Filtered Press Release : 2018 Feb


News Image
சூழலுக்கு பாதுகாப்பான நிர்மாணத்தில் புரட்சி: TOKYO SUPER நீரியல் கலவைச் சீமெந்து அறிமுகம்

நிர்மாணத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய வண்ணம் டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி, தனது புதிய சீமெந்து தயாரிப்பான TOKYO SUPER ஐ அறிமுகம் செய்துள்ளது. விசேடமாக வடிவமைக்கப்பட்ட நீரியல் கலவைச் சீமெந்து நிலக்கரிச் சாம்பலைக் கொண்டிருப்பதால் சிறந்த வலிமை மற்றும் நீண்டகால உறுதித்தன்மையை வழங்குகிறது. அத்துடன் 100 நாள் வலிமை பரிசோதனையின் போது உயர்ந்த வலிமையை வழங்கக்கூடிய தயாரிப்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விசேட கலவையைக் கொண்ட இச்சீமெந்தானது காலம் செல்லச் செல்ல வலிமை அதிகரித்துச் செல்லும்

நிர்மாணத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய வண்ணம் டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி, தனது புதிய சீமெந்து தயாரிப்பான TOKYO SUPER ஐ அறிமுகம் செய்துள்ளது. விசேடமாக வடிவமைக்கப்பட்ட நீரியல் கலவைச் சீமெந்து நிலக்கரிச் சாம்பலைக் கொண்டிருப்பதால் சிறந்த வலிமை மற்றும் நீண்டகால உறுதித்தன்மையை வழங்குகிறது. அத்துடன் 100 நாள் வலிமை பரிசோதனையின் போது உயர்ந்த வலிமையை வழங்கக்கூடிய தயாரிப்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விசேட கலவையைக் கொண்ட இச்சீமெந்தானது காலம் செல்லச் செல்ல வலிமை அதிகரித்துச் செல்லும் தன்மையினால் கொங்கிறீட் இடுவதற்கு சிறந்த சீமெந்தாக திகழ்கின்றது. மேலும், நிலக்கரி வலு பிறப்பாக்கலின் பக்கவிளைவாகப் பெறப்படும் உயர்தரச் சாம்பல் ஆனது இச்சீமெந்து தயாரிப்பில் மீள்பாவனை செய்யப்படுவதால், நாட்டின் நிர்மாணத்துறையில் முதன்முறையாக நிலைபேறான மற்றும் சூழலுக்கு நட்பான சீமெந்தாக TOKYO SUPER சீமெந்து காணப்படுகிறது.

TOKYO SUPER ஆனது சீமெந்துக் கைத்தொழிற்துறையில் தன்னிகரற்ற பசுமைத் தயாரிப்பாக முன்னிலை வகிக்கிறது. அத்துடன் உயர் வலிமையை நிர்மாணத்தில் வழங்குவதோடு சல்பேற்றுக்கு தாக்குபிடிப்பது, வெப்ப வெடிப்புகளைத் தவிர்ப்பது மற்றும் கட்டிடத்திற்கு வலுவூட்டிய கம்பிகளை நீண்ட காலம் பாதுகாப்பது போன்ற மேலதிக அனுகூலங்களையும் கொண்டுள்ளது.

TOKYO SUPER ஆனது 42.5N வலிமைப் பிரிவுடன் SLS 1247:2015 கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக தயாரிக்கப்படுகிறது. மேலும் ஐரோப்பிய கட்டளைச் சட்டமான BSEN 197-1:2011 இன் நவீன கட்டிடநிர்மாணிப்புத் திட்டங்களுக்காக வரையறை செய்யப்பட்ட சர்வதேச வலிமைப்பிரிவான CEM IV/A (V) 42.5N–SR வகைக்கும் அமைவாக உள்ளது.

TOKYO SUPER நீரியல் கலவைச் சீமெந்தானது, அதிகூடிய வலிமை கொண்ட சாந்தைத் தரும் சாதாரண போட்லன்ட் சீமெந்தை, அதிஉயர் தரத்தைப் பெறும் விகிதத்தில் ‘Class F’ வகை நிலக்கரிச் சாம்பலுடன் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஏகவீனமாகக் கலந்து தயாரிக்கப்படுவதனால் நீரியல் கலவைச் சீமெந்து வகைகளில் தன்னிகரற்ற சீமெந்தாகத் திகழ்கிறது. பொது பாவனைக்கான சீமெந்து எனும் வகையில், இந்த புதிய தயாரிப்பு, பரந்தளவு நிர்மாணத் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளது. நிலக்கரிச் சாம்பல் சேர்மானமானது ஏனைய சேர்மானங்களுடன் ஒப்பிடுகையில், வேலைக்கு இலகுவான தன்மையையும், அழுத்தமான மேற்பரப்பையும் தருகிறது. அத்துடன் காலம் செல்லச் செல்ல இச்சீமெந்தினால் நிர்மாணிக்கப்படும் கட்டிடங்களின் வலிமை கூடிக்கொண்டு செல்லும் வகையில் இச்சூத்திரமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. நுண்ணிய நிலக்கரிச் சாம்பலானது கொங்கிறீட்டில் வெளியாகும் சுண்ணாம்புடன் பொஸோலானிக் தாக்கத்தில் ஈடுபட்டு சுண்ணாம்பு வெளியாகும் பாதைகளை அடைப்பதன் மூலம் கொங்கிறீட்டின் ஊடுபுகவிடும் தன்மையைக் குறைக்கிறது. அத்துடன் கொங்கிறீட் கலவையில் ஏற்படும் வெப்பத்தைக் குறைத்து வெடிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. இதனால் பாரியளவிலான கொங்கிறீட் வேலைகளுக்கு உகந்த தெரிவாக TOKYO SUPER அமைகின்றது.

நீரியல் கலவைச் சீமெந்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நிலக்கரிச் சாம்பலானது, சல்பேற் மற்றும் குளோரைட்டுகளுக்கு தாக்கு பிடிக்கக்கூடியதாகவும், காபனேற்றத்துக்கு எதிரான தடுப்பாகவும் அமைந்துள்ளது. இதன் காரணமாக நிர்மாண கட்டமைப்பு வலுவிழப்பது குறைக்கப்பட்டு, அதன் உறுதித்தன்மை பேணப்படுகிறது. எனவே கடல் மற்றும் சதுப்புநில சூழல்களுக்கும்;, நீருக்கடியிலான நிர்மாணங்கள் அல்லது வெள்ளம் ஏற்படக்கூய நிலப்பகுதிகள் மற்றும் உயர் சல்பேற் அல்லது குளோரைட் உள்ள நிலப்பகுதிகளுக்கும் TOKYO SUPER ஆனது நல்லதொரு தீர்வாக அமைகிறது. மேலும், இரசாயன கழிவு அகற்றும் கட்டமைப்புகள், நீர்ப்பாசன கட்டமைப்புகள் மற்றும் களஞ்சியத் தாங்கிகள் போன்ற நிர்மாண வேலைகளுக்கும் உகந்ததாக அமைந்துள்ளது. இச்சீமெந்தானது கட்டிடநிர்மாணங்களுக்கு வலுவூட்டிய கம்பிகளை காபனேற்றத்திலிருந்து தடுத்து துருப்பிடித்தலிருந்து பாதுகாப்பதால் கட்டிட நிர்மாணங்கள்; நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய தன்மையைப் பெறுகிறது.

TOKYO SUPER இல் காணப்படும் சாம்பல் காரணமாக, காபனீரொட்சைட் கசிவு 25சதவீதத்துக்கும் அதிகமான அளவு குறைக்கப்படுகிறது. இதனூடாக காபன் வெளிப்படுத்தல் குறைக்கப்படுவதுடன், TOKYO SUPER ஆனது காபன் நடுநிலைநிலைப்படுத்தப்பட்ட, புதுப்பிக்கத்தக்க உயிரியல் வலு மின்சாரத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எனவே இச்சீமெந்தானது, சந்தையில் காணப்படும் சூழலுக்கு பாதுகாப்பான ஒப்பற்ற சீமெந்து என்பதில் எவ்வித ஜயமும் இல்லை. அத்துடன் நிர்மாணத்துறையின் சூழலுக்கு நட்பான தெரிவாக TOKYO SUPER திகழ்கின்றது. கட்டிட நிர்மாணத்துறையில் அதிகரித்துச் செல்லும் கேள்விகளை சூழலுக்கு இசைவான தயாரிப்புக்கள் மூலம் நிவர்த்தி செய்ய, டோக்கியோ சீமெந்து நிறுவனம் தயாராக உள்ளமை, பாதுகாப்பான நிலையான எதிர்காலத்தை உருவாக்கும்.

பச்சை நிற பொதியில் விற்பனை செய்யப்படும் இந்த தயாரிப்பை, நிறுவனத்தின் நாடளாவிய ரீதியில் காணப்படும் நம்பிக்கை மற்றும் உண்மைத் தன்மை கொண்டதும் என அடையாளப்படுத்தப்பட்ட டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பரந்த விநியோகஸ்த்தர் வலையமைப்பிலிருந்து கொள்வனவு செய்ய முடியும்.

டோக்கியோ சீமெந்து குழுமம் நாட்டின் நிர்மாணத்துறைக்குஇ உயர்தரம் வாய்ந்த சீமெந்து மற்றும் கொங்கிறீட் கலவை விநியோகஸ்த்தர் எனும் நம்பிக்கையை வென்ற பெருமைக்குரியது. இந்நிறுவனம் பல்வேறு புத்;தாக்கமான தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. நாட்டு மக்களையும் சூழலையும் பாதுகாத்து வளப்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்ட வணிகத்தை வழங்குவதன் மூலம் கட்டிட நிர்மாணத்துறையில் மறுக்க இயலாத இடத்தை வகிக்கிறது. உயிரியல் வலு செயற்திட்டத்தின் முன்னோடி எனும் வகையில் டோக்கியோ சீமெந்து குழுமம், தனது முழு உற்பத்தி செயன்முறைகளையும் காபன் நடுநிலையான உயிரியல் வலுவை கொண்டு முன்னெடுக்கிறது. தேசத்தின் நீர்சாரா புதுப்பிக்கத்தக்க வலு பங்களிப்பாளராக திகழ்கிறது.

எமது எதிர்கால தலைமுறையினருக்கு பசுமையான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக நிறுவனத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பு ஸ்கைலைன்இ மேம்பாலங்கள்இ புகையிரதப் பாதைகள் மற்றும் உயர்வழிப் பாதைகளின் கட்டிட நிர்மாணப் பணிக்காக உயர்தர சீமெந்து வழங்கப்பட்ட நிலையில், தேசத்தின் வளர்ச்சியின் பங்காளர் எனும் தனது உறுதியான நாமத்தை டோக்கியோ சீமெந்து குழுமம் பதிவு செய்துள்ளது.


காப்பகம்

2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec