ஒரு நிறுவனமாக, எங்கள் வளங்களின் தடம் குறித்து நாங்கள் நன்கு அறிந்திருப்பதுடன், மேலும் இயற்கை அழகு பொருந்திய எமது நாடு கொண்டுள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான பல முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். இச்செயற்பாட்டின் முன்னோடியாக எமது நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட, அவரால் உருவாக்கப்பட்ட டோக்கியோ சூபர்மிக்ஸ் தயார் நிலை கொங்க்ரீட் தொழிற்சாலைகளில்; கழிவு நீர் மறுசுழற்சி திட்டத்தை செயல்படுத்துவது நாம் மேற்கொண்டுள்ள ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இந்த கழிவு நீர் மறுசுழற்சி திட்டமானது ஒரு விரிவான உற்பத்திக் கழிவு முகாமைத்துவ திட்டத்தின் பகுதியாவதுடன், தற்போது திருகோணமலை, கண்டி, மீத்தொட்டமுல்ல மற்றும் பேலியகொட ஆகிய நான்கு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் நாடுபூராகவும் உள்ள அனைத்து தயார் நிலை கொங்கிரீட் தொழிற்சாலைகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு கொங்கிரீட் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் அடிப்படையில் ஈரமாக்குதல், கொங்கிரீட்; கலத்தல் மற்றும் கொங்கிரீட்; இறக்கிய பின் போக்குவரத்து டிரக் மிக்சர்களின் உள்ளடக்கிய தொட்டிகளை கழுவுதல் என தினசரி சராசரியாக 30,000 லீட்டர் நீர் பயன்படுத்தப்படுகின்றது. ஓரு ஆண்டிற்கு 200 வேலை நாட்களில் 11 தொழிற்சாலைகளில் சராசரி நுகர்வு முறைகளின் அடிப்படையில் மொத்தம் 66 மில்லியன் லீட்டராக அந்த அளவு பதிவாகின்றது. இவ்வாற உபயோகிக்கப்படும் நீரில் குறைந்தது 20 வீதம் தானாகவே கழிவு நீராக மாறுகின்றது.
எமக்கு சவாலாக அமையும் பகுதியாக இது அடையாளம் காணப்பட்டதால், எங்கள் உள் வள பயன்பாட்டில் முன்னேற்றம் தேவை என்பதை அறிந்த நாம் நீரை மறுசுழற்சி செய்ய பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘சுரங்க குழி நீர் முறையை’ செயல்படுத்தினோம். இக் கழிவு நீர் முகாமைத்;துவ முறையைப் பயன்படுத்துவதன் மூலம் 90 வீதம் தண்ணீரை மீண்டும் பயன்படுத்த முடிந்ததுடன் இதில் கொங்கிரீட் கலவைக்கு ஆண்டுக்கு சுமார் 12 மில்லியன் லீட்டரும், மீதமுள்ளவை நெருக்கமான சுழற்சியில் சலவை செயல்பாட்டிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் புதிய நீரின் நுகர்வு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், செயல்பாட்டு செலவினங்களின் அடிப்படையில் மில்லியன் கணக்கான ரூபாய்களை சேமிக்கக்கூடியதாகவும் நமது சுற்றுச்சூழல் வளங்களின் பாதுகாப்பதில் பாரிய பங்களிப்பையும் எம்மால் வழங்கமுடிந்தது.
கொங்க்ரீட் மற்றும் சிமேந்து கசடு வடிவில் உருவாகும் திடக்கழிவுகள் கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் மூலம் பயன்படுத்தப்படுவதுடன் கொங்க்ரீட் மாதிரிகளைக் கொண்டு பவளப் பந்துகளை உருவாக்கி; பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவை பவளப்பாறை மறுவாழ்வு திட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன.