Filtered Press Release : 2018 Aug


News Image
கொழும்பின் மையப்பகுதியில் நவீன வசதிகள் படைத்த நிர்மாண ஆய்வு நிலையம் அங்குரார்ப்பணம்

நிர்மாணத்துறையின் கொங்கிறீற் மற்றும் சீமெந்து பரிசோதனை தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக டோக்கியோ சீமெந்து குழுமம், சுயாதீன ஆய்வு நிலையத்தை மெருகேற்றி அங்குரார்ப்பணம் செய்துள்ளது. கொழும்பின் மையப்பகுதியில் இல. 865 1/1> கலாநிதி. டானிஸ்டர் டி சில்வா மாவத்தை, கொழும்பு 9 எனும் முகவரியில் இந்த ஆய்வு நிலையம் அமைந்துள்ளது. உள்நாட்டு சர்வதேச தரங்களுக்கமைய சீமெந்து, கொங்கிறீற் மற்றும் உலர் சாந்து தயாரிப்புகள் பரிசோதனை மற்றும் சான்றளிப்பு ஆகிய நடவடிக்கைகளை இந்த நிலையம் மேற்கொள்ளும். இந்த ISO 17025

நிர்மாணத்துறையின் கொங்கிறீற் மற்றும் சீமெந்து பரிசோதனை தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக டோக்கியோ சீமெந்து குழுமம், சுயாதீன ஆய்வு நிலையத்தை மெருகேற்றி அங்குரார்ப்பணம் செய்துள்ளது. கொழும்பின் மையப்பகுதியில் இல. 865 1/1> கலாநிதி. டானிஸ்டர் டி சில்வா மாவத்தை, கொழும்பு 9 எனும் முகவரியில் இந்த ஆய்வு நிலையம் அமைந்துள்ளது. உள்நாட்டு சர்வதேச தரங்களுக்கமைய சீமெந்து, கொங்கிறீற் மற்றும் உலர் சாந்து தயாரிப்புகள் பரிசோதனை மற்றும் சான்றளிப்பு ஆகிய நடவடிக்கைகளை இந்த நிலையம் மேற்கொள்ளும். இந்த ISO 17025 சான்றளிக்கப்பட்ட ஆய்வுகூடம், நவீன பரிசோதனை சாதனங்களை கொண்டுள்ளதுடன், துல்லியமான மற்றும் காலம் தாமதிக்காத வகையில் கொங்கிறீற் கலவை வடிவமைப்புகள் பற்றிய பரிசோதனைகளை வாடிக்கையாளர்களுக்கு மேற்கொண்டு வழங்கக்கூடிய திறன் கொண்டது.

ஜப்பானின் UBE இன்டஸ்ரீஸ் லிமிட்டெட்டின் சீமெந்து மற்றும் நிர்மாண நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் பொது முகாமையாளரும் நிறைவேற்று அதிகாரியுமான எம்.ஓனோ இந்த நிலையத்தை திறந்து வைத்ததுடன், டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் தலைவர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால், முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், குழும பொது முகாமையாளரும் நிறைவேற்று பணிப்பாளருமான கிறிஸ்டோபர் பெர்னான்டோ, இடைக்கால பொது முகாமையாளர் எம். தயானந்தன் மற்றும் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு. இஸ்மைல் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். டோக்கியோ சீமெந்தின் ஜப்பானிய வியாபார பங்காளரான UBE இன்டஸ்ரீஸ் லிமிட்டெட், இந்த மெருகேற்றத்துக்கு அவசியமான தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கியிருந்ததுடன், நவீன தொழில்நுட்பங்களையும் எதிர்காலத்துக்கு தயாரான ஆய்வுகூட சேவைகளையும் துறைக்கு வழங்கியிருந்தது.



டோக்கியோ சீமெந்து கம்பனியின் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு. இஸ்மைல் இந்த ஆய்வுகூடத்தினால் வழங்கப்படும் சேவைகள் பற்றி விபரிக்கையில், ‘நிர்மாண ஆய்வு நிலையத்தினூடாக நவீன நிர்மாண செயற்திட்டங்கள் தொடர்பான பரந்தளவு பரிசோதனை வசதிகள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் வழங்கப்படுகின்றன. மிகவும் முக்கியமாக ISO 17025 பரிசோதனை நியமங்களின் பிரகாரம் அமைந்துள்ளன. புதிதாக மேம்படுத்தப்பட்ட ஆய்வுகூட நிலையத்தில் காணப்படும் சாதனங்கள் நவீன மயமானவையாக அமைந்துள்ளதுடன், இவற்றில் Rapid Chloride Penetration Tester மற்றும் Water Penetration Tester போன்றன அடங்கியுள்ளன. இதனூடாக கொங்கிறீற்றின் நீடித்த பாவனையை உறுதி செய்து கொள்ள முடியும். எமது தயாரிப்புகள் மீதான சேவைகள் மாத்திரம் எமது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நாம் வழங்காமல், முழு துறைக்கும் துல்லியமான மற்றும் சுயாதீனமான பரிசோதனைகளை எந்தவொரு சீமெந்து மற்றும் கொங்கிறீற் கலவைக்கும் வழங்குகின்றன. தற்போது முதல் இந்த நிலையம் தனது சேவைகளை உள்நாட்டு நிர்மாணத்துறைக்கு வழங்க தயாராகவுள்ளதுடன், இந்த துறை எதிர்கொண்டு வரும் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கவும் முன்வந்துள்ளது’ என்றார்.



கொங்கிறீற் மற்றும் சீமெந்து பரிசோதனை பிரிவில் டோக்கியோ சீமெந்து கம்பனி அதிகளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. 2012 இல் தனது நவீன ஆய்வுகூடத்தை தம்புளையில் அமைந்துள்ள ஏ.வை.எஸ். ஞானம் கொன்ஸ்டரக்ஷன் பயிற்சி நிலையத்தில் நிறுவியிருந்தது. தரக்கட்டுப்பாட்டுக்கு தமது அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இது அமைந்துள்ளது. 2015 இல் ISO 17025 தரப்படுத்தலை பெற்றுக் கொண்ட கொங்கிறீற் மூலப்பொருட்கள் மற்றும் கொங்கிறீற்றின் எந்திரவியல் உள்ளடக்கங்கள் போன்றவற்றை பரிசோதிப்பதற்கான ஒரே ஆய்வுகூடமாக இது அமைந்துள்ளது. நிர்மாணத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியை தொடர்ந்து, கடந்த ஆண்டு இந்த ஆய்வுகூடத்தை கொழும்பு நகருக்கு இடம்மாற்ற நிறுவனம் தீர்மானித்தது. இதனூடாக வளர்ந்து வரும் பல்-தேசிய வாடிக்கையாளர் கட்டமைப்புக்கு தனது சேவைகள் மற்றும் வசதிகளை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த விஞ்ஞானிகள் மற்றும் தகைமை வாய்ந்த நிபுணர்களினால் சகல பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படுவதுடன், வினைத்திறன் வாய்ந்த ஆய்வுகூட சேவைகள் வழங்குநராக ஆய்வு நிலையத்தின் கீர்த்தி நாமம் மேலும் உறுதி செய்யப்படுகிறது. தனது செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பதனூடாக அடுத்த தலைமுறை நிர்மாண தயாரிப்புகளில் பணியாற்றக்கூடியதாக இருக்குமென்பதுடன், ஆய்வு நிலையத்தை துறையில் அங்கிகாரம் பெற்ற பரிசோதனை நிலையமாக தரமுயர்த்துவதாக அமைந்திருக்கும்.



நிர்மாண ஆய்வு நிலையம் கொழும்பின் மையப்பகுதியில் பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ளது. இந்நிலையத்துடன் 0112 445 105 ஊடாக தொடர்பு கொள்ள முடியும். கிடைக்கும் பரிசோதனை வசதிகள் மற்றும் துறைசார்ந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பற்றிய விபரங்களை இந்த தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

News Image
இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர் சம்மேளனத்தின் 2018 வருடாந்த அமர்வில் கலாநிதி. ஷிங்கோ அசமோடோ பிரதான உரை

உலகத்தரம் வாய்ந்த அறிவு பகிர்வு அமர்வுக்கு டோக்கியோ சீமெந்து அனுசரணை இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர்கள் சம்மேளனம் (SSE-SL)> 2018 ஆம் ஆண்டுக்கான தனது வருடாந்த அமர்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வுக்கு டோக்கியோ சீமெந்து குழுமம் அனுசரணை வழங்கியிருந்ததுடன், கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆகஸ்ட் 14ஆம் திகதி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதான ஆய்வு கண்டறிதல்களை பகிர்ந்து கொள்ளல் மற்றும் அறிவு பகிர்வு ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடிய கட்டமைப்பாக வருடாந்த அமர்வு அமைந்துள்ளது. புத்தாக்கம் மற்றும் கட்டமைப்பு

உலகத்தரம் வாய்ந்த அறிவு பகிர்வு அமர்வுக்கு டோக்கியோ சீமெந்து அனுசரணை

இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர்கள் சம்மேளனம் (SSE-SL)> 2018 ஆம் ஆண்டுக்கான தனது வருடாந்த அமர்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வுக்கு டோக்கியோ சீமெந்து குழுமம் அனுசரணை வழங்கியிருந்ததுடன், கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆகஸ்ட் 14ஆம் திகதி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதான ஆய்வு கண்டறிதல்களை பகிர்ந்து கொள்ளல் மற்றும் அறிவு பகிர்வு ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடிய கட்டமைப்பாக வருடாந்த அமர்வு அமைந்துள்ளது. புத்தாக்கம் மற்றும் கட்டமைப்பு பொறியியலை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்படுகிறது. நிர்மாண சமூகத்தைச் சேர்ந்த சிவில் பொறியியலாளர்கள், செயற்திட்ட முகாமையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் உள்நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் என 150க்கும் அதிகமான பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டின் நிகழ்வின் ஏக அனுசரணையாளராக கைகோர்த்திருந்த டோக்கியோ சீமெந்து குழுமம், கொங்கிறீற் தொடர்பில் புகழ்பெற்ற ஆய்வாளராக திகழும் ஜப்பானின், சயிடமா பல்கலைக்கழகத்தின் சிவில் மற்றும் சூழல் பொறியியல் திணைக்களத்தின் இணை பேராசிரியர் கலாநிதி. ஷிங்கோ அசமொடோ அவர்களை நிகழ்வின் பிரதான பேச்சாளராக அழைத்து வந்திருந்தது. இலங்கையின் பொறியியல் கல்விமான்களுடன் நெருக்கமான உறவை பேணி வருவதுடன், ‘வெப்பமான காலநிலையில் காணப்படும் கொங்கிறீற் சிக்கல்கள் மற்றும் தாதுப்பொருட்கள் சேர்மானங்களின் பிரயோகம்’ என்பது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனுர நானயக்கார அவர்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்த ஆய்வின் வெளிப்பாடுகளை நிகழ்வில் பகிர்ந்திருந்தார். ஜப்பான் விஞ்ஞான ஊக்குவிப்பு சங்கம் (JSPS) மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ருஹுண பல்கலைக்கழகம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் ஆய்வு திட்டத்தின் அங்கமாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.



இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் கே.எல்.எஸ். சஹாபந்து, டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு. இஸ்மைல் உடன் காணப்படுகிறார்.

டோக்கியோ சீமெந்து கம்பனியின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு. இஸ்மைல், டோக்கியோ சீமெந்தின் புத்தாக்க பிரிவின் பிரதான செயற்பாட்டாளராக அமைந்துள்ளதுடன், SSE-SL ஒன்றிணைவை விஸ்தரித்து, மூலோபாய துறைசார் பங்காண்மையாக மாற்றியமைப்பதில் முக்கிய பங்கை வகித்து வருகிறார். ஜப்பானுடன் கைகோர்த்து உலகத்தரம் வாய்ந்த அறிவை உள்நாட்டின் நிர்மாணத்துறையின் நிபுணர்களுக்கு பெற்றுக் கொடுப்பதையிட்டு டோக்கியோ சீமெந்து குழுமம் பெருமிதம் கொள்கிறது.



பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் பொறியியலாளர். கலாநிதி. நிஹால் சோமரட்ன A அமர்வில் உரை நிகழ்த்துகிறார்.

இந்த ஆண்டு இடம்பெற்ற அமர்வின் போது கட்டமைப்பு பொறியியல் துறையைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் மற்றும் கல்விமான்களினால் பதினொரு மூலோபாய கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்த ஆய்வு அடிப்படையிலான புத்தாக்கங்களினூடாக, எமது நிர்மாணத்துறைக்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்படும் என்பதுடன், தேசிய அபிவிருத்திக்கும் பங்களிப்பை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். அமர்வுகளில் சிவில் பொறியியல் திணைக்களத்தின் முன்னாள் தலைமை அதிகாரி பொறியியலாளர் கலாநிதி. நிஹால் சோமரட்ன, பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியாளர் கலாநிதி. உதய திசாநாயக்க, டோக்கியோ சுப்பர்மிக்ஸ் பிரைவட் லிமிட்டெட் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஜனக பெரேரா ஆகியோர் இணைந்து, டோக்கியோ சுப்பர்மிக்ஸ் பயன்படுத்துவதன் அனுகூலம் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தனர். இலங்கையில் ரெடி-மிக்ஸ் கொங்கிறீற் விநியோகத்தில் பாரிய விநியோகத்தராகவும், நாடு முழுவதிலும் 11 பொதியியல் ஆலைகளையும் கொண்டுள்ளது.

SSE-SL என்பது, நிர்மாணத்துறையின் கட்டமைப்பு பொறியியலாளர்கள் மற்றும் இதர நிபுணர்கள் மத்தியில் புத்தாக்கமான கொள்கைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான அறிவை மேம்படுத்துவதில் தன்னை அர்ப்பணித்துள்ள நிபுணத்துவ அமைப்பாக திகழ்கிறது. சம்மேளனத்தின் அங்கத்தவர்கள், பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்களில் ஆலோசகர்களாக ஈடுபட்டுள்ளதுடன், தொழிற்துறையின் கொள்கை வடிவமைப்பில் பெருமளவு பங்களிப்பை வழங்கி வழங்கி வருகின்றனர். நிபுணத்துவ அபிவிருத்தியில் இந்த சம்மேளனம் முக்கிய பங்கை வகிப்பதுடன், இலங்கை மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் நிர்மாணத்துடன் தொடர்புடைய அறிவை பகிர்ந்து கொள்வதற்கு பொருத்தமான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.


காப்பகம்

2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec