Filtered Press Release : 2022 Jan


News Image
டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் ‘Fountain of Life’ குடிநீர் வழங்கும் திட்டம் அனுராதபுர மாவட்டத்தின் வெஹெரகல மற்றும் தச்சிதாமன பகுதிகளை சென்றடைந்துள்ளது

அனுராதபுர மாவட்டத்தின் ரம்பேவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்த வெஹெரகல மற்றும் மதவாச்சியைச் சேர்ந்த தச்சிதாமன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு விவசாய குடும்பங்களுக்கு டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Fountain of Life திட்டத்தினூடாக தூய குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. வெஹெரகல பிரதேசத்தைச் சேர்ந்த 268 குடும்பங்களின் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மற்றும் தச்சிதாமன பிரதேசத்தைச் சேர்ந்த 48 குடும்பங்களின் 200 க்கும் அதிகமானவர்கள் இந்தத் திட்டத்தினூடாக பயன் பெற்றுள்ளனர். கொடிய சிறுநீரக நோய் பரவல் அதிகளவு

அனுராதபுர மாவட்டத்தின் ரம்பேவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்த வெஹெரகல மற்றும் மதவாச்சியைச் சேர்ந்த தச்சிதாமன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு விவசாய குடும்பங்களுக்கு டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Fountain of Life திட்டத்தினூடாக தூய குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. வெஹெரகல பிரதேசத்தைச் சேர்ந்த 268 குடும்பங்களின் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மற்றும் தச்சிதாமன பிரதேசத்தைச் சேர்ந்த 48 குடும்பங்களின் 200 க்கும் அதிகமானவர்கள் இந்தத் திட்டத்தினூடாக பயன் பெற்றுள்ளனர். கொடிய சிறுநீரக நோய் பரவல் அதிகளவு காணப்படும் இந்தப் பகுதியில் இவர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த நிலையில், இந்தத் திட்டத்தினூடாக இவர்களுக்கு தூய குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரு கிராமங்களிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரேனும் கொடிய சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுர மாவட்டத்தில் விவசாய செய்கையை தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளனர். Fountain of Life நிறுவப்பட்டுள்ளதனூடாக நாளொன்றில் தலா 5000 லீற்றர் மற்றும் 1500 லீற்றர் நீரை தூய்மைப்படுத்தும் திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக இப்பிரதேசங்களின் மக்களுக்கு தற்போது தூய குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியும். மொத்தமாக நாளொன்றுக்கு 46,500 லீற்றர்கள் வரை தூய்மைப்படுத்திய குடிநீரை விநியோகிக்கும் வசதியைக் கொண்டுள்ள டோக்கியோ சீமெந்தின் ‘Fountain of Life’ திட்டத்தினூடாக இதுவரையில் பல்லன்குளம், தச்சிதாமன, நாவற்குளம் மற்றும் சியம்பலாகஸ்வெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 4500 குடும்பங்களை சென்றடைந்துள்ளது. அனுராதபுரம் மற்றும் கிளிநொச்சியில் வெராவில், வலைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கொடிய சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. ரம்பேவ மற்றும் மதவாச்சி பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இரு திட்டங்களை டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷாந்த உடவத்த அங்குரார்ப்பணம் செய்தார். இவருடன், வவுனியா பிராந்தியத்துக்கான டோக்கியோ சீமெந்து விநியோகத்தர் சண்முகன் ஸ்டோர்ஸின் எஸ். ஆனந்தராஜ் மற்றும் அனுராதபுர பிராந்தியத்துக்கான டோக்கியோ சீமெந்து விநியோகத்தர் நோர்த் ஏஜென்சீஸ் ரி. மஹாதேவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கிராமிய விவசாய குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தத் திட்டம் ஆற்றும் பங்களிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், தச்சிதாமன பிரதேசத்தில் நிறுவப்பட்ட சுத்திகரிப்பு ஆலையை திறந்து வைக்கும் நிகழ்வில் மதவாச்சி பிரதேச செயலாளர் திருமதி. சந்திரிகா மாலவிஆரச்சி பங்கேற்றிருந்தார். வடமத்திய மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முழு ஆதரவு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு ஒவ்வொரு கிராமங்களையும் சேர்ந்த கிராமிய அபிவிருத்திச் சங்கத்தினதும் ஆதரவு கிடைத்திருந்ததுடன், இந்தத் திட்டத்தை தமது சமூகத்தார் சார்பில் வரவேற்றிருந்தன. விவசாய சமூக குழுக்களின் தன்னார்வ அடிப்படையிலான ஆதரவும் கிடைத்திருந்ததுடன், பல தலைமுறையினரின் அனுகூலத்துக்காக நீர் வசதியை நிலைபேறான வகையில் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உறுதி செய்கின்றது. கொடிய சிறுநீரக நோய் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தூய குடி நீர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து டோக்கியோ சீமெந்து குழுமத்தினால், Fountain of Life நிகழ்ச்சியினூடாக நீர் தூய்மையாக்கும் திட்டங்களை நிறுவும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனூடாக PureHydro® நீர் தீர்வுகள் Reverse Osmosis (RO) ஆற்றலுடன் நிறுவப்படுகின்றன. தனது சகோதர நிறுவனமான சென். அந்தனீஸ் ஹைட்ரோ பிரிவின் தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று இந்தப் பணிகளை மேற்கொள்கின்றது. எதிர்வரும் மாதங்களில் நாடு முழுவதிலும் பின்தங்கிய கிராமங்களில் இந்தத் திட்டத்தை தொடர்ந்தும் விஸ்தரிக்கும் பணிகளை நிறுவனம் தொடர்ந்தும் மேற்கொள்ளும். டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் இது போன்ற பல சமூக வலுவூட்டும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றினூடாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் தூர நோக்கின் அடிப்படையிலான நேர்த்தியான தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேசத்தை கட்டியெழுப்புவதில் முன்னணி பங்காளராக திகழும் நிறுவனத்தின் கருப்பொருளுக்கமைய, இது போன்ற சமூக நலன்புரி மற்றும் சூழல் பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுப்பதில் டோக்கியோ சீமெந்து குழுமம் தொடர்ச்சியாக தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருகின்றது.

News Image
கொழும்பு துறைமுக மொத்த டேர்மினல் கொள்ளளவு விரிவாக்கத்துக்கு டோக்கியோ சீமெந்து ரூ. 2.5 பில்லியன் முதலீடு

டோக்கியோ சீமெந்து கொழும்பு துறைமுக டேர்மினலின் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட கொள்ளளவு பகுதியின் செயற்பாடுகளை ஆரம்ப வைபவ நிகழ்வுடன் அண்மையில் ஆரம்பித்திருந்தது. சீமெந்து ஜாம்பவானின் 2.5 பில்லியன் ரூபாய் முதலீட்டில் இந்தத் திட்டம் நிறுவப்பட்டிருந்தது. இந்தப் பிரிவை டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ ஆகியோர் திறந்து வைத்தனர். முற்றிலும் இலங்கையின் நிறுவனம் எனும் வகையில் உள்நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும்

டோக்கியோ சீமெந்து கொழும்பு துறைமுக டேர்மினலின் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட கொள்ளளவு பகுதியின் செயற்பாடுகளை ஆரம்ப வைபவ நிகழ்வுடன் அண்மையில் ஆரம்பித்திருந்தது. சீமெந்து ஜாம்பவானின் 2.5 பில்லியன் ரூபாய் முதலீட்டில் இந்தத் திட்டம் நிறுவப்பட்டிருந்தது. இந்தப் பிரிவை டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ ஆகியோர் திறந்து வைத்தனர். முற்றிலும் இலங்கையின் நிறுவனம் எனும் வகையில் உள்நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்த விரிவாக்க நடவடிக்கை அமைந்துள்ளது.   முழுமையாக இயங்க ஆரம்பித்ததும், கொழும்பு துறைமுகத்தினுள் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து டேர்மினல் ஊடாக வருடாந்தம் 450,000 மெட்ரிக் டொன்கள் எடையுடைய சீமெந்தை கையாளக்கூடியதாக இருக்கும். புதிதாக நிறுவப்பட்ட களஞ்சியசாலை மற்றும் விநியோக கொள்ளளவு விரிவாக்கத் திட்டத்தினூடாக டோக்கியோ சீமெந்தினால் மேல் மாகாணத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு தடங்கலில்லாத சீமெந்து விநியோகத்துக்கான உறுதியளிப்பு வழங்கப்படும்.   தலா 6000 மெட்ரிக் டொன்கள் கொள்ளளவுடைய மூன்று புதிய சீமெந்து களஞ்சியப்படுத்தும் சைலோக்களும் முழுமையாக இயங்க ஆரம்பித்ததும், டோக்கியோ சீமெந்து கொழும்பு டேர்மினலின் கொள்ளளவு மேம்படுத்தல் ஒன்லைனில் இயங்க ஆரம்பிக்கும். டோக்கியோ சீமெந்தின் உள்நாட்டு உற்பத்தித் திறனான 3,000,000 மெட்ரிக் டொன்கள் என்பதற்கு மேலதிகமாக டோக்கியோ சீமெந்தின் மொத்த சீமெந்து இறக்குமதி செயற்பாடுகளை வருடாந்தம் 600,000 மெட்ரிக் டொன்கள் என்பதிலிருந்து 1,000,000 மெட்ரிக் டொன்கள் என்பது வரையில் அதிகரிக்கச் செய்யக்கூடியதாக இருக்கும். மொத்த சீமெந்து செயற்பாடுகளுக்கு அதிகளவு களஞ்சியப்படுத்தல் மற்றும் உள்நாட்டு விநியோகத் திறன் மேம்படுத்தல் என்பவற்றினூடாக சிறந்த உள்நாட்டு பெறுமதி உருவாக்கம் ஏற்படுத்தப்பட்டு, உள்நாட்டு பொதியிடல், விநியோகம் மற்றும் சரக்குக் கையாளல் செயற்பாடுகளுக்கு வலுவூட்டப்படும். இதனூடாக இறுதித் தயாரிப்பாக பொதி செய்யப்பட்ட சீமெந்தை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை குறைக்கப்படும்.   விரிவாக்கத்துக்கமைவாக, டோக்கியோ சீமெந்து கொழும்பு டேர்மினலைச் சேர்ந்த மொத்த சீமெந்து விநியோக செயற்பாடுகளை 30000 மெட்ரிக் டொன்கள் முதல் 60000 மெட்ரிக் டொன்கள் வரை டிசம்பர் மாதத்தில் அதிகரித்துக் கொள்ள முடிந்தது. சந்தையில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் உறுதியான தீர்வை வழங்கியிருந்தமைக்கு மேலாக, நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு போதியளவு சீமெந்தை விநியோகிப்பதற்கு இந்த நடவடிக்கை உறுதியளித்திருந்தது.   நாட்டின் மாபெரும் சீமெந்து உற்பத்தியாளர் எனும் வகையில், இந்தத் தூர நோக்குடைய திட்டமானது, உள்நாட்டின் நிர்மாணத் துறையில் அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்வதற்கு நிறுவனத்தின் தயார் நிலையை உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்தது. மேலும் தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டலையும் நிறுவனம் அண்மையில் மேற்கொண்டிருந்தது. அதனூடாக, மேலும் 1 மில்லியன் மெட்ரிக் டொன் சீமெந்தை அதிகரித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். உள்நாட்டு பெறுமதி சேர்ப்பினூடான, எமது உள்நாட்டு பொருளாதாரத்துக்கு வளமூட்டும் இந்த ஒன்றிணைக்கப்பட்ட முயற்சிகளினூடாக தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளின் முன்னணி பங்காளராக டோக்கியோ சீமெந்து குழுமம் திகழ்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.   புகைப்படம் :  டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ மற்றும் குழும சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷந்த உடவத்த ஆகியோருடன் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட டோக்கியோ சீமெந்து கொழும்பு டேர்மினலில் காணப்படுகின்றனர்.


காப்பகம்

2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec