக்கியோ சீமெந்து திகழ்வதுடன், அவற்றினூடாக, நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பு என்பதற்கமைய இவ்வாறான பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றினூடாக, சமூக நலன்புரி மற்றும் சூழல் பாதுகாப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக தமது கூட்டாண்மை வர்த்தக நாமத்தின் அங்கமாக ஒன்றிணைத்துள்ளதுடன், தேசத்தை கட்டியெழுப்பும் முன்னணி பங்காளராக திகழும் நோக்கத்துக்கமைய அமைந்துள்ளது.


காப்பகம்

2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec