
திருகோணமலையில் உள்ள டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் பசுமை கட்டிட சான்றிதழுடன் கூடிய அதிநவீன தொழில்நுட்ப கட்டிடம் ரூ. 500 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டது.
இப்புதிய தொழில்நுட்ப கட்டிடம் கேட்போர் கூடம் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களின் உள்ளக பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான மாநாட்டு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.