டோக்கியோ சீமெந்து பணிப்பாளர் சபைக்கு இரு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

டோக்கியோ சீமெந்து பணிப்பாளர் சபைக்கு இரு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

Spread the love
அனுபவம் வாய்ந்த வங்கியியலாளரான ஜெகன் துரைரட்னம் மற்றும் மிச்சியோ மட்சுகா ஆகியோர் டோக்கியோ சிமென்ட் கம்பனி (லங்கா) பிஎல்சியின் பணிப்பாளர் சபையில் புதிய பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வங்கியியல் துறையில் துரைரட்னம் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். கொமர்ஷல் வங்கியில் 36 வருட காலம் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றுள்ளார். 2012 ஏப்ரல் முதல் 2014 ஜுலை வரை கொமர்ஷல் வங்கியின் பணிப்பாளராக செயலாற்றியிருந்ததுடன், 2014 ஜுலை முதல் 2018 ஜுலை மாதம் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையில், கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயலாற்றியிருந்தார். கொமர்ஷல் வங்கியில் அவர் மேலும் பல சிரேஷ்ட பதவிகளை வகித்திருந்தார். அதில், பிரதம செயற்பாட்டு அதிகாரி, பிரதி பொது முகாமையாளர் – சர்வதேசம், உதவி பொது முகாமையாளர் – சர்வதேசம் மற்றும் இறக்குமதிகளுக்கான தலைமை அதிகாரியாக செயலாற்றியிருந்தார். கொமர்ஷல் டிவலப்மன்ட் கம்பனி பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளராகவும், லங்கா ஃபினான்ஷியல் சேர்விசஸ் பியுரோ லிமிடெட்டின் பணிப்பாளராகவும் செயலாற்றியிருந்தார். துரைரட்னம் தற்போது, DFCC பாங்க் பிஎல்சியின் நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன தவிசாளராக திகழ்கிறார். ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் பிஎல்சி, செலிங்கோ லைஃப் இன்சூரன்ஸ் லிமிடெட், எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் மற்றும் என்விரோ சொலூஷன்ஸ் (பிரைவட்) லிமிடெட் ஆகியவற்றின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகவும் திகழ்கிறார். அத்துடன், டோக்கியோ சிமென்ட் கம்பனி (லங்கா) பிஎல்சியின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக மிச்சியோ மட்சுகா நியமிக்கப்பட்டுள்ளார். UBE Singapore Pte. Ltd. இன் பிரேரிக்கப்பட்ட மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக இவர் திகழ்கிறார். முன்னர் இந்த நிலையை வகித்த ஷுய்ச்சி நகமொடோவுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மட்சுகா தற்போது, UBE Singapore Pte. Ltd. இன் முகாமைத்துவ பணிப்பாளராக திகழ்கிறார். இவர் ஜப்பானின், சொஃபியா பல்கலைக்கழகத்தில் கலை இளமானிப் பட்டத்தை பெற்றுள்ளதுடன், அமெரிக்காவின், பப்சன் கல்லூரியில் முதுமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். வணிக அபிவிருத்தி மற்றும் சர்வதேச சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் இவர் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், பொது முகாமையாளர் மற்றும் செயற்திட்ட முகாமையாளர் போன்ற நிலைகளையும் வகித்துள்ளார். இந்த நியமனங்களுடன், டோக்கியோ சிமென்ட் கம்பனி (லங்கா) பிஎல்சியின் பணிப்பாளர் சபையில், தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி, முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், கலாநிதி. இந்திரஜித் குமாரசுவாமி, ஏ.டி.பி. தல்வத்தே, ரவி டயஸ், டபிள்யு. சி. பெர்னான்டோ, பிரவீன் ஞானம், ஏ.ஏ.லுடோவிக், மனோ சேகரம், மிச்சியோ மட்சுகா மற்றும் ஜெகன் துரைரட்னம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். உயர் தரம் வாய்ந்த சீமெந்து, கொங்கிறீட் மற்றும் சீமெந்து சார் புத்தாக்கமான தயாரிப்புகளை இலங்கையில் உற்பத்தி செய்யும் மாபெரும் உற்பத்தியாளராக டோக்கியோ சீமெந்து குழுமம் திகழ்கிறது. உள்நாட்டின் நிறுவனமாக திகழும் டோக்கியோ சீமெந்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றுவதுடன், உள்நாட்டு பெறுமதி உருவாக்கத்தினூடாக தேசிய பொருளாதாரத்தை வளமூட்டிய வண்ணமுள்ளது. உள்நாட்டு நிர்மாணத்துறையில் நன்மதிப்பை வென்ற நிறுவனமாக திகழும் டோக்கியோ சீமெந்து குழுமம், தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளின் முன்னணி பங்காளராகவும் திகழ்கிறது.